விரட்டுவோம் தமிழின துரோகிகளை.(பகுதி 2)

     இணையத்தில் இருந்து தமிழின துரோகிகளை ஒழிக்காவிடில் உண்டாகும் முக்கிய தீமைகள் என்ன?

   முந்தைய பதிவினை படிக்க : விரட்டுவோம் தமிழின துரோகிகளை.(பகுதி 1)

குறிப்பு :

  கூகிள் எதற்காக தமிழ் மொழியை அங்கீகரித்து உள்ளது, தமிழர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு 
செய்து பயன் பெறட்டும்  என்பதற்கு தானே...

 நம்மில் பலர் ஆங்கிலம் கற்றலே அறிவு என நினைக்கிறோம், தோழர்களே அறிந்து கொள்ளுங்கள், ஆங்கிலம் என்பது மொழி தானே தவிர,அதுவே அறிவு அல்ல. ஒரு மொழியை எவரும் எந்த வயதிலும் கற்க்கலாம் தீமை 1:

  சரி விசயத்திற்கு வருவோம், ஒரு வெளிநாட்டுவர் தமிழ் மீது பற்று  கொண்டு தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆவலில் இணையத்தில் தமிழ் உறவுகள்    பெயரை தட்டச்சு செய்தால், அவர் கண்ணில் பலான கதைகளும், படங்களும் தென்பட்டால், அவர் தமிழர்கள் என்றாலே இழிவானவர்கள் என்று தானே நினைப்பார்.

அது மட்டுமா, அவருடைய நாட்டில் இருக்கும் தமிழர்களை கேவலமாக தானே பார்ப்பார், தன நண்பர்களிடமும் அப்படித் தானே கூறுவார். 

                                               ( மற்றவர்களிடம் நம் மானம் கப்பல் ஏறி பறக்கும்)

தீமை  2:

  ஒரு பள்ளி மாணவன், " அம்மா " என்ற தலைப்பில் பேச்சு போட்டியில் பேச இணையத்தில் தேடும் போது அவன் கண்களில் அப்படிபட்ட  தளங்கள் அகப்பட்டால் அவன் பாதை , ஐயகோ...! போதை ஆகிவிடுமே.

  ஒரு பள்ளி மாணவன் என ஏளனமாக நினைக்க வேண்டா. அது நம் குழந்தையாகவோ, சகோதரர் /சகோதரியாகவோ கூட  இருக்கலாம்.

                                                        ( சந்ததிகளின் அறிவு மழுங்கடிக்கப்படும்)

தீமை  3:

  நீங்களும் உங்கள் சகோதரியும் ஒன்றாக இணையத்தில் உலாவுகிறீர்கள், தமிழ் ஆர்வத்தில், தமிழில் தேடுகிறீர்கள், அப்பொழுது அந்த மாதரியான தளங்கள் கண்ணில் பட்டால், அதன் பின்பு இருவரும் முன்பு போல் கண்ணோடு கண் நோக்க முடியுமா...?

                                                                   ( உறவுகள் அறுந்து போகும்)

  நீங்கள் கேட்கலாம், அறிவிலி தமிழன் மட்டும் தான் இப்படி பண்ணுறானா என்று, இல்லை இதன் பின்னே பல உலக சதிகளும் இருக்கிறது, பின்னர் தெளிவை காண்போம்.

                            இது போன்றவற்றை செய்யும் தமிழர்களை நாம் ஒழிக்க வேண்டாமா... 

                                    நீங்கள் அறிந்த தீமைகளை கருத்துரையில் பதிவிடுங்கள்.  

   நாளை அடுத்த பதிவில், இவர்களை ஒழித்தால் உண்டாகும் நன்மைகள் நம் தொழிற் களத்தில்.........

                                                                                             நன்றி 

10 comments:

நன்றாக பட்டியலிட்டு அருமையான கருத்துக்கள் + (...) எழுதி உள்ளீர்கள்... நன்றி...

