வெற்றி நிச்சயம் !!

வெற்றி என்னும் நோக்கத்தை மட்டும் மனதில் வைத்து போட்டியில் பங்கு கொண்டால்  வெற்றி பெறுவது எளிது...

 நம்பிக்கை இருந்தால், எத்தகைய போட்டி என்றாலும் வெற்றி பெறலாம் கைகள் களைப்பின்றி   வேலை தொடங்கினால்
கழுத்துக்கு வந்து சேரும் வெற்றி மாலைவாழ்க்கையில் சாதனையாளர்களின் சரித்திரத்தைப் பார்த்தால் அவர்கள் நிறையத் தோல்விகளைச் சந்தித்து அவற்றை யெல்லாம் கடந்துதான் வெற்றியடைந்திருக்கிறார்கள். சாதாரண மனிதர்கள் தோல்விகளால் தன் முயற்சியிலிருந்து பின் வாங்கி விடுகிறார்கள்.

இதனை வள்ளுவர்

“இடைக்கண் முறிந்தார் பலர்!” என்பார்.


வெற்றியார்கள், சாதனையாளர்கள், தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள் அடைந்த பலன்கள் – பயன்கள் நிறையவே சொல்லப்பட்டிருக்கிறது. எழுதப்பட்டிருக்கிறது. 

ஆனால் அவர்கள் பட்ட கஷ்டங்கள், தோல்விகள், தூக்கம் கெட்ட இரவுகள், அவமானங்கள், சிந்திய வியர்வை இவற்றைப் பற்றிச் சிறிதளவே சொல்லப்பட்டு இருக்கிறது.


எத்தனையோ வெற்றியாளர்கள் தனிப்பட்ட முறையில் அவர்கள் சந்தித்த தோல்விகளும், கஷ்டங்களும், நஷ்டங்களும் ஏராளம், ஏராளம்.


பெரிய வெற்றி வேண்டுமானால்…

வெற்றியின் அளவு பெரியதாக இருக்க இருக்கப் போராட்டங்களும் பெரிதுதான். கட்டிடத்தின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க அதன் அஸ்திவாரத்தின் ஆழமும் அதிகம். 


அஸ்திவாரம் தோண்டிக் கொண்டிருக்கும் பொழுதும், அதனுள்ளே சுவர் எழுப்பிக் கொண்டிருக்கும் பொழுதும் வெளி உலகுக்குத் தெரியாது. 

அந்தச் சமயத்தில் வெளி உலகம்  கேலி செய்யலாம். அல்லது மதிக்காமல் இருக்கலாம். 

அவர்கள் பார்வையில் கட்டிடம் மேலே வந்தால்தான் வெற்றி என்று நினைப்பார்கள்.

நினைத்த வெற்றி- நினைத்த குறிக்கோளை அடையும் வரை மீண்டும், மீண்டும் தொடர் முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும். ‘

எத்தனை தோல்விகள் வந்தாலும் காரணத்தைக் கண்டுபிடித்து வெற்றியடையாமல் விட மாட்டேன்’ என்றமன உறுதி உடையவர்களுக்கு வெற்றி நிச்சயம். 


வெயிலிலிருந்து நிழலுக்குப் போனால் சுகம். இருளிலிருந்து ஒளிக்குப் போனால் சுகம். இப்படித் தோல்வியடைந்து – சங்கடமடைந்து வெற்றிபெற்றால் அதனுடைய சந்தோஷமே தனிதான்.8 comments:

இன்னும் கொஞ்சம் ஆழமாக விரிவாக சொல்ல வேண்டியதை மிகவும் சுருக்கமாக கூறியிருக்கிறீர்கள்.

மிக அருமை....

வணக்கம் தினபதிவு திரட்டி உங்களை வரவேற்கின்றது


தினபதிவு திரட்டி

உண்மையான கருத்துக்கள்...

இது போல் தொடர வாழ்த்துக்கள்...

sivalingamtamilsource said...
இன்னும் கொஞ்சம் ஆழமாக விரிவாக சொல்ல வேண்டியதை மிகவும் சுருக்கமாக கூறியிருக்கிறீர்கள்.

கருத்துரைக்கு நன்றிகள்..

தினபதிவு said...
மிக அருமை....

வணக்கம் தினபதிவு திரட்டி உங்களை வரவேற்கின்றது


தினபதிவு திரட்டி


வரவேற்புக்கு நன்றிகள்..

திண்டுக்கல் தனபாலன் said...
உண்மையான கருத்துக்கள்...

இது போல் தொடர வாழ்த்துக்கள்...//

வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

ஆசைகளின் அளவுகளை குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.அதுவே வெற்றியின் முதல்படிக்கு அழைத்துசெல்லும்...

மதுரகவி said...
ஆசைகளின் அளவுகளை குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.அதுவே வெற்றியின் முதல்படிக்கு அழைத்துசெல்லும்...

Thank you...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More