தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி வேண்டுமா..?


உங்கள் எழுத்தை உலகம் கவனிக்க வேண்டுமா..?
நிரந்தரமான வேலை வேண்டுமா..??

உங்களுக்கு தமிழில் சிறப்பாக எழுதும் ஆற்றல் உண்டா..?

இதோ அறிய வாய்ப்பு :-

 நமது தொழிற்களம் இணைய வலைத்தளத்திற்கு   முழு நேர  உதவி ஆசிரியராக பணிபுரிய தமிழகத்தின் மாவட்ட வாரியாக ஆட்கள்  தேர்ந்தெடுக்க படுகிறார்கள். மேலும் பகுதி நேர உதவி ஆசிரியர்களாக உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.



தொழிற்களம் உதவி ஆசிரியர் :

 தொழிற்களம்   வலைத்தளத்தில் நேரடி பகுதி / முழுநேர உதவி ஆசிரியர்களாக அங்கீகரம் பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  உங்கள் கற்பனை திறன், எழுத்து ஆற்றல் அனைத்தையும் உலகறிய செய்யும் மிகச் சிறந்த பணி வாய்ப்பு தான் தொழிற்களத்தின் உதவி ஆசிரியர் பணி. தொழிற்களத்தின் நேரடி உதவி  ஆசிரியராக அங்கீகரிக்கப்படும் அனைவரும் தங்களது மாவட்டங்களில் தொழிற்களத்திற்கான செய்திகள், கட்டுரைகள் சேகரித்து பதியலாம். அதன் மூலம் நிரந்தரமான மாத சம்பளத்தையும் மற்றும் ஊக்கத்தொகையையும் பெறுவார்கள். உங்களுக்கென்றே தொழிற்களத்தின்  தனி அடையாள அட்டையுடன் பணியை செய்யலாம். மேலும் அனைத்து வித சலுகைகளும் தொழிற்களத்தின் நேரடி பகுதி / முழு நேர பதிவர்களுக்கு வழங்கப்படும்.

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் மூன்று படி நிலைகளை கடந்து உங்களை நிலைநாட்டிக்கொள்வது மட்டும் தான்.

மூன்று படி நிலைகள் :-

  1. மாணவ பதிவர்
  2. பட்டதாரி பதிவர்
  3. ஆசிரிய பதிவர்
1. மாணவ பதிவர் :

   தொழிற்களம் குழுவால் உங்களை பற்றிய தெளிவை அறிவதற்காக முதல் பத்து பதிவுகள் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்படும். எனவே இந்த பதிவுகளின் அடிப்படையில் தான் உங்கள் அடுத்த படிநிலை உயரும்.

2. பட்டதாரி பதிவர் :

தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடரும் பதிவர்கள் தொழிற்களம் வழங்கும் தலைப்புகளின் கீழும், தனது சொந்த பதிவுகளையும் இட வேண்டும். தங்களது 100 பதிவுகள் முதல் மூன்று மாதத்தில் சிறந்த முறையில் எழுதபட்டிருப்பின் ஒவ்வொரு பதிவிற்கும் ரூ.30 முதல் ரூ.50 வரை ஊக்கத்தொகை  வழங்கப்படும். இந்த தொகை தங்களை சிறிது ஊக்கப்படுத்தட்டும் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.  சிறந்த அங்கீகரத்துடன் உங்களை நேரடியாக தொழிற்களத்தின் உதவி ஆசிரியராக நியமிக்கவே இந்த படிநிலைகள் என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுவீர்களேயானால் நீங்கள் தான் எமது குழு தேடும் சிறந்த நபர்.

3. ஆசிரியர் பதிவர்.

சிறப்பு பயிற்சியுடன் நேரடி பணி வாய்ப்பை பெற்று உதவி ஆசிரியராக நியமிக்கப்படுவார்கள், மாதம் ரூ.8000 ஊதியமாக பெறுவதற்கு தகுதி பெற்றவர்களே தொழிற்களத்தின் நேரடி முழு நேர உதவி ஆசிரியர் ஆவர். தனிப்பட்ட அடையாள அட்டையுடன் உங்களது மாவட்டத்திலேயே பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். மேலும் நேர்காணல் போன்ற சிறப்பு பதிவுகளுக்கு ரூ.250 முதல் ரூ.500 வரை ஒவ்வொரு சிறப்பு பதிவுகளுக்கும் சிறப்பு ஊக்கப்பரிசு என உங்களுக்கும் உங்கள் எழுத்திற்கும் அங்கீகாரம்  அளிக்க  மக்கள்சந்தை.காம் தளத்தின் சிறப்பு பிரிவான தொழிற்களம் தயாராக இருக்கிறது.