நல்ல பயனுள்ள பதிவு,, தொடர்க,,,

தீமை 1: உண்மைதான். நம்மை பற்றிய அறிமுகமே தவறானதாக அவர்களுக்கு பட்டுவிட்டால் தமிழர்கள் அனைவருமே இப்படி என்று ஒரு தவறான முடிவுக்கு வரத்தான் செய்வார்கள்.. கம்பராமாயணமும் மகாபாரதமும் கீதையும் அவ்வளவு எளிதில் கிடைக்கப்பெறுவதில்லையே... தேடாமல் எளிதில் கிடைக்கக்கூடியது கெட்ட விஷயங்கள் மட்டுமே... அதனை நாம் தான் ஒரு கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும். அப்படி முயற்சி செய்து அதில் வெற்றி கண்டால் மட்டுமே தமிழர்களின் புகழ் உலகமெங்கும் பரவி செம்மொழியாக உண்மையிலேயே வலம்வரும் அந்நியர்களின் மத்தியிலே. இதில் உடனடி கவனம் செலுத்தினால் காக்கப்படும்...

தீமை 2: யாராக இருந்தால் என்ன, மாணவன் என்றாலே குழந்தை என்ற ஒரு கண்ணோக்கில் தான் பார்க்கவேண்டும். குழந்தை என்றாலே அது நம் பிள்ளைகள் போலத்தான். இதில் பாரபட்சம் இருக்க கூடாது இருக்கவும் இருக்காது எந்த ஒரு மனசாட்சியுள்ள மனிதாபிமான உள்ள பெற்றோர்களுக்கும்.

தீமை 3: சகோதரரும் சகோதரியும் சேர்ந்தாற்போல் இணையத்தில் இந்த காலகட்டத்திற்கு உலாவரமுடியாது என்பது நூத்துக்கு நூறு சரியான ஒன்று. ஏன் என்றால் எதையாவது ஒன்று தட்டச்சு செய்தால் ஏதேதோ நாம் கேட்காததெல்லாம் நம் கண்முன்னே வந்து நிற்கும். அப்போது இருவரின் நிலை தீயின் நடுவே நிற்கவைத்தது போல் இருக்கும். அதற்கு சாத்தியமில்லாத நிலை தான் இப்போது உள்ளது.

நன்றி, தனபாலன் அண்ணா, நீங்களும் உங்களுக்கு தெரிந்த தீமைகளை பட்டியல் இடுங்கள்

நன்றி தொழிற் களம் குழுவே, தொடர்கிறேன்

தேவாதிராஜன் அண்ணா , சரியாக சொன்னிர்கள், நன்றி வாழ்த்துக்கள்

நீங்கள் கேட்கலாம், அறிவிலி தமிழன் மட்டும் தான் இப்படி பண்ணுறானா என்று, இல்லை இதன் பின்னே பல உலக சதிகளும் இருக்கிறது, பின்னர் தெளிவை காண்போம்.

நண்பா இங்கே குறிப்பிட்டது போல் தான் உலக சதிகள் நிறையவே இருக்கிறது. இதை நிச்சயம் 20 சதவீகிதம் வேண்டுமானால் தமிழர்கள் சம்மந்தப்பட்டிருக்கலாம். ஆனால் நம் தமிழ் இனத்தை மட்டம் தட்ட தேடு பொறி இயந்திரங்களில் சில சதி வேலைகள் நிகழ்கின்றன.

ஒரு நாட்டை கைப்பற்ற முதலில் அந்நாட்டு மக்களுக்கு அவர்கள் நாட்டின் மீதே அவநம்பிக்கையை ஏற்படுத்த இந்த தந்திரத்தை பயன்படுத்துவார்கள். கண்ணி இல்லாத காலத்தில் இப்படிப்பட்ட புரளிகள் நிகழ்ந்திருக்கிறது. இப்பொழுது இந்த சதி. இதை நாமெல்லாம் ஒன்றாக சேர்ந்து தான் மாற்ற வேண்டும்.

தமிழ் ராஜா அவர்களே, சரியாய் சொன்னிர்கள். கூட்டத்தை கலைக்க வேண்டும் என்றால் உள்குத்து அவசியம் தானே. அதனைத்தான் செய்கிறார்கள் நன்றி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More