விரட்டுவோம் தமிழின துரோகிகளை.(பகுதி 3)

சென்ற பதிவில், தமிழின துரோகிகளை ஒழிக்காவிடில் உண்டாகும் தீமைகள் பற்றி பார்த்தோம்.

தயவு செய்து முந்தய பதிவுகளை படிக்க :
விரட்டுவோம் தமிழின துரோகிகளை.(பகுதி 1)
விரட்டுவோம் தமிழின துரோகிகளை.(பகுதி 2)


இன்று, ஒழிந்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாமே...

இதில் என்ன பெரிய நன்மை வந்துடபோகுதுன்னு நீங்க நினைப்பது எனக்கு தெரிகிறது. 

குறிப்பு:

  கூகிள், தமிழர்களுக்காக, தமிழ் மொழி  மாற்றியை (GOOGLE TRANSLATOR) என்ற வசதியை வழங்குகிறது இதனால் தமிழ் தட்டச்சு படிக்காத என்னைப் போன்ற மேதாவிகளுக்கும்(ஹி  ஹி) பயன்படுகிறதே .

நன்மை 1:

  உலகின் எந்த மூலைக்கும் நல்ல தமிழ் பரவும், பல மொழி கற்போரும் தமிழ் மீது காதல் கொள்வர்.

அக்கால காதலர்கள்:

1. சி.யு.போப் ஐயா கிறிஸ்தவராய் இருந்தாலும் திருவாசகம் மீது
    காதல் கொண்டார் 
2. நாம் ரசிக்கும் பரமார்த்த குரு கதைகளின் தந்தை பெஷ்ஷி அதாங்க,
    நம்ம வீரமா முனிவர்.
3. திராவிடம் பற்றி அறிய வேண்டுமானால் இவர் புத்தகங்களை கட்டாயம்
    படித்தே ஆகவேண்டும் , யாருங்க அது ? உயர் திரு.கால்டுவெல் ஐயா தான்.
4. இக்காலத்திலும் பல வெளிநாட்டவர் தமிழ் மீது காதல் கொண்டுள்ளனர்.
     ஆனால் நம் நிலைமையோ?,சொல்லவேண்டா .

                                   (எட்டு திக்கும் பரவும் செந்தமிழாய்...)

நன்மை 2:

  ஒருவர் தமிழ் உறவுகளை பற்றி அறிய வேண்டி, இணையத்தில் தேடினால்
மேன்மையும், சிறப்பும் பொருந்திய கட்டுரைகளும்,கதைகளும்,மற்றும் கவிதைகளும் கிடைக்குமே அன்றி பலான விஷயங்கள் கண்ணில் படாது.

  தமிழ் படித்தவர்கள் என்ன ஆவார்கள் என்று "கற்றது தமிழ்" என்ற திரைப்பட கதாநாயகன் நிலைமை வராது மாறாக தமிழில் இல்லாதது வேறேதும் உண்டோ என்ற நிலைமை வரும்.

                             (திரைகடலோடி திரவியம் தேடுவோமே...)

நன்மை 3:

  தமிழ் அன்னைக்கு புதிய அணிகலன்கள் சூட்டபெரும், குண்டலகேசியும் , வளையாபதியும் போதுமா. பள்ளி மாணவர்களில் இருந்து முனைவர் பட்டம் பெற பயிலும் அனைவரும் தேடும் தகவல்கள் கொண்ட களஞ்சியமாய் மாற வேண்டாமா?

இது போன்ற நன்மைகளை எடுத்துச் செல்லும் முயற்சியில் தான் தொழிற் களம் இறங்கி உள்ளது.

                             (தமிழன்னை முகத்தில் அருள் பொங்குமே...)
                         
எப்படி அந்த தீமைகளை ஒழிப்பது?
அப்படியான பலான பதிவுகளை பின்னுக்கு தள்ளுவதுஎப்படி?
 நாம் நம் பதிவின் மூலம் எப்படி செயல் படுத்துவது ?

இந்த கேள்விகள் உங்களிடம் உள்ளதா, நாளை பார்க்கலாம் .. இணைந்திருங்கள்...

                                                         நன்றி!

10 comments:

"கற்றது தமிழ்" - திரைப்படத்தை குறிப்பிட்டதும் அருமை... வாழ்த்துக்கள் நண்பரே...

மிக மிக அருமையான அலசல் நண்பா... தமிழ் மீதுள்ள உங்கள் காதலை நினைக்கும் பொழுது பெருமைப் படுகிறேன் நானும் தமிழன் என்று

தமிழ் படித்தவர்கள் என்ன ஆவார்கள் என்று "கற்றது தமிழ்" என்ற திரைப்பட கதாநாயகன் நிலைமை வராது மாறாக தமிழில் இல்லாதது வேறேதும் உண்டோ என்ற நிலைமை வரும்.


நிச்சயம் அந்த நிலைமை தமிழர்களுக்கு வராது.அந்த படத்தின் நாயகன் திருக்குறள் படித்திருக்கவில்லை என்று எண்ணுகிறேன்.
எல்லோரும் திருக்குறளின் அறத்துப்பாலைப் பற்றி மட்டுமே பேசி தமிழ் , தமிழ் என்று சொல்கின்றனர்.
பொருட்பாலில் வள்ளுவரின் ராஜதந்திரங்களை நாம் கையாள்வதே இல்லை. எனவே தான் நாம் கூப்பாடு போட்டுக் கொண்டே இருக்கிறோம்.

தனபாலன் அண்ணா, நன்றி

தனபாலன் அண்ணா, நன்றி

சீனு அவர்களே, நம் முயற்சி தொடரட்டும் நன்றி

தமிழ் ராஜா அவர்களே, நீங்கள் சொல்வதும் உண்மையே, நம் முனிவர்கள் "சர்வம் சக்தி மயம் "
என்பதைத்தான் அறிவியல் ,"MATTER IS ENERGY, ENERGY IS மேட்டர்" என சொல்கிறது, நம் கண்ணிற்கு "இக்கரைக்கு அக்கரை பச்சை" யாகவே தெரிகிறது. மாற்றம் வேண்டும் என்பதே நம் அவா.
நன்றி

உங்கள் பதிவு மிகவும் அருமை...

தமிழ் மேல் நீங்கள் கொண்ட பற்று என்றும் இது போல் தொடர வாழ்த்துக்கள்...

நன்றி தொழிற் களமே,

அருமையான பதிவு , எப்படி அந்த தீமைகளை ஒழிப்பது தோழரே?அதற்கான வழிமுறைகளை விரைவாக பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More