அப்பாவிகளை குறிவைக்கும் ஆன்லைன் ஜாப்ஸ்.

இணையத்தில் இப்போது எங்கே பார்த்தாலும் ஆன்லைன் ஜாப் வேலைகள் விளம்பரங்கள்தான் கண்ணில் படுகின்றன. இவற்றில் 99 சதவிகிதம் போலியானவை. அத்திப்பூத்தாற்போல் லட்சத்தில் ஏதோ ஒன்றோ இரண்டோதான் உண்மையான ஆன்லைன் வேலைகள் இருக்கின்றன. இத்தகைய விளம்பரங்களை நம்பி அப்பாவிகள், முக்கியமாக வேலையில்லாத இளைஞர்கள், தங்கள் பணத்தையும், நேரத்தையும் இழந்து தவிப்பதை ஆங்காங்கே காண முடிகிறது.

ஆன்லைன் ஜாப்பில் வீட்டிலிருந்தபடியே தினமும் ரூ.1000 முதல் ரூ.5000 வரை சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்களை நம்பி, நாம் அதில் கிளிக் செய்து உள்ளே சென்று பார்த்தால், கவர்ச்சிகரமான, ஒரே மாதத்தில் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து விடலாம் என்று நம்ப வைக்கும் வாசகங்கள் நமக்கு கிடைக்கும். கடைசியில் இந்த வேலையில் சேருவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நம்மிடம் இருந்து பெறுவதற்கான குறிப்பு இருக்கும். அதுவும் இன்று ஒருநாள் மட்டுமே இந்த தொகை என்றும் நாளை முதல் தொகை அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருக்கும். 

நாம் உடனே இந்த விளம்பரத்தை நம்பி, அவர்கள் குறிப்பிட்டிருக்கும் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தியபின், பெயருக்கு ஒரு வேலையை கொடுப்பார்கள். மாதம் ரூ.5000 சம்பளத்தில் ஒரு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் செய்யும் ஒரு சாதாரண வேலையைத்தன் கொடுப்பார்கள். அதற்குத்தான் தினமும் ஆயிரம் ரூபாய் வருமானம் என்று கூறுவார்கள். ஒரு மாதம் கழித்து பார்த்தால், நீங்கள் செய்த வேலையில் பிழைகள் அதிகமாக இருப்பதால், உங்களுக்கு பேமெண்ட் கிடையாது என்று தகவல் வரும். அல்லது அவர்களிடம் இருந்து எவ்வித தகவலும் வராது.  நாம் பணத்தையும் இழந்து, ஒரு மாதம் நாம் உழைத்த உழைப்பும் வீண் என்பது காலங்கடந்தே நமக்கு புரியும்.

சமீபத்தில் எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. அதில் ஆன்லைன் ஜாப் குறித்த ஒரு மீட்டிங் சென்னையில் நடக்க உள்ளதாகவும், அதில் கலந்து கொண்டு  மாதம் ரூ.50,000 வரை வருமானம் கிடைக்கும் வாய்ப்பை பெற்று பயனடையவும் என்றும் குறிப்பிட்டிருந்தது. நானும் ஆவலோடு சென்று கலந்து கொண்டேன். அவர்கள் குறிப்பிட்ட வேலையை, சாதாரண எட்டாவது படிக்கும் ஒரு மாணவன் கூட மிக எளிதில் செய்துவிடுவான். அவ்வளவு எளிதான வேலை. இதற்கா மாதம் ரூ.50,000 என நான் யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் ,கடைசியில் அவர்களின் உண்மை சொரூபத்தை காட்ட ஆரம்பித்தார்கள். 

இந்த வேலையில் சேர்வதற்காக ஒரு server ஒன்றை ஒவ்வொருவரும் வாங்க வேண்டும் அதற்கு ரூ.6,000 முதலீடு செய்ய வேண்டும் என்று கூறினார்கள். இதை வாங்கி ஆன்லைன் வேலையை ஆரம்பித்தால், மாதம் ரூ,50000 மிக எளிதாக சம்பாதிக்கலாம் என மிகவும் கவர்ச்சிகரமாக ஒரு பெண்மணி உயிரைக் கொடுத்து பேசிக்கொண்டு இருந்தார். நான் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்துவிட்டேன். இதுபோல பல போலி நிறுவங்கள் சென்னையில் காணப்படுகிறது.  பொதுமக்கள் யாரும் இவ்வகை விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம் என்பதற்காகவே இந்த பதிவு.

உண்மையிலேயே ஆன்லைனில் வருமானம் தரக்கூடிய சில இணையதளங்கள் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் மிகக்குறைந்த அளவு வருமானம் தரும் தளங்களே ஆகும்., ஆன்லைன் ஜாப் செய்து ஒரே நாளில் லட்சாதிபதி, கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என நினைத்தால், நம்முடைய பணமும், உழைப்புதான் வீணாகும் என்பதை தயவுசெய்து அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

எனவே இந்த பதிவை படிக்கும் அனைவரும் தயவுசெய்து  போலியான ஆன்லைன் ஜாப் விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். ஆன்லைன் ஜாப் கொடுக்கும் விளம்பரங்கள் அனைத்துமே நம்மிடம் இருந்து பணம் கறப்பதிலேதான் குறியாய் இருப்பார்கள். அவர்களிடம் இருந்து விழிப்புணர்வுடன் இருந்து நம்முடைய பணத்தையும், நேரத்தையும், உழைப்பையும் காப்பாற்றிக் கொள்வது நமது கையில்தான் இருக்கின்றது.6 comments:

உண்மையிலேயே ஆன்லைனில் வருமானம் தரக்கூடிய சில இணையதளங்கள் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் மிகக்குறைந்த அளவு வருமானம் தரும் தளங்களே ஆகும்., ஆன்லைன் ஜாப் செய்து ஒரே நாளில் லட்சாதிபதி, கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என நினைத்தால், நம்முடைய பணமும், உழைப்புதான் வீணாகும் என்பதை தயவுசெய்து அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.


நூற்றுக்கு நூறு உண்மை. நல்ல பதிவு

நண்பர்களே தெரிந்துகொள்ளுங்கள் நல்லசெய்தி.

எங்கு பார்த்தாலும் திருடர்கள் தான்..நல்ல விளிப்புணர்வு நண்பரே நன்றி..

இன்றைய நிலையில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்...

திருடர்கள் ஜாக்கிரதை...

நல்ல பதிவு உங்களுக்கு 50,000 என் மொபைலுக்கு 30,000 என்று ஒரு விளம்பரம் வந்தது...உங்கள் பதிவால் தப்பித்துவிட்டேன் என்று எண்ணுகிறேன்...தொடர்ந்து இது போன்ற செய்திகளை பதியுங்கள்

பெரும்பாலும் ஆன்லைன் ஜாப் விளம்பரத்தில் படித்தவர்களே அதிகம் ஏமாறுகிறார்கள். அவர்களுக்கு முடிந்தவரை விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பதிவு.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More