நான் பதிவர் அறிமுகம் : பாட்டி சொல்லும் கதைகள்


வணக்கம் தோழமைகளே.....

இன்று நான் பதிவர் அறிமுகத்தில் நாம் பெருமையுடன் அறிமுகப்படுத்தும் பதிவர் ருக்மணி சேஷசாயீ. இவரது வலைப்பூ பாட்டி சொல்லும் கதைகள் மற்றும் மணிமணியாய் சிந்தனை.
இவரை பற்றி.....


     ஒரு வருடம்,  இரண்டு வருடங்கள் இல்லை சுமார் ஐம்பது வருடங்களாக இந்த எழுத்து துறையில்  உலா வரும் நம்முடைய பதிவுலக ராணி, அம்மா ருக்மணி சேஷசாயி அவர்களை பாதம் தொட்டு வணங்குகிறோம்.
   இவர் இந்த ஐம்பது வருடங்களில், பல துறைகளில் தனது திறமையை வெளிபடுத்தி, செயற்கரிய பல நல்ல கதைகளை பதிந்து வருகிறார். சிறு கதைகள், கவிதைகள், நாடங்கள் போன்றவற்றை நல்ல கருத்துக்களுடன் எழுதி வருகிறார். தமிழில் எம்.ஏ., பட்டம் பெற்ற இவர் சுமார் முப்பது வருடங்கள் ஆசிரியையாக பணியாற்றியவர். ஆகாசவாணியிலும், தொலைகாட்சியிலும் இவரது பல படைப்புக்கள் வெளிவந்துள்ளன. 


மேலும் நாவல் எழுதுவதிலும் வல்லவர். இவரது சிறுவர்களுக்கான படைப்புகள் சிறப்பு வாய்ந்தவை. சிறுவர்களுக்கென இவர் கிட்டத்தட்ட இருபதிற்கும் மேல் பதிவுகள் பதிந்துள்ளார். பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம் என்று எல்லா துறையிலும் தனக்கென ஒரு முத்திரையை படைத்துள்ளார்.இவர் வருங்கால தலைமுறையினருக்காக ஒரு இணையதளம் அமைத்து, அதில் அவர்களுக்கு தேவையான பல நல்ல சுவையுள்ள கருத்துக்களை பகிர்ந்துள்ளார்... திருக்குறள் நடையில் இவர் படைக்கும் பதிவுகள் மிகவும் அற்புதமாக இருக்கிறது. படிக்கத்தூண்டும் நடையில் பல நல்ல கருத்துக்களை உள்ளடக்கிய பதிவுகள் ஏராளம்..நம்மை போன்ற வளரும் பதிவர்களுக்கு ஒரு முன்னோடியாக இருக்கிறார் இந்த அம்மையார்...பணிக்கு செல்லும் பெண்களின் நிலைமையை பற்றி இவரின் ஆதங்கம் இவரது படையில் வெகு இயல்பாக தெரியும்...உழைக்க வேண்டிய வயதில் உழைக்காமல் ஓய்வு எடுக்கும் இன்றைய தலைமுறையினர் மத்தியில், ஓய்வெடுக்க வேண்டிய வயதிலும் கூட இவ்வளவு கடின உழைப்பை பார்த்தால் இவரது பாதம் தொட்டு வணங்குதல் நலம்....நம்மை போன்ற வளரும் தலைமுறையினருக்கு இவரின் ஆசிகள் என்றும் வேண்டும்...இவரது பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....மன்னிக்கவும் வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்...அம்மா, கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் தர வேண்டுகிறோம்....இன்று நான் பதிவர் அறிமுகத்தில் உங்களை அறிமுகம் செய்ததில் நமது தொழிற்களம் மிகவும் பெருமைகொள்கிறது அம்மா.மேலும், மேலும் பல நல்ல படைப்புக்களை பதியுங்கள்....நாங்களும் கற்றுக்கொள்கிறோம்,  கடின உழைப்பை உங்களிடமிருந்து...என்றும் உங்கள் வெற்றி பயனத்தில் உங்களுடன்...நமது தொழிற்களம்.
5 comments:

சிறப்பான அறிமுகம். வாழ்த்துகள் ருக்மணி அம்மா. சாரி வணக்கங்கள்

This comment has been removed by the author.

திருமதி ருக்மிணி செஷசாயியைப் பற்றிய வெகு சிறப்பான அறிமுகம்.

போன தலைமுறை, இந்த தலைமுறை, எதிர்கால தலைமுறைக்கும் இவரது அறிமுகம் தேவையான ஒன்று!

இவரது சிறப்பான சேவை தொடர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!


எழுத்துப்பிழைகள் காரணமாக மேற்கண்ட கருத்துரையை அகற்றி இருக்கிறேன்.

அறிமுகத்திற்கு நன்றி...

வாழ்த்துக்கள் அம்மா

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More