சாதனை மனிதர்கள் : தாமஸ் ஆல்வா எடிசன்


எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்கு

       மாணவன் ஒருவன் பள்ளிக்கூடத்திலிருந்து மதிய உணவிற்காக வீடு வந்தான்.மதிய உணவிற்காக சென்ற மாணவன் பிற்பகல் பள்ளிக்கு வரவில்லை . இதை அறிந்த ஆசிரியர் மாணவனின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தினார்.  
     அதனை அறிந்த பெற்றோர்கள் அவனது பெயரைக் கூறி பல இடங்களில் தேடினார்கள்.அப்பொழுது ஒரு இடத்தில் மாணவன், அமர்ந்திருந்தான். பிற்பகல் பள்ளிக்கு செல்ல வேண்டாமா ...? என்று பெற்றோர்கள் பையனிடம் கேட்டார்கள்.பையனோ கொஞ்சம் பொறுங்கள் குஞ்சு பொறித்து விட்டு வருகிறேன் என்றான்
     அதற்கு பெற்றோர் நீ என்ன கோழியா  கொக்கா...? என்று கேட்டார்கள். அது மட்டுமின்றி அவனிடம் முட்டை ஒன்று இருப்பதையும் கவனித்தார்கள். பையன் தன் ஆசிரியர் வெப்பத்தின் மூலம் கோழி அடைக்காத்து குஞ்சுப் பொறிக்கும் முறையை சொல்லிக் கொடுத்தார் என்று சொல்லியிருக்கிறான். அதற்கு அந்தப் பையனின் தந்தை சிரித்திருக்கிறார்.
     ஆனால் பிற்காலத்தில் இந்த மாணவனின் ஆராய்ச்சியின் பயனாகத் தான் கோழிக் குஞ்சுகள் உலகில் உற்பத்தியாகிப் பெருகி வருகின்றன. இவர் ஆராய்ச்சியின் பயனாக 1320க்கும் மேற்பட்ட புதிய சாதனங்களை கண்டுப்பிடித்துச் சாதித்திருக்கிறார். அந்த மாணவன் வேறு யாருமில்லை, பெருமைக்குரிய தாமஸ் ஆல்வா எடிசன் தான்.
     எனவே முயற்சிக்கும் பொழுதே அது அறிவார்ந்த ஒன்றா இல்லையா என்ற சந்தேகமின்றி முயன்றால் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி தான்.

4 comments:

நல்ல பகிர்வு சகோ...
இதத்தான் உங்களிடம் எதிர்பார்த்தோம்..

எழுத்து நடை அழகு, அதிலும் அந்த குறள், நல்லா யோசிச்சு எழுதிருக்கிங்க. வாழ்த்துக்கள், நன்றி

கருத்துரையிட்ட தமிழ்ச்செல்வி,தொழிற்களம் குழு மற்றும் செழியனுக்கும் என் நன்றிகள்

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More