பகுதி / முழு நேர உதவி ஆசிரியர்கள் :

  • தமிழ் தெரிந்த எவரும்  தொழிற்களத்தின் நேரடி பகுதி நேர உதவி ஆசிரியராக பணியாற்றலாம்.
  • முழு நேர பதிவர்கள் வாகன வசதியுடன் வெளியே சென்று செய்திகள் சேகரிக்க கூடியவர்களாக இருக்க வேண்டும்,
  • முழு நேர பதிவர்கள் தமிழகத்தின் மாவட்டங்கள் அனைத்திற்கும் ஆட்கள் நியமிக்கப்படுவார்கள்.
  • முழு நேர பதிவர்கள் கல்வி தகுதி குறைந்த பட்சம் பட்டதாரியாகவும் வயது 20 முதல் 45 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்
  • முழு நேர பதிவர்கள்  ஆண் / பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
மேலும் சில தகவல்களுக்கு :

  • விண்ணப்பிக்கும் முறை
  • இணைப்பை  செயல்படுத்தும் முறை
  • பதிவிடும் முறை
  • பதிவை பிரபலபடுத்தும் முறை

உதவி ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் முறை பற்றிய கவனத்தில் வைக்க :

  • தினமும் உங்களது பங்களிப்பு எவ்வாறானது என்பதை குறித்தும்,
  • பின்னுட்டங்கள் வரும் விதத்தை அடிப்படையாகவும்
  • பின்னூட்டத்திற்கு நீங்கள் அளிக்கும் மதிப்பை பொறுத்தும்
  • ஏனைய தளங்களில் தொழிற்களத்திற்காக உங்கள் பங்களிப்பை பொறுத்தும்
  • சிறந்த எழுத்தாற்றலையும், கற்பனை திறனையும் பொறுத்தும்,
  • உங்கள் தனிப்பட்ட பங்கேற்புகளையும், அக்கறையை பொறுத்தும்,
  • வாசகர்களின் கருத்துக்களை பொறுத்தும்
உதவி ஆசிரியர்கள் பற்றிய தேர்வு அமையும்.

நிபந்தனைக்குட்பட்ட கருத்துக்கள் :

  • ஏனைய தளங்களில், அச்சுப்பிரதிகளில் வெளியான கருத்துகளை பிரதி எடுத்து பதிய கூடாது
  • தொழிற்களத்தில் பதிந்த தகவல்களை பிற தளங்களில் பதிய கூடாது
  • தொழில் தளத்தின் நோக்கம் அறிந்து அத்தகைய பதிவுகளை மட்டுமே பதியுங்கள்
  • மதம், அரசியல் மற்றும் யாரையும் புன்படுத்தாத வன்மம் அற்ற சொற்களை பயன்படுத்துங்கள்.
  • நேர்காணல் விசயமாக அரசு / தனியார் நிறுவனத்தையோ அல்லது தனிப்பட்ட நபரையோ சந்திக்கும் போது நீங்கள் தொழிற்களத்தின் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்
  • புகைப்படங்களை பகிரும் போது முடிந்த மட்டும் காப்புரிமை செய்யப்பட்ட படங்களை தவிர்த்திடுங்கள்
  • உங்கள் பதிவுகளில் தனிப்பட்ட இணைப்பை (லிங்க்) கொடுக்க வேண்டாம். கட்டாயம் தேவைப்படும் பட்சத்தில் மட்டும் கொடுங்கள்
  • உதவி ஆசிரியர் பணிக்கும் மற்ற மக்கள்சந்தை.காம்-ன் மற்ற பகுதி நேர வேலைகளுக்கும் எந்த இடையூறும் இல்லை. எனவே நீங்கள் மற்ற வேலைகளை தாராளமாக செய்யலாம். அது உங்கள் தனிப்பட்ட திறமையை பொருத்துள்ளது.
  பொதுவான சந்தேகங்களை பின்னூட்டம் வாயிளாக கேட்டு பதில் பெறுங்கள். அதனால் மற்றவர்களுக்கும் அந்த சந்தேகம் வருமாயின் தீர்த்து வைக்கப்படும் அல்லவா..?

