விழிப்பு நிலை மூலம் வெற்றி



விழிப்பு   நிலை   மூலம்   வெற்றி

ஏதோ  ஒரு   சமயம்   சிறிது   மறதி   ஏற்படலாம்  என்றாலும்   உடனடியாக  நினைவு   கொண்டு   விழிப்பு  நிலைக்கு   வந்து, நான்   சினம்  கொள்ளக்கூடாது   என்று   இந்தப்  பயிற்சியில்    ஈடுபட்டுப்   பழக்கத்திலே   இருக்கிறேன்.   ஆகவே  சினம்   கொள்ள   மாட்டேன்   என்று   அமைதியாகவும், விழிப்பாகவும்   மனதை  வைத்துக்   கொள்ள  வேண்டும்.எந்த  அளவிலே    விழிப்புநிலை    இருக்கிறதோ   அங்கே   உணர்ச்சி   வயப்பட்ட   எண்ணம்   எழாது.  விழிப்பு   நிலை  நீங்கி  மறதி   ஏற்பட்டால்தான்    உணர்ச்சி   வயப்பட்ட   பகை   உணர்வுகள்   உண்டாகும்.

                        

எனவே,  அந்த  விழிப்பு   நிலையோடு   அன்று   அவரோடு   தொடர்பு   கொண்டு   செயலாற்றி   அந்த  நாளைக்  கழிக்க  வேண்டும். இரவிலே   அமைதியாக  உட்கார்ந்து,'இன்று    என்ன   வாயிற்று?  நான்   சினமே   கொள்ளவில்லை;  ஆனால்   வேலை   நடக்கவில்லையா?சினம்  கொண்டிருந்தால்   என்னென்ன  நிகழ்ந்தன?என்றெல்லாம்  சிந்தித்துப்   பார்த்தால்    ஏற்பட்ட   மாறுதலால்  உள்ளம்    பூரிக்கும்.யார்மீது  நேற்று  வரை சினம்   கொண்டிருந்தோமோ   அதே   நபர்   மீது   இன்று   சினம்  கொள்ளாது   வாழ்க்கையை  நடத்தியதனால்   ஏற்றப்பட்ட   மாறுதலால்   உள்ளம்    பூரிக்கும்.

அவர்களது   மனமகிழ்ச்சியை  முகமலர்ச்சியை   நினைத்து    பார்த்து  மறுநாளும்  இதே  பயிற்சியை   தொடர   வேண்டும். இவ்வாறு   ஏழு   நாட்கள்  காலையிலும்,மாலையிலும்   சிறிது   நேரம்    சிந்தித்து   இப்பயிற்சியை   தொடர்ந்து   செயலாற்றினால்    ஒரு  வார   காலத்திற்குள்ளாக   இந்தப்   பயிற்சி   பழக்கமாகி  விடும். அவர்   முகத்தைப்    பார்க்கும்   போதே   இந்த  நல்ல  எண்ணம்  உண்டாகும்.சினம்   தவிர்க்கப்படும்    இதையே  அவ்வையார்'ஆறுவது   சினம்'எனக்  குறிப்பிடுகிறார்.

ஏதோ  ஒரு  சமயம்  மறந்து  சினம்  எழுந்து  விட்டால்  அன்று   உடனே  உட்கார்ந்து   'நான்   இன்று  மறந்து  விட்டேன்   இனி   மறக்கமாட்டேன் 'என்று  பலமுறை   மனதாலும்   வாயாலும்   சொல்லித்  திடம்  கொள்ள    வேண்டும்.  அதற்கு  மேலாகவும்    தவறு   நேர்ந்தால்   'மறதியினால்  இன்று   தவறிவிட்டேன்   இதற்காக   எனக்கு  நானே    பிராயச்சித்தம்   செய்து  கொள்ள  வேண்டும்'   என்று   ஒரு  வேளை   உணவை   அதற்காக  விட்டுக்  கொடுத்துச்  சிந்தையில்     இறங்குவோமானால்,சினம்   தவிர்ப்பதற்காக  ஒரு   வேளை   சுமார்     ஏழு   மணி  நேரம்    ஒரு   பெரிய   ஆராய்ச்சியின்   ஆழத்திற்கே  மனம்   செல்லும்.இது   வாழ்நாள்   முழுவதும்   மறக்கமுடியாத   நினைவை  உருவாக்கி    வைக்கும்.

                                         

இந்த   முறையில்  ஒரே   ஒருவர்   மீது  சினம்   கொள்ளாதிருக்க   பழகி   கொண்டால்   அதுவே   மிகப்பெரிய   வெற்றியாகும்.இம்முறையில்   பயின்றால்   ஒரு  வாரத்திலோ   அல்லது  இருவாரத்திலோ  அந்த  முதல்  நபரை   பொறுத்தவரை     சினம்   வராத  அளவுக்கு  மனதின்   விழிப்பு   நிலையையும்    உறுதியையும்   பெற்றுவிடலாம்.

      பிறகு    பட்டியலின்      இரண்டாவது   நபரை   எடுத்துக்   கொண்டு   அவரோடு   இதே  முறையில்  பயிற்சியைத்  தொடர  வேண்டும்.  முதற்பயிற்சி     
அனுபவத்தாலும்  அதில்   கிடைத்த  வெற்றியாலும்   மனதிற்கு    இப்போது   சினம்   காக்கும்   வல்லமை   பெருகி   விட்டிருக்கும்.எளிதாக   இரண்டாவது   நபரிடம்   வெற்றி   காணலாம்.

      பட்டியலிலுள்ள   மற்ற  ஒவ்வொரு   நபரிடமும்    ஒவ்வொரு   நாள்   இந்தப் 
பயிற்சியை   செய்தால்   போதும். இவ்வாறு   செய்து   பழகிவந்தால்   சினம்    அழிந்து   பொறுமையின்  திருவுருவாகவே   திகழலாம்.சினம்   எழாத  மனம்    பிரகாசமாக   இருக்கும்.சினம்  அகன்ற   ஒருவரிடம்   அவர்   மனைவியும், மக்களும்  மற்றவர்களும்    எவ்வளவு    அன்போடும்  இனிமையோடும்   பழகுகிறார்கள்.   அவர்   குடும்பம்   எவ்வளவு   மகிழ்ச்சியாக   இருக்கிறதென்று   கவனித்துப்   பார்க்க   வேண்டும். அவரது     குடும்ப    உறுப்பினர்கள்   அனைவருமே  வெற்றிமேல்   வெற்றியாக   எல்லாத்   துறைகளிலும்    பிரகாசிப்பார்கள்.

     இதுதான்    சினத்தை   ஒழிக்கும்   முறை. இதில்   வெற்றியடைந்த   நாம்   நமது   நண்பர்களுக்கும்  மற்றையோருக்கும்     இந்த   முறையைப்   பரிந்துரை   செய்யவும்   வேண்டும்.

நன்றி...

என்றும் உங்கள் வானில் வளர்பிறையாய்...
அழகுநிலா...

1 comments:

வெற்றிக்கு விழிப்புநிலை.ஆகா விழிப்பின் புதிய வழிகள்.

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More