விரட்டுவோம் தமிழின துரோகிகளை.(பகுதி 4)

சென்ற பதிவுகளில் , தமிழின துரோகிகளை ஒழிக்காவிடில் உண்டாகும் நன்மைகள்,  தீமைகள் பற்றி பார்த்தோம் அல்லவா   
தயவு செய்து முந்தைய  பதிவுகளை படிக்க : 
விரட்டுவோம் தமிழின துரோகிகளை.(பகுதி 1) 
விரட்டுவோம் தமிழின துரோகிகளை.(பகுதி 2)
விரட்டுவோம் தமிழின துரோகிகளை.(பகுதி 3)


சீக்கிரம் விசயத்துக்கு வாப்பா என்பது புரிகிறது. 
முதல் பதிவில் பார்த்தோம், தமிழ் உறவுகளை, தமிழில் தட்டச்சு செய்தால்  பலான கதைகள் கொண்ட வலைப் பக்கங்கள் தென்படுவதை...

 சரி, நாம், நம் வலைப்பதிவில் பதிவிடும் கருத்துக்களை கூகிள்-ல் தேடினால் கிடைப்பதில்லையே.
அவர்கள் என்ன மந்திரம் செய்கிறார்கள் என்று எண்ணுபவரா, அதை போன்றவற்றை பின்னுக்குத் தள்ளவேண்டும் என்ற எண்ணம் கொண்ட தமிழரா  நீங்கள், அப்படியானால் சரியான பதிவை தான் நீங்கள் படித்து கொண்டு இருக்கிறீர்கள்.

அதற்குத் தான் கூகிள் PERMALINK என்ற ஒரு மதிப்பு மிக்க வசதியை வழங்குகிறது. உடனே நீங்கள் நான் தான் LABEL என்ற வசதியை பயன் படுத்துகிறேனே, என்று கோவம் வரும்படி நகைச்சுவை செய்யாதீர்கள்.
LABEL- உங்கள் வலைப் பதிவில் நீங்களிடும் பதிவினை பிரித்துக் காட்ட மட்டுமே   பயன்படும்.
எ.கா
                                            


இப்படம் என் வலைப் பதிவின் LABEL-ஐ காட்டுகிறது. நாம் எழுதும் பதிவுகளை
தனித்து காட்ட பயன்படும். இல்லையேல் குப்பை தொட்டி போலே மொத்தமாய் தான் இருக்கும். இதனை அனைவரும் அறிந்திருப்போம். ( அறியாதவர்கள் கருத்துரை இடுங்கள்)

PERMALINK மட்டுமே தேடுபொறி (BROWSER)களில் நம் பதிவை முன் நிறுத்த பயன்படும்.

செயல் முறைகள் :

1. PERMALINK என்ற வசதிக்குள் செல்லுங்கள். நான் படத்திலே கட்டமிட்டுள்ளேன் பாருங்கள்.

   2.  இதில் CUSTOM  PERMALINK என்ற ரேடியோ பொத்தானை சொடுக்குங்கள்.
   3.  பதிவினை எழுதிய பின் அதன் தொடர்பான ஓரிரு வார்த்தையை PERMALINK-ல் இட வேண்டும்.
   4.  ஒவ்வொரு வார்த்தையின் இடையே  "HYPHEN MARK" (-) இட வேண்டும்.

   .     நான் இந்த பதிவிற்கு "TAMIL-TAMILIANS"  என்று PERMALINK வைத்துள்ளேன்.5. பின்னர் DONE பொத்தானை அழுத்தவேண்டும் அவ்வளவுதான். இனி உங்கள் உங்கள் பதிவு இதனை  
    முதன்மையாக கொண்டு தேடு பொறிகளில் கிடைக்கும். 

    மேலே முகவரிப் பட்டையில் நீங்கள் பதிவிட்ட  பிறகு இப்படி  தோன்றும் (கட்ட மிட்டுள்ளேன்  
     பாருங்களேன் )
இப்படி  PERMALINK வைத்து தான்  பலான கதைகளை இணையத்திலே தேடினால் உடனே கிடைக்கும்  படி   செய்கின்றனர்.


நாமும் தமிழ் உறவுகளின், தமிழின்  தலைப்பில் பல கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதி அதே பெயரில் PERMALINK வைத்து பல தளங்களில் பகிர்ந்து அவற்றை பின்னுக்கு தள்ளுவோம்.


நாளைய சந்ததியினர் தேடும் போது  நல்ல கருத்துக்களே கிடைக்கும். வரவிருக்கும் வரலாற்றில் கால் பதிக்க நாமும் இம் முறையை பின்பற்றுவோம்.

இம் முறையை பயன் படுத்தி இணையத்தில் உலவும் தமிழின துரோகிகளை விரட்டுவோம்.

சந்தேகம் இருந்தால் கேளுங்கள். பதிவுலகமே பயன் படுத்துங்கள் பகிருங்கள், நண்பர்களுடன்.

                                                           நன்றி

6 comments:

பயனுள்ள பதிவு நண்பா...

தொடரட்டும் உங்கள் சேவை...

வாழ்த்துக்கள்...

நல்ல பதிவு. உபயோகமாக இருந்தது. நன்றி.

பயனுள்ள பதிவு... பலருக்கும் உதவும்... நன்றி...

தொழிற் களமே, பதிவர்கள் PERMA LINK உபயோகபடுத்த வேண்டும் என்று கூறிவிட்டு நீங்கள் பதிவர் அறிமுகம் பதிவில் பயன் படுத்த வில்லையே, அரசியல்வாதிகளின் காற்று உங்கள் வீட்டு பக்கம் வீசுகிறதோ என்னவோ? வாழ்த்தியமைக்கு நன்றி

கண்மணி, தொடர்ந்து எழுதுங்கள், உங்களிடம் நல்ல எழுதும் திறமை இருப்பை உங்கள் வலைப் பதிவின் மூலம் அறிந்தேன், வாழ்த்துகள் நன்றி

தனபாலன் அண்ணா, நீங்களும் பதிவிடுங்களேன், நன்றி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More