மேலும் விபரங்களுக்கு :

தொழிற்களம் குழு

+91 95 66 66 12 14
+91 95 66 66 12 15

என்ற எண்ணிற்கோ அல்லது cpedenews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ தொடர்பு கொள்ளவும்.


விண்ணப்பிக்கும் முறை

    தொழிற்களம் தளத்தில் முழுநேர மற்றும் பகுதிநேர எழுத்தாளராக விண்ணபிப்பதற்கு கூகுள் பிளாக்கர் தளத்தில் உங்களுக்கென தனிப்பட்ட அக்கவுன்ட் இருக்க வேண்டும். உங்களுடைய தனிப்பட்ட வலைபூ வோர்ட்பிரஸ் தளத்தில் இயங்கிக் கொண்டிருந்தாலும், தொழிற்களம் தளத்தில் எழுதுவதற்கென்று பிளாக்கர் தளத்தில் அக்கவுன்ட் ஒன்று ஆரம்பித்து இருக்க வேண்டும்.

விண்ணப்பம் மின்அஞ்சல் மூலம் ஏற்றுக் கொள்ளப்படும். உங்களைப் பற்றிய சுய அறிமுகம் தெளிவாக இருத்தல் வேண்டும். சுயஅறிமுகத்தில் உங்களைப் பற்றியும் உங்கள் வலைபூ பற்றிய விபரங்களும் அடங்கி இருக்க வேண்டும்.  

உங்களை அறிமுகம் செய்யும் முதல்நபர் உங்கள் வலைபூ மட்டுமே, அதனால் வலைபூவிற்கான சுட்டியை(லிங்க்) மின்னஞ்சலில் தவறாது இணைத்திருக்க வேண்டும்.

மிக முக்கியமான விஷயம், தொழிற்களம் தளத்தில் எந்த விசயத்தைப் பற்றி எழுதப் போகிறீர்கள், எழுத ஆர்வமாக இருக்கிறீகள் என்பதை தெளிவு படுத்தியிருக்க வேண்டும். அதில் ஏதேனும் குழப்பம் இருப்பின் தொழிற்களம் தளத்தில் இயங்கி வரும் எழுத்தாளர்களின் பதிவுகளைப் படித்துப் பாருங்கள்.

விண்ணப்பத்தில் உங்கள் தொலைபேசி எண்ணை இணைத்திருக்க வேண்டும். விண்ணப்பம் பரிசீலிக்கப்படுவதை மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்துவோம், விண்ணப்பம்


     ஏற்றுக் கொள்ளப்பட்டதை உறுதி செய்ய தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்வோம்.

மின்னஞ்சல் முகவரி : cpedenews@gmail.com

மின்னஞ்சலில் குறிப்பிடப்பட வேண்டிய பொருள் : உதவி ஆசிரியர்  பணிக்கான  விண்ணப்பம்

வோர்ட் டாக்குமெண்டில் கீழ்க்கண்ட தவல்களை குறிப்பிட்டு அவற்றை  மினஞ்சலில் இணைத்து அனுப்புங்கள்.

1. உங்களைப் பற்றிய முழுவிபரம்

  • படிப்பவராயின் கல்விசார்ந்த, கல்விநிலையம் சார்ந்த விபரம்
  • பணிபுரிபவராயின்   பணி சார்ந்த, பணிபுரியும் இடம் சார்ந்த விபரம்
  • 2. சுயஅறிமுகம் (குறைந்தது ஐந்து வரிகள்)
  • 3. வலைப்பூ முகவரி
  • 4. எழுத விரும்பும் (அ) ஆர்வமிருக்கும் துறை
  • 5. உங்கள்  புகைப்படம் (பாஸ்போர்ட் சைஸ்)
  • 6. அடையாளச்  சான்றிதழ் ( குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பள்ளி கல்லூரி அடையாள அட்டை) ஒன்றை இணைத்து அனுப்புங்கள்.  

