நம்பிக்கையளிக்கும் தமிழ் மெய்ஞ்(விஞ்)ஞானம்


21- ம் நூற்றாண்டு விஞ்ஞானத்திற்க்கு நம்பிக்கையளிக்கும் தமிழ் மெய்ஞ்ஞானம்


விஞ்ஞான நோக்கம்:

ஜெனிவா ஃப்ரான்ஸ் எல்லைப்பகுதியில் 27 கி.மீ சுற்றளவில் லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் என்ற துகள் முடக்கி சோதனைச்சாலை அமைந்துள்ளது. இதில் அணுவின் அடிப்படை துகள்களை (ப்ரோட்டான் => குவார்க் => க்ளுவான்) கட்டமைக்கும் “பரமாணு அதாவது கடவுள் துகள் (Higgs boson)” எது? என்ற சோதனை நடந்து வருகின்றது.

செயல்படும் முறை:

லார்ஜ் ஹாட்ரான் கொலைடரில் அணுவின் அடிப்படைத்துகளான ப்ரோட்டான்களை (நேர்மங்களை) கிட்டதட்ட ஒளியின் வேகத்தில் (வினாடிக்கு 300000கி.மீ) ஒன்றோடொன்று மோதவிட்டு, பிறகு வெளிப்படும் துகள்களில் “அணுவின் அடிப்படைத் துகள்களையே (ப்ரோட்டான் => குவார்க் => க்ளுவான்) கட்டமைக்கும் பரமாணு அதாவது கடவுள் துகள் (Higgs boson) ஏதேனும் வெளிப்படுகின்றதா என்று சோதனை செய்யப்பட்டு வருகின்றது.

மெய்ஞ்ஞான நோக்கம்:

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே. - திருமந்திரம்-2008

விளக்கம்:

அணுவுக்கும் அணுவான அடிப்படைத் துகள்களை (ப்ரோட்டான் => குவார்க் => க்ளுவான்) ஆயிரம் துண்டாக்கி, அதில் ஒரு துண்டுக்குள், நுண்ணியதாக உள்ள பரமாணு நெருங்க கூடியவர்களுக்கு; பரம்பொருளை அடைதலும் கைகூடும்.
மேற்கண்ட இருநிகழ்வுகளில் நோக்கமும், செய்முறையும் எந்தளவுக்கு ஒத்துபோகின்றது என்று தாங்களே நன்கு உணர்வீர். ஏனெனில் நாம் இதை தற்பொழுது “மதிப்பெண்களுக்காக” படிக்கவில்லை.


ஒர் இயற்பியல் மாணவனாக சில கேள்விகள்

(1). இத்திருமந்திரத்தையே கிரேக்கர், எகிப்தியர், ரோமாணியர் போன்றோர் எழுதியிருந்தால் தங்களின் நிலைப்பாடு என்னவாகியிருந்திருக்கும்?

(2). ஒரு தமிழர் தமிழில் எழுதிருந்தால் அதில் அறிவியல் கருத்துக்கள் இருக்காதா?

(3). ஆன்மீகத்தில் அறிவியலும், அறிவியலில் ஆன்மீக கருத்துகளும் பிரதிபளிக்கும் நிகழ்வுகள் இருந்தால் ஏற்றுக்கொள்ளக்கூடாதா?

(4). திருமூலர் இதை நிரூபித்து எழுதினாரா? என்றால் கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical Physics) எதையும் அவ்வளவு சீக்கிரத்தில் அதி உயர் கணினியில் (Super Computer) கூட நிருபிக்க முடியாது என்பதே உண்மை. (எ.கா) அற்புதமான இயற்பியலாளர் ஐன்ஸ்டீன் சிறப்பு சார்பியல் கொள்கை (Special Theory of Relativity), பொது சார்பியல் கொள்கைகளை (General Theory of Relativity) சோதனை செய்து கண்டுபிடிக்கவில்லை காரண காரியங்களை வைத்தே கண்டுபிடித்தார். திருமூலர் போன்ற சித்தர்கள் மிகச்சிறந்த சிந்தனையாளர்களாக மட்டுமள்ளாமல் நம்மை விட பல பல மடங்கு மூடநம்பிக்கைகளை எதிர்த்தார்கள் என்பதே உண்மை

நன்றி செந்தில் அண்ணா 


4 comments:

திருமூலர் போன்ற சித்தர்கள் மிகச்சிறந்த சிந்தனையாளர்களாக மட்டுமள்ளாமல் நம்மை விட பல பல மடங்கு மூடநம்பிக்கைகளை எதிர்த்தார்கள் என்பதே உண்மை

ஏற்றுகொள்ள வேண்டிய உண்மை நல்ல பதிவு வாழ்த்துக்கள்

ஹிக்ஸ் போசான் பற்றி நானும் படித்திருக்கிறேன் நன்பரே!அதற்கும் கடவுளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று அதை பற்றி தெரிந்து கொள்ளும் போது புரிந்து கொண்டேன். மெஞ்ஞானதுக்கும் விஞ்ஞானத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? என்று நீங்கள் விடுத்த கேள்வி சரியானது தான் கண்டிப்பாக இருக்க வேண்டும்..,//நீங்கள் இயபியல் மாணவரா?.//

நன்றி அண்ணா, இல்லை நான் கணினி முதுகலை பயன்பாட்டியல் துறை மாணவன்

தமிழ் செல்வி அவர்களே , உண்மை தான், நன்றி

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More