தீ மூட்ட வேண்டுமா? தண்ணீர் போதும்!

 

 

 தீ மூட்ட வத்திக் குச்சி தான் வேண்டும் என்றில்லை. உங்களிடம் தண்ணீர் மட்டும் தான் இருக்கிறது என்றால் அது போதும். தண்ணீரை ஒரு கோள வடிவில் ஆன பிளாஸ்டிக் பையில் நிரப்பி அதை ஒரு காகிதத்தின் மீதோ அல்லது நன்கு தீ பற்றிக் கொள்ளக் கூடிய பொருளின் மீதோ ஒரு குவி லென்ஸ் போல சூரிய ஒளியைகுவியச் செய்து தீ மூட்டலாம்.  வீட்டிலும் பயன் படுத்தலாம் எங்காவது வெளிப் புற தங்கலின்(outdoor camping)  போதும் பயன் படுத்தலாம். தீ மூட்டப் படும் பொருளின் மீது தண்ணீர் சொட்டமால் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது  கவனத்தில் இருக்க வேண்டும். கோள வடிவில் பை இருக்காது என்பதால் அதை கோள வடிவுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று வெள்ளைக் காகிதத்தைக் காட்டிலும் ஒளியை உறிஞ்சிக் கொள்ளும் கருப்பு வண்ணங்கள் உள்ள காகிதம் சீக்கிரம் பற்றிக் கொள்ளும் என்பதால் கருப்பு வண்ணங்கள் உள்ள காகிதத்தை பயன் படுத்துவது நல்லது.

 உயர் தொழில் நுட்பம் எதுவும் என்றி இயற்கை சக்திகளை பயன் படுத்துவதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

4 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More