விண்ணப்பிக்கும் முறையில் ஏதேனும் குழப்பம் இருப்பின் பின்னூட்டம் மூலம் தொடர்பு கொள்ளுங்கள் தெளிவுபடுத்த காத்திருக்கிறோம்.

    உங்கள் விண்ணப்பம் எங்களுக்குக் கிடைத்ததும், எங்கள் குழு உங்கள் தளம் குறித்து பரீசிலனை புரியும். நீங்கள் ஏற்கனவே பதிவு எழுதுபவராய் இருந்தால் உங்களின் முந்தைய பதிவுகள் குறித்து ஆலோசனை செய்வோம். புதியதாய் வலைப்பூ தொடங்கி இருந்தீர்கள் என்றால், தொழிற்களம் குழு தரும் தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதி எங்களுக்கு அனுப்ப வேண்டும்.



பின்னர் தொலைபேசி வாயிலாக உங்களை அழைத்து உறுதி செய்துகொள்வோம். தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து தொழிற்களம் குழுவிடம் இருந்து மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்படும். இதில் தொழிற்களம் தளத்தில் நீங்கள் எழுதவதற்கான அனுமதி தரும் சுட்டி(லிங்க்) இணைக்கப்பட்டிருக்கும்.  உங்கள் பதிவுகள் பிளாகர் கணக்கின் மூலமாக தொழிற்களம் தளத்தில் பதியப்படும்.


மின்னஞ்சலில் காட்டபட்டிருக்கும் சுட்டியை இயக்கியவுடன், தொழிற்களம் தளம் வாயிலாக உங்கள் பதிவுகளைப் பதிய உதவும் பதிவேற்றி (DASH BOARD) உங்கள் பிளாக்கர் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும். தொழிற்களம் தளம் உங்கள் பிளாக்கர் கணக்கில் இணைந்திருந்தால், பின்வரும் படத்தில் காட்டியிருப்பதைப் போல் உங்கள் பிளாக்கர் கணக்கில் நீங்களும் காணலாம்.



தொழிற்களம் தளத்தில் இருந்து வரும் மின்னசல் SPAM இல் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒரு வேளை SPAM இல் இருந்தால், மின்னஞ்சல் முகவரியில் NOT FOR SPAM என்பதை தேர்ந்தெடுங்கள்.

வாருங்கள் எட்டுத்திக்கும் தமிழ் பரப்புவோம்.  


சிறந்த பதிவிடும் முறை பற்றி அறிய வேண்டுமா..?

  சிந்திக்கத் தெரிந்தவன் மனிதன். சிந்தனைகளை எழுதுக்களாக்கத் தெரிந்தவன் எழுத்தாளன். இருந்தும் பல வாசகர்களாலும் உங்கள் பதிவுகள் கவனிக்கப்பட வேண்டுமா? அப்படி என்றால் பதிவுகள் எழுதும் பொழுது நீங்களும் சில விசயங்களைக் கவனித்தாக வேண்டும்.

பதிவின் தலைப்பு

   பதிவிற்கான முதல் திறவுகோல் தலைப்பு மட்டுமே. பதிவிற்கு நீங்கள் தரும் தலைப்பைக் கொண்டே வாசகர்கள் உங்கள் மனதைப் புரிந்து கொள்வதாய் இருக்க வேண்டும். பதிவின் தலைப்பில் ஈர்ப்பு இருக்க வேண்டும். சிந்திக்கத் தூண்ட வேண்டும்.  அதே நேரத்தில் பதிவின் தலைப்பும் உங்கள் சிந்தனையின் கருவும் தொடர்புடையதாய் இருக்க வேண்டும். பதிவிற்கும் தலைப்பிற்கும் சம்மந்தம் இல்லாதிருப்பின் நாம் எவ்வளவு நல்ல கருத்துகள் எழுதி இருந்தாலும் அவை கவனிப்பாரற்றுப் போய் விடும். சில பதிவுகளின் தலைப்புகள் பதிவிற்கு சம்பந்தம் இல்லாமலும் ஆனால்  வாசகர்களை ஈர்க்கும் வல்லமை கொண்டிருக்கும். அத்தகைய சூச்சுமக் கலைகளில் கொஞ்சம் பயிற்சி பெற்றிருப்பின் தாரளமாக தலைப்பு கொடுக்கலாம்,, கவனிக்க, பதிவுடன் சம்பந்தமில்லாமல் இருந்தாலும் சம்பந்தபடுத்தி விடும் எழுத்தாற்றல் முக்கியம்.

