நான் பதிவர் அறிமுகம் - ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்

வணக்கம் தோழமைகளே,

இன்று நமது ''நான் பதிவர் அறிமுகத்தில்'' நாம் பெருமையுடன் அறிமுகப்படுத்தும் பதிவர் ''ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்'' அவர்கள்....

இவரை பற்றி.... 

    இவரது பூர்விகம் சிவகாசி, பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த இவர்  தனது மூன்று மகன்களையும் கணிப்பொறியியல் பொறியாளராக படிக்க வைத்து, இன்று ஒரு பணியில் பணியமர்த்தியுள்ளார். திரு.சுஜாதா அவர்களின் ''ரத்தம் ஒரே நிறம்'' என்ற புத்தகம் எழுதுவதற்கு இவர் அனுப்பிய ''தமிழக நாடார் வரலாறு'' புத்தகம் தான் மூல காரணம். அதில் இவருக்கு பெறுமையும் உண்டு. 
மார்ச் 2, 2011 அன்று இவர் தனது பதிவுகளின் வாயிலாக 98 கருத்துக்களை பெற்றார். அதிலிருந்து இன்று வரை இவர் பதியும் பதிவுகள் ஏராளம்... அனைத்தும் இவர் புகழை பறைசாற்ற வல்லது.

   பெண்மையை பாராட்டுவது இவரின் தனி சிறப்பு, மேலும் இவரது பதிவான பேராசிரியர் மோகனா சோமசுந்தரம்,  ஒரு வீரப்பெண்மணி என்ற தலைப்பின் கீழ் பதிந்த பதிவு படிப்போர் மனதில் ஒரு எழுச்சியை ஏற்படுத்த வல்லது...


 இத்தனை வயதிலும் இவரின் கடின உழைப்பு நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது... இவரை போல் நாமும் உழைக்க வேண்டும் என்னும் உத்வேகத்தை நமக்கு ஏற்படுத்துகிறது...

  இவர் மற்ற தமிழ் பதிவர்களின் வலைப்பூவிற்கும் சென்று அவர்களுடைய பதிவை படித்து தவறாமல் பின்னூட்டம் இட்டு செல்வார்...

 இன்று பல முன்னனி தமிழ் பதிவர் அனைவரும் மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பவர்களாக இருக்கிறார், அந்த குணம் தான் அவர்களை முன்னனியில் இட்டு செல்கிறது. 

   மேலும் மேலும் இவர் பல நல்ல பதிவுகளை வழங்க வேண்டும். ஆண்டவன் இவருக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டுகிறோம்...

இவர் வாழ்விலும், பதிவுலகிலும் மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்...
ஐயா, உங்களை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்...

என்றும் உங்கள் வெற்றி பாதையில்,
நமது தொழிற்களம்.
11 comments:

மிக்க நன்றி.
வாழ்த்துகள்.

ரதனவேல் ஐயாவை அறிமுகப்படுத்துவதால் தொழிற்களம் தன் மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லை பதித்து கொண்டது

ராஜியின் பின்னூட்டத்தால் தேனும் பாலும் அருந்தியது போல, உற்சாகத்தால் நமது கனவுகள் காணாமல் போய் நினைவாகி போனது,,,


சகாக்களே இணைப்பை சொடுக்கி ராஜிக்கா பக்கத்திற்கும் செல்லுங்கள்,, ஆச்சரியங்கள் காத்துக்கிடக்கின்றன,,

பதிவர் அறிமுகம்
தொழிற் களத்தின் அழகிய நல் ஊக்கம்

தொடருங்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

தங்கள் வருகைக்ககும், கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ...

இன்று பதிவர் அறிமுகத்தில் ரத்னவேல் அய்யாவை சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். தொடர வாழ்த்துக்கள்

சிறப்பான அறிமுகம்... அவரின் நீரழிவு பற்றிய ஒரு பகிர்வை, இன்னும் பல பேருக்கு (தேவைப்படும் பேருக்கு) பகிர்ந்ததுண்டு...

ரத்னவேல் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

(ஐயா... கொஞ்சம் முகநூலை விட்டு இந்தப் பக்கமும் அடிக்கடி வாங்க...)

அன்புள்ள ரத்னவேல் ஐயா அவர்களுக்கு,
வணக்கம். உங்களை பதிவர் அறிமுகத்தில் சந்தித்ததில் - அதுவும் துணைவருடன் - மகிழ்ச்சி!

அன்புடன்,
ரஞ்ஜனி

இன்று பதிவர் அறிமுகத்தில் ரத்னவேல் அய்யாவை சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். தொடர வாழ்த்துக்கள்

ரத்னவேல் ஐயாவைப் பற்றி முன்பே அறிந்திருக்கிறேன். ஐயாவைப் பற்றிய அறிமுக பதிவு அருமை. தொழிற்களத்திற்கு நன்றி..!

ரத்னவேல் அவர்களின் அறிமுகம் சிறப்பு .பதிவர்களின் அறிமுகத்துடன் அவர்களின் வலையின் முகவரியைத்தந்தால் மிக நன்றாக இருக்கும்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More