காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...

காலை தேநீர்....

 தொடுவானிலே இளஞ்சூரியன் மெல்ல தன் தலை நீட்ட...
        சேவலும் கம்பீரமாய் அதன் கூக்குரலிட, 
அதைக்கேட்ட வண்ணப்பறவைகளோ வானில் வட்டமிட... 
       நான் கேட்டேன் எங்கே என்று??  
பதில் சொன்னது... 
      தொழிற்களம் என்று ஒரு வலைப்பூ உண்டு...
வாழ்கைக்கு தேவையான பல வாசகங்கள் அதில் உண்டு...
       பதிவிற்கென்று ஒரு குழுவுண்டு...
அக்குழுவிலே தமிழில் எழுதும் தமிழ் பதிவர்கள் பலர் உண்டு...


       அப்பதிவர்களின் பதிவை காணவே செல்கிறோம் என்று...இத்தகைய சிறப்பு வாய்ந்த நம் பதிவர்களை காலை தேநீரின் வாயிலாக சந்திப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்... 

சிந்திக்க, சிந்தைக்கு சில சிந்தனை துளிகள்...


  • கனவுகளை நேசியுங்கள். ஆனால்- நிஜத்தோடு நெருங்கி வாழுங்கள்.
  • வளமான் காலத்தில் நண்பர்கள் நம்மை தெரிந்து கொள்கிறார்கள். வறுமை காலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்துகொள்கிறோம்.
  • உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள்; பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள்.
  • நீ வாழ்வில் உயர உயர, உன் தலை தாழ்ந்தே (பணிவில்) இருக்கட்டும் உன் கை உயர்ந்தே (கொடுக்க) இருக்கட்டும்.
  • உன்னால் கடைப்பிடிக்க முடியாத நீதிகளை, நீ உலகுக்கு உபதேசம் செய்யாதே.
பதிவெழுத நம்மை ஊக்குவிப்பதே நமக்கு கிடைக்கும் பின்னூட்டம் தான், எனவே நிறை குறைகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்....

என்றும் உங்களுடன்,
நமது தொழிற்களம்...
                

8 comments:

நல்ல சிந்தனை கருத்துகள்... நன்றி...

கரண்ட் கட் : முன்பு 10 அல்லது 13 மணி நேரம் இருக்காது...

இப்போது 4 அல்லது 5 மணி நேரம் தான் இருக்கிறது...

சென்னை எப்படிங்க...?

எல்லா ஊர்லயும் இப்படித்தானுங்க...

கரன்ட் வலியது...

\\"தொடுவானிலே இளஞ்சூரியன் மெல்ல தன் தலை நீட்ட...
சேவலும் கம்பீரமாய் அதன் கூக்குரலிட,
அதைக்கேட்ட வண்ணப்பறவைகளோ வானில் வட்டமிட...
நான் கேட்டேன் எங்கே என்று??"//

மிக அருமையான வரிகள் .......பகிர்வுக்கு நன்றி.......
நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பிரியா...


செந்தமிழில் மிக அழகாக எழுதி இருக்கிறிர்கள்...உங்கள் பகிர்வுக்கு நன்றி...

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

அழகிய தமிழில் மிகவும் அற்புதமாக இருக்கிறது...

வாழ்த்துக்கள்...

>>>நீ வாழ்வில் உயர உயர, உன் தலை தாழ்ந்தே (பணிவில்) இருக்கட்டும் உன் கை உயர்ந்தே (கொடுக்க) இருக்கட்டும்<<<

சூப்பர்...

BY THE WAY கவிதையும் அருமை! :)

followers widget இல்லாததால் தொழிற்களத்தை பின்தொடர்வதில் சிரமத்தை உணர்கிறேன்!

எல்லோரும் எப்படி பின்தொடர்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை..தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்!

புரிதலுக்கு நன்றி!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More