எழுத்துருக்கள்  

FONT SIZE, FONT FACE, FONT STYLE FONT COLOR போன்றவற்றைத் தான் தமிழிலே எழுத்துருக்கள் என்று குறிபிடுவது வழக்கம். உங்கள் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் பிம்பங்கள் தான் எழுத்துகள். எழுத்துகளின் அளவு (SIZE), வடிவம் (FACE & STYLE ) மற்றும் நிறம் போன்றவற்றை பயன்படுத்துவதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

எழுத்தின்  அளவு தெளிவாக இருத்தல் வேண்டும்.அளவில் சிறிய எழுத்துகளை கணினித் திரையில் கூர்ந்து படிப்பது மிகவும் சிரமம், எழுத்தின் அளவு பெரியதாக பெரியதாக, அவை பதிவின் நீளத்தைப் பெரியதாக்குவது போன்ற மாயையை உருவாக்கி அலுப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளதால் சரியான எழுத்து அளவைப் பயன்படுத்துதல் நலம்.

    மிக மிக முக்கியமான விஷயம், எழுத்துக்களுக்கு நீங்கள் தரும் நிறம். வாசகர்கள் யாரும் அதிகமான நிறங்களை விரும்புவது இல்லை. நீங்கள் மேற்கோள் காட்ட விரும்பும் பகுதிகளுக்கு மட்டும் BOLD பயன்படுத்துங்கள். மிக்கியமான இடங்களில் எழுத்துகளுக்கு மட்டும் வண்ணம் கொடுங்கள். இரண்டு வண்ணங்களுக்கு மேல் மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

  • எழுத்துகளை வரிசை படுத்துவது மிக முக்கியம். பொதுவாக பத்திகளாகதான் பதிவுகள் அமையும் என்பதால் justfy கொடுங்கள்,
  • பத்தியின் முதல் வரியை சற்றே இடைவெளி விட்டு துவங்குங்கள்.  
  • ஒவ்வொரு பத்திக்கும் ஒரு வரி இடைவெளியும் கொட்டுங்கள்


     தொடர்புடைய செய்திகளைப் பற்றி கூறும் பொழுது அவைகளை வரிசைப்படுத்திக் கூறுங்கள். இதற்காகவே பல வகையான LIST உள்ளன. எந்தவகையான LIST உபயோகித்தால் ஏற்றதாய் இருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

உதாரணம் ஒன்று

மக்கள்சந்தை நிறுவனம்  மூன்று தளங்களில் இயங்குகிறார்கள் அவைகள்

  1. மக்கள்சந்தை (இணைய விற்பனைத்தளம்)
  2. தொழிற்களம் ( தமிழ் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் தளம்)
  3. தமிழ்ப்பதிவர்கள் ( தமிழ்பதிவர்களின் கருத்துக்களை திரட்டும் தளம்)
உதாரணம் இரண்டு

மக்கள்சந்தை நிறுவனம்  மூன்று தளங்களில் இயங்குகிறார்கள் அவைகள்

  • மக்கள்சந்தை (இணைய விற்பனைத்தளம்)
  • தொழிற்களம் ( தமிழ் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் தளம்)
  • தமிழ்ப்பதிவர்கள் ( தமிழ்பதிவர்களின் கருத்துக்களை திரட்டும் தளம்)
புகைப்படங்கள்

 நம் எண்ணங்களை மெருகூட்டுவதில் புகைப்படங்களும் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. பதிவிற்கு தேவையான, தொடர்புடைய படங்களை இணைப்பதன் மூலம் வாசகர்களின் மனதை நீங்கள் கவர்ந்து விடலாம். ஏராளமான நல்ல புகைப் படங்கள் இணையத்தில் போதுமான அளவு கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கும் நிழற்படம் உங்கள் பதிவிற்கு சிறந்த அங்கீகாரம் அளிக்கும். முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் நீங்கள் எடுக்கும் நிழற்படங்கள் உங்கள் பதிவுகளை அலங்கரிக்கட்டும். காப்புரிமை பெறப்பட்ட புகைப்படங்களை தவிருங்கள்.

