நான் பதிவர் அறிமுகம் - அம்பாளடியாள் (கவிதைகள்)...

வணக்கம் தோழமைகளே....
இன்று உங்களுக்கு தெரிந்த பிரபலத்தை மீண்டும் பிரபலப்படுத்துகிறோம்...
என்ன புரியவில்லையா???


இவரின் பதிவுகளை காண கீழே சொடுக்குங்கள்.

                                                                   அம்பாளடியாள்

நம்ம அம்பாளடியாள் அவர்கள்தான்...

இவர் 30.10.2010 அன்று ''பெண்ணே பேசு'' என்ற தலைப்பின் கீழ் தனது பதிவுகளை எழுத ஆரம்பித்து இன்று பல பதிவுகளை படைத்து, பதிவுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் கவிதை நடையிலே பதிவு எழுதுவதில் சிறந்தவர்... உணர்ச்சிமிகு கவிதைகள் படைப்பதில் இவருக்கு நிகர் இவரே தான் என்று கூட சொல்லாம். அவ்வளவு உணர்வுமிகு வார்த்தைகளால் நம் இதயத்தை ஒரு நிமிடம் நிறுத்தி இயங்கச்செய்யும் இவரது படைப்புகள்...

உணவு தண்ணி இல்லாமல்
ஒட்டிப் போகும் உடல்தனிலே
மிச்சம் இருக்கும் உயிர் படும் துயரை
நினைத்துப் பார்த்தால் போதுமடா !....

என்பது போன்ற வரிகள் படிப்போர் மனதை புரட்டிப்போடும்...
''விருதுகளின் ராணி'' என்ற பட்டம் இவருக்கு சரியாக பொருந்தும்...
அம்பாளடியாளுடைய கவிதை பதிவுகள் அனைத்தும் மிகவும் எளிமையாகவும், நளினமாகவும், உணர்ச்சிமிக்கதாகவும் இருக்கிறது...
கவிதை எழுதுவது ஒரு வரம், அந்த வரம் நம் அம்மையாருக்கு இயல்பாகவே அமைந்துள்ளது.

பின்னூட்டம் இடுவதில் வல்லவர், சக பதிவர்களின் பதிவுகளையும் படித்து தட்டிக்கொடுப்பதில் சிறந்தவர்...

இவருடன் பல முன்னனி பதிவர்கள் தங்களை இணைத்துள்ளனர். இணைய குடும்பத்தில் பல குழந்தைகளும் பல கலைகள் கற்றுவருகின்றனர்...
இவரது பணிகள் இன்று போல் என்றும் தொடர்ந்திட வாழ்த்துக்கள்...

பின்னூட்டம் என்பது ஒரு பதிவனுக்கு நாம் தரும் பெருவெகுமதி, அது அவனை மேலும் பல நல்ல ஆக்கமுள்ள படைப்புகளை படைக்க தூண்டும். எனவே நம் நெஞ்சங்களே, பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள், நிறைகள் இருந்தால் தட்டிக்கொடுங்கள்... நிச்சயம் வரலாறு பேசும் நம் பதிவுகளை,

என்றும் உங்களுடன்,


160-ம் மேற்பட்ட பதிப்புகளை பதிந்த இவருக்கு, தமிழ் பதிவர்கள் பலர் பல விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளனர்....


நமது தொழிற்களம்...

18 comments:

நல்லதொரு அறிமுகம்

2அம்பாளடியாள் வாழ்த்துகள்.

மிகவும் சிறப்பான அறிமுகம்...

அம்பாளடியாள் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

இவரை கவிதாயினி என்றுதான் இனி நான் அழைக்கப்போகிறேன்.. கவிதையில் வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்..!

தொடரட்டும் தொழிற்களம் குழுவின் 'நான் பதிவர்' தேடல் பயணம்!


//பின்னூட்டம் என்பது ஒரு பதிவனுக்கு நாம் தரும் பெருவெகுமதி, அது அவனை மேலும் பல நல்ல ஆக்கமுள்ள படைப்புகளை படைக்க தூண்டும்//

இதை யார் நம்புகிறார்களோ இல்லையோ நான் இதை திடமாக நம்புகிறேன் நண்பரே!

அற்புதமான கவிதைகள் அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.

கவிதையில் பதிவு படைக்கும் அம்பாளடியாளுக்கு வாழ்த்துக்கள்!
சிறப்பான அறிமுகம்.

உணவு தண்ணி இல்லாமல்
ஒட்டிப் போகும் உடல்தனிலே
மிச்சம் இருக்கும் உயிர் படும் துயரை
நினைத்துப் பார்த்தால் போதுமடா !....

வேதனை சகோதரி !ம்ம்மம்மம்ம்ம்ம்

தொழிற்களத்தில் உங்கள் அறிமுகம் அருமை

கருத்துரையில் புதுமை படைக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் , நன்றி

மிகவும் நன்றி சகோ!..

உங்களுடைய இந்த ஒத்துழைப்பை என்றும் விரும்பும்...

நமது தொழிற்களம்...

நன்றி தோழி ராஜி அவர்களே....

லட்சுமி அம்மா...

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி...

நன்றி திரு.தனபாலன் அண்ணே...

தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி உயர்மிகு அறிவுக்கடலாரே...

ரஞ்சனி அம்மாவிற்கு வணக்கம்...

உங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி...

உங்கள் பணி இனிதே தொடரட்டும்...

தங்கள் வருகைக்கும், கருத்துரைகளுக்கும் மிகவும் நன்றி சக்தி...

நமது செல்லப்பிள்ளை செழியனுக்கு நன்றி...

உங்கள் பணி இனிதே தொடர வாழ்த்துக்கள்...

செல்லப் பிள்ளை என்று கூறியமைக்கு நன்றி, தொழிற் களமே

ஏற்றம் மிகு வார்த்தைகளால் என் இதயம் தொட்டு மகிழவைத்த
தொழிற்களம் குழு மேலும் போற்றும்வகை என் பணி தொடர
வாழ்த்தி நிற்கும் அன்பு நெஞ்சங்களுக்கும் இந்த அம்பாளடியாளின் அன்பு கலந்த நன்றிகள் என்றும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி உறவுகளே என் கவிதைமீது நீங்கள் காட்டும் மதிப்பிற்கும் வாழ்த்துகளிற்கும் !!!!........

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More