கணினியில் சிதம்பர ரகசியம்

  கணினியில் சிதம்பர ரகசியமா? என்ற வியப்பா உங்களுக்கு. ஆம் நம்மில் பலர் ரகசிய கோப்பு திரட்டி (FOLDER) உருவாக்குவது பற்றி அறிந்து இருப்பீர்கள்.

 ஆனால்  அவ்வாறு நீங்கள் உருவாக்குபவற்றை கணினியில் கொஞ்சம் விஷயம் தெரிந்தவர் எளிதில் பார்த்துவிடுவார்.

  நான் உங்களுக்கு சொல்லிதர போவதோ, நீங்கள் மட்டுமே பார்க்க முடியும் வகையிலான கோப்பு திரட்டி (FOLDER).

பார்க்கலாமா... வாருங்கள் தமிழர்களே...!


1. முதலில் FOLDER ஒன்றினை நீங்கள் விரும்பும் இடத்தில் உருவாக்க, 
      RIGHT CLICK->NEW->FOLDER


     
2. அதில் இருக்கும் NEW FOLDER என்ற வார்த்தையை நீக்கவும்.
                                                               

3. விசைப்பலகையில் ALT விசையை அழுத்திக்கொண்டே 255 என்ற எண்ணை     
    அழுத்தவும். இப்பொழுது பெயரிடும் இடம் மறைந்திருக்கும்.(ALT-KEY+255)

4. பின்னர்  FOLDER-ஐ RIGHT CLICK செய்து PROPERTIES என்ற பொத்தானை அழுத்தவும்.

5.PROPERTIES WINDOW-ல் CUSTOMIZE என்ற பொத்தானை அழுத்தவும்.

6. பின்னர் CHANGE ICON என்ற பொத்தானை அழுத்தி திறக்கும் சாளரத்தில்   
   (WINDOW) வெற்றிடத்தை தேர்வு செய்யவும். (பார்க்க :SELECT THIS என்று  
   குறிப்பிட்டுளேன்) , OK என்ற பொத்தானை அழுத்தி மூடவும் .
                                             

இதோ ரகசிய FOLDER தயார். 

இது உங்கள் கண்களுக்கே தெரியாது, பார்க்க F5 என்ற பொத்தானை விசைப்பலகையில் அழுத்திக்கொண்டே இருந்தால், மறைந்திருக்கும் FOLDER மிளிரும். நீங்கள் அந்த இடத்தில் சொடுக்கி நுழைய வேண்டியதான்.

யாரும் இதனை தேடி எடுக்க முடியாது. மிக பாதுகாப்பானது.

இது தாங்க கணினியில் சிதம்பர ரகசியம், 

செய்து பாருங்கள், சந்தேகம் எதுவானாலும் கேளுங்கள்....
                                                               
                                                          நன்றி 
19 comments:

செழியா பதிவுக்கு பெர்மலிங் உபயோகிச்சிருக்க.. நல்ல பையன்..

Custom Permalink அப்படின்னா என்னனு யாராவது பின்னூட்டத்தில் கேட்டாங்கனா பதில் சொல்லு,,,

நல்ல பகிர்வு,,

கண்டிப்பா சொல்றேன், ஆனா நீங்க என் வலைப் பூவில் " செழியன்... எப்படிப்பா..? ம்ம்ம் ம்ம்ம்,,, " என்று கருத்து பதிவிட்டு உள்ளீர்கள் நேற்று... ஏன் என்று எனக்கு புரிய வில்லை, சொல்லுங்களேன். நன்றி

நீ தொழிற்களத்தின் செல்ல குழந்தை அதான்.. ம்ம்ம்.. ம்ம்ம்..?

உங்களுக்கு இந்த குழந்தையின் நன்றி

இந்த பதிவில் 3 ம் பாய்ன்ட்
//3. விசைப்பலகையில் விசையை அழுத்திக்கொண்டே 255 என்ற எண்ணை
அழுத்தவும். இப்பொழுது பெயரிடும் இடம் மறைந்திருக்கும்.(ALT-KEY+255)//

என்று பதிவாகி உள்ளது திருத்தவும்.

விளக்கம் அருமை... பலருக்கும் பயன் தரும் பகிர்வு நண்பரே...

நல்லா இருக்கு, எத்தனை நாள் தான் கடவு சொல் போட்டு மறைக்கறது? இதை முயற்சி பன்னி பார்க்கறேன், ப்கிர்ந்தமைக்கு நன்றி

விஜயன் அண்ணா, திருத்திவிட்டேன், நன்றி

This comment has been removed by the author.

தனபாலன் அண்ணா, நன்றி,பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் நண்பர்களுடன்

This comment has been removed by the author.

கதிர் அண்ணா, முயற்சி செய்யுங்கள், சந்தேகம் என்றல் கேளுங்கள், பகிருங்கள் நண்பர்களுடன் நன்றி

ராஜா பாட்டை அண்ணா , நன்றி

This comment has been removed by the author.

அன்பு செழியன்,
இதெல்லாம் நமக்குப் புரியாத விஷயம்!
ஒரு பத்து தடவை படித்தால் புரியும் என்று நினைக்கிறேன்.

இப்போதுதான் ஹைப்பர் லிங்க் கொடுக்கக் கற்றுள்ளேன்.

இதையும் செய்து பார்க்கிறேன்.

பாராட்டுக்கள்!

நானே கேட்கிறேன்: பெர்மா லிங்க் என்றால் என்ன?

உங்கள் பதிவில் சொல்கிறேன் அம்மா, தாமதத்திற்கு மன்னிக்கவும்

GOD TIPS, BUT NO USE,,,,, ENNA ETHU ANTHA ALAVUKU SAFETY ELLA...ANTHA EMPTY PLACE LA MOUSE VECHI CLICK PANA OPEN AKUTHU......YARACHUM ETHARTHAMA CLICK PANA OPEN AUIDUM.....ETHUKU VERA ID ERUKU..YARUM OPAN PANAMUDIYATHU ALAVUKU..........


ATHU ENA NA.....FOLDER NAME END LA .exe type panidu, right click, properties poi, security poi, permission la, deny kuduthuda open panamudiyathu........etha pathi full detail venumna.....inbox chat vanthu therunchugunga...........nathan.printvision@gmail.com

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More