 இணையத்திலோ அல்லது உங்கள் கணினியிலோ  உள்ள படங்கள் சேமிக்கும் போது பெயர்களை சரியாக கொடுங்கள். அவசரத்தில் பெரும்பாலானோர் 12345 என்று ஏதவது எண்களிலோ அல்லது aaa, asdfgg என்றவாறான கைக்கு வசமான எழுத்துகளையோ கொடுத்து சேமித்து அதை அப்படியே பதிவிலும் உள்ளீடு செய்வார்கள்.. இதனால் தேடுபொறிகளில் தேடும் போது உங்கள் பதிவும் அதன் புகைப்படமும் முன் வருவதில் சிக்கல் உண்டாகிறது. எனவே சரியான பெயரை சேமியுங்கள்.

புகைப்படங்களை இணைக்கும் பொழுது அவற்றின் அளவுகளைக் (IMAGE SIZE) கையாளுவதில் கவனம் செலுத்துங்கள். இணைய இணைப்பில் வேகம் குறையும் தருணங்களில் புகைப்படங்கள் தரவிறக்கமாக (IMAGE DOWNLOAD) அதிகம் நேரம் எடுத்துக் கொள்ளும். இது வாசகர்களை எரிச்சலடையச் செய்யலாம். சமயங்களில் பதிவுகளைப் படிக்காமல் கடந்து செலவும் வழி செய்யலாம்.

குறிசொற்கள் (LABELS)

பதிவுகளின் தலைப்பும், கருத்துக்களும் பல வாசகர்களைத் தேடித் தருமென்றால், குறிசொற்கள் உங்களைப் பற்றி அறியாத பல வாசகர்களைத் தேடித் தரும் வல்லமை உடையது. அதே நேரத்தில் எப்போது எங்கே யார் தேடினாலும் உங்கள் பதிவுகளைத் தேடத் தரவல்லது. உங்கள் பதிவுகேற்ற குறிசொற்களை பயன்படுத்துவது தான் உங்கள் திறமை. ஒரு பதிவிற்கு ஒன்றிற்கும் மேற்பட்ட குறிசொற்களை உபயோகிக்கலாம். பதிவேற்றப்படும் படங்களுக்கும் தலைப்பு சார்ந்த பெயர் கொடுங்கள். அதன் பலன் உங்களை அறியாமல் உங்களை வந்து சேரும்.

உதாரணத்திற்கு கணினி சம்மந்தமான தொழில்நுட்பம் பற்றியும், அந்தத் துறை சார்ந்த வேலைவாய்ப்பு பற்றியும் எழுதுகிறீர்கள் என்றால் உங்கள் பதிவிற்கு கணினி, தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு போன்ற குறிசொற்களைப் பயன்படுத்தலாம். உங்களை அறியாமல் உங்கள பதிவுகளை விளம்பரம் செய்வதில் குறிசொற்கள் பெரும்பங்காற்றுகின்றன என்பதால் அவைகளைக் கையாளுவதிலும் கவனமாக இருங்கள்.

 தொழிற்களத்தில் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் லேபில் எனும் குறிசொற்களை பயன்படுத்துங்கள். புதிய குறி சொற்களை இட வேண்டாம். தேவைப்படும் பட்சத்தில் குறிசொற்களை  (Permanent Link)  எனும் வசதி மூலம் கொடுங்கள்


திட்டமிடல் (SCHEDULE)

பிளாக்கர் நமக்கு அளித்திருக்கும் மற்றுமொரு சிறந்த கருவி Scheduling. சிலசமயங்களில் வேலைப்பளு காரணமாக உங்களால் தொடர்ந்து பதிவெழுத முடியாமல் போகலாம். சிறிது நாட்கள் கழித்து, ஒரே நாளில் பல பதிவுகளை எழுதும் வாய்ப்பு கிடைக்கலாம். எந்த ஒரு வாசகரும் ஒரு எழுத்தாளரின் ஒன்றிற்கும் மேற்பட்ட பதிவுகளைப் ஒரே நேரத்தில் படிப்பதற்கு விரும்ப மாட்டார்கள். இந்தக் குறையைப் போக்கவே SCHEDULE நமக்கு உதவுகிறது. இந்த நாள், இந்த நேரம், இந்த நிமிடம், குறிப்பிட்ட பதிவு பதியப்பட வேண்டும் என்று ஒழுங்குபடுத்தி விட்டால் போதும் மற்றதை SCHEDULE பார்த்துக்கொள்ளும்.

