Latest News

விரட்டுவோம் தமிழின துரோகிகளை ...(பகுதி 1)

  வாருங்கள், நல்ல தமிழ் இணைய உறவுகளே, விரட்டுவோம் தமிழின துரோகிகளை இணையத்தில் இருந்து....!!!. என்ன குழப்பமாய் இருக்கிறதா? சி(ப)லருக்கு நாம் தமிழர்கள் தானா  என்ற சந்தேகமே வந்திருக்கும். 


இணையம் இன்று நம் சமூகத்தில் பெரும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் வலைப்பூ நடத்த வழியின்றி வலைப்பதிவு நடத்தும் என் போன்ற ஏழைகளுக்கு உதவியாய் இருக்கிறதே...

இங்கே தான் இருக்கிறது சிக்கல், நாம் வலைப்பதிவிலோ, வலைப்பூவிலோ 
நாம் என்ன நினைக்கிறோமோ அதனை பதிவிடலாம்.இதனை சில நயவஞ்சக தமிழர்கள் தவறாக பயன் படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.

இவர்களின் லீலைகளை முன்பே தெரிந்து இருந்தானோ பாரதி, அதனால்தான் என்னவோ "தமிழ் இனி மெல்லச் சாகும்" என்றானோ...?. மேலும் " செந்தமிழ் நாடு எனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது என் காதினிலே" என்றான்.இவர்கள் செய்வதை பார்த்தால் "ஐயகோ..!" வெகுண்டு எழுவானே... 

உலகின் ஆதிமொழி தமிழ் என்கிறோம்,செம்மொழி என்கிறோம். தமிழறியா தமிழர்களாய் வாழ்வதில் தான் எவ்வளவு மகிழ்ச்சி நமக்கு.

நம்முடைய கலாச்சாரத்திலே பலவாறு உறவுமுறைகள் சொல்லி அழைத்து மதித்து போற்றுகிறோம் நம் உறவினர்களை. ஆனால்  இந்த மூடர்கள் கேவலப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

அப்படியெல்லாம் இல்லை,நீ ராஜபக்சேவிடம் காசு வாங்கிக் கொண்டு பேசும் அறிவிலி என்று திட்ட போகின்றீர்களா...? திட்டும் முன் நான் சொல்வதைக் கேளுங்கள்.

கூகிள் தளத்தினை நாம் 9 மொழிகளில் பயன்படுத்தும் வசதியை இலவசமாகவே வழங்குகின்றது (நம்ம ஊர் தந்திரம் இந்த பயலுக்கு எப்டி தெரியும்?).அதில் நம் தாய்மொழியும் அடக்கம். ஆனால் அடக்கம் ஆகாமல் காப்பது உண்மைத்தமிழனின் கடமை அல்லவா.

சரி நேரடியாக விசயத்திற்கு வருகிறேன்

கூகிள் தளத்திற்கு செல்லுங்கள். 
(நம்பிக்கை இல்லாதவர்க்காக படங்கள்)

தமிழ் என்பதை வட்டமிட்டு காண்பித்துள்ளேன் .
                                

தமிழ் என்பதை தேர்வு செய்த பின்னர் "அக்கா" தட்டச்சு செய்யவும்.
நாகரீகம் கருதி அந்த பக்கங்களை நான் இங்கே படமாக இடவில்லை.

பலான கதைகள், படங்கள்  நிரம்பிய தமிழ் வலைப்பதிவுகள் தோன்றும்.
(வெட்கக்கேடு). இது தொடர்ந்தால் கூகுள் ஒருவேளை தமிழ் வலைப்பதிவுகள் 
என்றாலே இப்படித்தான் என்று கேவலமாய் நினைக்குமே. . .

இதனை எல்லாம் ஒழிக்க வேண்டாமா? அது பதிவர்(தமிழர்)களாகிய நம் கடமை தானே,

1.ஒழிக்காவிடில் உண்டாகும் தீமைகள் என்ன?
2.ஒழித்தால் விளையும் நன்மைகள் என்ன?
3.எப்படி ஒழிக்கலாம்?

அதனை பற்றி தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.

நமது தொழிற்களம் மட்டுமே தமிழ் தளங்களிலேயே  முதல் முறையாக இம்முயற்ச்சிக்கு  மறை(நேர்)முகமாக உதவுகிறது, என்பது உங்களுக்கு தெரியுமா?

தொடர்ந்து பயணியுங்கள் எங்களுடன்...இப்பதிவினை பல இடங்களில் பகிர்ந்து  திரட்டுங்கள் பதிவர் கூட்டத்தை, இப்பொழுது  சொல்லுங்கள் (அறிவிலி )தமிழர்களை விரட்ட நீங்கள் தயாரா ?
                                                                  நன்றி!  


Follow by Email

Recent Post