வெற்றி வேண்டுமா ?

வெற்றி என்பது ஒரு சிறு வார்த்தையாக இருந்தாலும் அதை அடைய நாம் செய்ய வேண்டியது நிறைய. உழைப்பவர்கள் அனைவரும் வெற்றி பெறுவதில்லை . ஒரே வேலையில் உள்ள அல்லது ஒரே செயலை செய்யும் இருவரில் ஒருவர் வெல்வதும் மற்றவர் தொல்வியடைவதும் ஏன் ?வெற்றி பெற நாமென்ன செய்ய வேண்டும் ?


வெற்றி என்பது எளிதில் கிட்டிவிட கூடியது அல்ல. தோல்வி , மனத்தளர்ச்சி , நம்பிக்கை துரோகம் , பொருள் இழப்பு , அவமானம் , வாக்கு தவறுதல் போன்ற தோல்வி படிகளை கடந்து ஒருவன் வெற்றி பெரும் போது அது  வெறும் வெற்றியாக இல்லாமல் சாதனையாக மாறுகிறது .

-          கவிஞ்ர் கவிதாசன்

வெற்றிக்கு சில வழிகள் :


  1. செய்யும் வேலையை விரும்பி செய்யுங்கள்.
கடமையை செய் , கடமைக்காக செய்யாதே

  1. வித்தியாசமாக சிந்தித்து வித்தியாசமாக செய் .
அனைவரும் கண்ணாடி போடுவார்கள் ஆனால் ரஜினி போடும் போது எப்படி ஈர்ப்பு வருகிறது ?

  1. பெரிய அளவில் சிந்தியுங்கள் ஆனால் சிறிய அளவில் ஆரம்பியுங்கள் .

சீன பெறும் சுவர் கூட முதலில் ஒரு கல்லில்தான் ஆரம்பித்து இருப்பார்கள்

  1. உனது பலம் பலவினம் இரண்டையும் தெரிந்து கொள்.
தன்னை முழுவதும் அறியாதவன் வெற்றியை அறிய முடியாது

  1. தோல்வியில் இருந்து பாடம் கற்று கொள்ளுங்கள் .
தோல்வி என்பது அவமானம் அல்ல , அது வெற்றியின் படிக்கட்டு

  1. மற்றவர்களின் கருத்துகளை கேளுங்கள் .

நல்ல புத்திசாலி மற்றவர்களை பேச விட்டு வேடிக்கை பார்ப்பான் , முட்டாள் அவன் மட்டுமே பேசிக்கொண்டு இருப்பான்

  1. ஜெயப்போம் என உறுதியாக நம்புங்கள் .

உங்களை நீங்களே நம்பவில்லை என்றால் வேறு யார் நம்புவார்கள் ?

இறுதியாக ....

எந்த வேலையையும் இதய பூர்வமாகவும் , அன்புடனும் செய்தால் அது முக்கியமானதாகவும் , அழகாகவும் , எளிதானதாகவும் மாறிவிடும் . அதுவே வெற்றி பெறும் மனநிலையை உருவாக்கும்

-          மாதா அமிர்தானந்தா மயி

உன்னால் முடியாது என நினைத்த செயலை எங்கோ யாரோ ஒருவன் செய்து கொண்டு இருக்கிறான்

-          யாரோ10 comments:

வெற்றி எவ்வாறு சாதனையாக மாறுகிறது என்பதையும் வெற்றிக்கு சில வழிகளையும் தொகுத்து தந்துள்ளீர்கள்... மிக்க நன்றி...

/// உங்களை நீங்களே நம்பவில்லை என்றால் வேறு யார் நம்புவார்கள் ? ///

Classic...!

நல்ல பகிர்வு ராஜபாட்டை,,

ஏழில் எனக்கு அதிகம் பிடித்தது

“தோல்வி என்பது அவமானம் அல்ல , அது வெற்றியின் படிக்கட்டு “

இன்றைய அவமானங்களை மாற்றிவிடு வெகுமானங்களாக...
வாழ்த்துக்கள், நன்றி

நல்ல பகிர்வு நண்பரே.

/

திண்டுக்கல் தனபாலன்

தொழிற்களம் குழு

பட்டிகாட்டான் Jey

செழியன்

செழியன்

///


படித்து கருத்துகளை சொன்ன உங்களுக்கு நன்றி நண்பா

வெற்றியை தேடுபவர்களுக்கு ஒரு அருமையான ராஜபாட்டையைப் போட்டுக் கொடுத்துள்ளீர்கள் ராஜா!
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்

// Ranjani Narayanan

Seeni ///


தங்கள் கருத்துக்கு நன்றி

வெற்றிக்கு வழி சொல்லும் நல்ல பதிவு
வாழ்த்துக்கள்

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More