PERMALINK (Permanent Link)

பிளாக்கர்  நமக்கு வழங்கும் மற்றுமொரு உதவி தான் இந்த PERMALINK (Permanent Link). உங்கள் பதிவை பதிவேற்றுவதற்கு  முன் நீங்கள் கவனிக்க வேண்டிய மற்றுமொரு விஷயம். இரு விதங்களில் நம்முடைய URL  முகவரியை தேர்ந்தெடுக்கலாம்.   முதல் முகவரி, பிளாக்கர் தன்னிச்சையாக தேர்ந்தெடுத்துத் தருவது. இரண்டாவது நம்முடைய பதிவு சார்ந்த முகவரியை நாமே தேர்ந்தெடுப்பது. உங்கள் பதிவிற்க்கான அடித்தளம் URL என்பதால், இதைத் தெரிவு செய்வதில் மிகக் கவனமாக இருங்கள். கீழ்க்கண்ட படத்தில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கும்.  


URL சிறிய விளக்கம் :
முன்பு : http://tk.makkalsanthai.com/2012/08/blog-post_5052.html
பின்பு : http://tk.makkalsanthai.com/2012/07/today-coffee-tips.html

முக்கியமான விசயம் இதில் நீங்கள்  Custom URL  கொடுக்கும் முன்பு பதிவை வெளிவிட்டு விட்டால் திரும்ப கொடுக்க முடியாது. எனவே கவனமான அனைவரும் தேடும் குறிசொற்களை ஆராய்ந்து உங்கள் பதிவின் முகவரியை பதியுங்கள்

சிவப்பு  வண்ணத்தில் காண்பிக்கப்பட்டிருக்கும் விதத்திலேயே அதன் பயன் கூகிள் போன்ற தேடு பொறிகளில் எவ்வாறு முதன்மை  பெறுமென்பதை உங்களுக்கு உணர்த்தும்  என்று நம்புகிறோம். மேலும் விபரங்கள் தேவைப்படுமாயின் பின்னூட்டம் வழியாக கேளுங்கள் நண்பர்களே...

சோதனை ஓட்டம்

  இது சற்றே அலுப்பு தரும் விஷயம் தான், ஆனால் இந்தச் சோதனை ஓட்டம் தான் நம்மை அறியமால் நாம் செய்த தவறுகளை திருத்திக் கொள்ள முயலும். பதிவு முழுமையடைந்த பின்னர், முதலில் இருந்து இறுதி வரை மீண்டும் ஒரு முறை நிதானமாகப் படியுங்கள். நிச்சயமாக பல இடங்களில் எழுத்துப் பிழைகள் மற்றும் வாக்கியப் பிழைகள் இருக்கும், களை எடுங்கள். இல்லையேல் அவை பதிவு முழுமையையும் அர்த்தம் இல்லாததாக்கிவிடும். சோதனை ஓட்டம் செல்ல மட்டும் தயங்காதீர்கள்.

முறையான பதிவொன்று எழுதுவதில் இன்னும் இன்னும் உங்களுக்கு கேள்விகள் சந்தேகங்கள் எழலாம், தயங்காதீர்கள் கேளுங்கள் தெளிவுபடுத்தக் காத்திருக்கிறோம். நாங்கள் கூறிய கருத்துக்களை விடவும் சிறந்த கருத்துக்கள் உங்களிடம் இருக்கலாம், பகிர்ந்து கொள்ளுங்கள், பதித்துக் கொள்கிறோம்.

  வாருங்கள் எழுத்தாளர்களே தொழிற்களம் உங்களுக்கான களம் அமைத்துக் காத்திருக்கிறது. சாதனை புரிவோம், அதையும் தமிழ்த்தாய் அருள் கொண்டு புரிவோம்.

ஆர்வத்துடன்
தொழிற்களம்   





2 comments:

Naan erkanave en vibarangalai anuppi vaithullen. ippothu marupadium vinnappikka venduma?

தல,முதல்ல அடையாளஅட்டையை அனுப்புங்க.பல செய்திகள் வரிசையில் இருக்கு...?

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More