ஹாட் சிப்ஸ் நிறுவனர் : பேராசிரியராக இருந்து தொழிலதிபர் ஆனேன்   
சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் படித்த பேட்டியை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்.
     ஹாட் சிப்ஸ் ஹோட்டலின் நிறுவனர் வாசுதேவன்
       நான் வணிகவியல் துறை பேராசிரியர் என்பதால் உழைப்பால் உயர்ந்த தொழிலதிபர்களின் கட்டுரையை அடிக்கடி வகுப்பில் கூறுவேன்.இந்தக் கதைகளை,நாமே கடைப்பிடிக்கலாம் எனத் தோன்றியது.உடனே பகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆரம்பித்தேன்.

     என் வீட்டுக்கு அருகில் ஒரு மருந்துக்கடை விற்பனைக்கு வந்தது.அதை வாங்கி வெற்றிகரமாக நடத்தினேன்.அடுத்து இன்னொரு மருந்துக்க்டை,பல்பொரு அங்காடி என விரிவுப்படுத்தினேன்.இதில் எதிர்ப்பார்த்த அளவு ஏற்றமில்லை.
         வேறு எதாவது செய்ய வேண்டும் என யோசித்தேன்.என் மருந்து கடை ஒட்டிய சந்தில் ஒரு சிப்ஸ் கடை இருந்தது. அந்த கடையில் சிப்ஸ் தயாரித்த விதம் வாடிக்கையாளர்களை விளம்பரம் இல்லாமலே வரவழைக்கிறது என அறிந்து,அதே போல் ஒரு சிப்ஸ் கடையை நுங்கம்பாக்கத்தில் திறந்தேன்.எனக்கான திருப்புமுனை அமைந்தது இந்த சமயம் தான்.
    இந்த சிப்ஸ் கடையில் வாடிக்கையாளர் எதிரில் உடனே தயாரிக்கக்கூடிய நொறுக்குத் தீனிகளைத் தந்தோம்.குறிப்பாக வட இந்திய உடனடி சாட் உணவுகளைத் தந்தோம். இதில் நல்ல வருமானமும் பெயரும் கிடைக்கவே,1992 ல் நான் பார்த்து வந்த ஆசிரியர் வேலையை விட்டு முழு நேர பிசினஸ் மேன் ஆனேன்.
    முதல் ஓட்டலை நுங்கம்பாக்கத்தில் ஆரம்பித்தேன். இதில் வாடிக்கையாளர் சுயசேவையை ஆரம்பித்தேன். இதன் மூலம் கடையின் பணியாளர் எண்ணிக்கை குறைந்தது.வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் உணவைத் தர முடிந்தது.இளைய தலைமுறையின் ரசனைக்கேற்ப ஓட்டலை நடத்த ஆரம்பித்ததிலிருந்து ஓட்டல் வேகமாக வளர்ந்தது.
    முதலில் சென்னையில் ஆரம்பித்து,பெங்களூரு,சிங்கப்பூரைத் தொடர்ந்து,தற்பொழுது துபாய் வர செல்ல திட்டமிட்டு வருகிறோம்.என் 18 ஓட்டலின் ஆண்டு வருமானம் 50 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது.நிறுவனத்தில் 1500 பேர் வேலை செய்கின்றனர்.
நன்றி: தினமலர்

6 comments:

நல்ல பதிவு...

ஒரு தொழிலை தெரிந்து செய்வது ஒரு விதம். அதை புரிந்து செய்வது வெற்றியின் ரகசியம்...

காலத்திற்கு ஏற்ப நாம் நம்மை மாற்றிகொண்டால் நிச்சயம் வெற்றி கிட்டும். அதே சமயம் இறந்த காலத்தையும் சற்று திரும்பிபார்க்க வேண்டும்...

உழைத்தால் நிச்சயம் வாழ்வில் வெற்றி பெறலாம் இவரை போல...

வாழ்த்துக்கள்...

ஆசிரியர் நம்மை ஆச்சரியப்படுத்திவிட்டார் . வாழ்த்துக்கள் , நன்றி

அருமை.
வாழ்த்துகள்.

என்ன ஒரு மன உறுதி ... & தன்னம்பிக்கை... சூப்பர்...

உங்கள் கருத்துக்களை ஈட்டு ஊக்கமளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More