மொபைல் செயலிகள்: ஆண்டிராய்ட் (Android os) நம்பர் 1.


வணக்கம் நண்பர்களே , மொபைல் செயலிகளை பற்றி பாத்து வருகிறோம் சென்ற பதிவில் ஐ.ஓ.எஸ்(iOs) பற்றி பார்தோம். இன்று நாம் பார்க்க இருப்பது உலகயே கலக்கி கொண்டு இருக்கும் ஆண்டிராய்ட் செயலி.

கூகிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஆண்டிராய்ட் செயலி இன்று செயலிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. ஆண்டிராய்ட் இங்க் (Android Inc ) எனும் நிறுவனம் தான் முதலில் ஆண்டிராய்ட் செயலியை உருவாக்கியது.அந்த நிறுவனத்தை 2005 ஆம் ஆண்டு கூகிள் வாங்கியபின் இந்தச் செயலியும் கூகிள் தயாரிப்பாய் புதுவடிவமெடுத்தது.
இந்த செயலியின் அடிப்படையில் இயங்குவது லினக்ஸ் நுட்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைக்கு உலகின் செயலிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும்  ஆண்டிராய்ட் சாதனங்களின் விற்பனை கடந்த ஆண்டுகளின் கணக்கு படி 190 மில்லியன். கூகிள் நிறுவனப் பொருட்கள் மட்டுமல்லாது H.D.C, SAMSUNG, MOTOROLO உட்பட பல்வேறு நிறுவனத் தயாரிப்புகளுக்கு இந்த செயலி பயன்படுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டில் ஆண்டிராய்ட் செயலியின் விற்பனை 850% எகிறிக் குதித்து பிரமிப்பூட்டியது.இதன் தற்போதைய வடிவம் ஆண்டிராய்ட் 5.0.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More