தமிழர்களின் வாழ்வில் வெற்றியைத் தந்த வெற்றிலை.

இந்திய மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று, வெற்றிலை. அது நல்ல தருணங்களின் சின்னம். திருமணம், வழிபாடு முதலியவற்றில் முக்கிய இடம் பெறுவது வெற்றிலை. சுபகாரியங்களில் வெற்றிலை `தாம்பூலம்’ என்ற சிறப்புப் பெயர் பெறுகிறது.

1500 ஆண்டுகளுக்கு முன்பே வெற்றிலை போடும் பழக்கம் இருந்து வந்திருப்பதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. பண்டைக் காலத்துப் பெண்கள் தமது அழகுப் பொருட்களில் வெற்றிலைக்கு முக்கியமான இடத்தைக் கொடுத்தனர். பல கவிஞர்கள் வெற்றிலையின் புகழைப் பாடியிருக்கின்றனர். ஆகவே இறவாத இலக்கியங்களிலும் வெற்றிலை இடம்பெற்றிருப்பது அதன் சிறப்பைக் காட்டுகிறது. 

வெற்றிலை வெப்பம் தரும்; உமிழ்நீர் பெருக்கும்; பசியை உண்டாக்கும்; பால் சுரக்க வைக்கும்; காமத்தைத் தூண்டும்; நாடி நரம்பை உரமாக்கும்;
நறுமணம் அளிக்கும். ஒரிசாவில் சில பகுதிகளில் பெண்கள் குழந்தைகள் பிறக்காமல் தடுக்கச் சிறிது வெற்றிலை வேரையும், மிளகையும் சம அளவு வைத்து அரைத்து 40 நாட்கள் சாப்பிட்டு வருகிறார்கள்.இது ஒரு சிறந்த கருத்தடை மருத்து. வெற்றிலை வாயிலிட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவேதான் இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

'

பொதுவான குணம். சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும்.

வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும்.

வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.

குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.

வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.

குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.

வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும்.

கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கோடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும்.
 

வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். சிறப்பாக இதை இரவில் கட்டுவது நல்லது.

சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். 5 கிராம் சூரணம்+10 மி.லி. வெற்றிலைச்சாறு தேன் 10 கிராம் கலந்து காலை, மாலை நோயிக்குத் தக்க வாறு 48-96 நாள் சாப்பிட வேண்டும்.

குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும்.

வெற்றிலைச் சாறு நான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் வலி குணமாகும்.

விடாது மூக்கில் ஒழுகும் சளிக்கும் வெற்றிலைச்சாற்றை மூக்கில் விட குணமாகும்.

வெற்றிலைக்கு ஆன்மிகத்தில் அதிக இடமுண்டு. கம்பராமாயணத்தில்
ராவணனால் சிறை எடுக்கப்பட்ட சீதை, அசோக வனத்தில் அனுமனை அருகில் இருந்த வெற்றிலைக்கொடியின் இலையை பறித்து அனுமனின் தலையில் இட்டு வெற்றி பெற வாழ்த்தியதாக கம்பர் கூறுவார்,, ஆகவே அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து பிரார்த்திக்கும் வழக்கம் வந்தது.. இளம் வெற்றிலையை யார் மடித்துக் கொடுக்க ராமன் உண்பான்’ என்று வருந்தியதாக ஒரு காட்சி உண்டு.

வெற்றிலை வெறும் இல்லை மட்டுமன்று; மூலிகை மட்டுமன்று. .அது மிகுந்த சமூக மதிப்பு வாய்ந்தது. தமிழர் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தது அந்தக்காலத்தில் மன்னர்கள் தொடர்ந்து வெற்றிலையைத் தாம்பூலமாகப் பயன்படுத்தினர் அந்த வெற்றிலையை மடித்துக் கொடுப்பதற்காக அமைச்சர் மதிப்பில் ஓர் அதிகாரியும் அருகில் இருப்பார் .அவருக்குச் சில சமயம்
அமைச்சரை விட மதிப்பு அதிகம் உண்டு; அவருக்கு பெயரே அடைப்பக்காரர். அரியநாயகம் என புகழ்பெற்ற மதுரை நாயக்கர் முதலில் கிருஷ்ணதேவராயரிடம் அடைப்பக்காரராக இருந்ததாகக் கூறப்படுகிறது .எந்த ஒரு செயலுக்கும் அச்சாரம் போடுவதற்கு வெற்றிலை பாக்குக் கொடுத்து விட்டால் போதும்; அதுவே ஒப்பந்தம் ஆன மாதிரிதான். இன்றும் கூட திருமண நிச்சயத்தை வெற்றிலை பாக்கு (தாம்பூலம்) மாற்றிக்கொள்வது என்றுதானே கூறுகிறோம் . நமது சமூக வாழ்வில் அத்தனை மதிப்பு வெற்றிலைக்கு உண்டு .தமிழர்களிடையே எந்த முக்கியமான வைபவமாக இருந்தாலும் வெற்றிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வெற்றிலை இல்லாமல் எந்த சுப காரியமும் தமிழர் வாழ்வில் இல்லை; வெற்றிலை இல்லாத கடவுள் வழிபாடும் தமிழர் வாழ்வில் இல்லை . ஏன் என்றே தெரியாமல் தொடர்ந்து வழக்கமாக நாம் வெற்றிலையை நமது வாழ்வின் அத்தனை செயல்களிலும் உபயோகித்து வருகிறோம். கடவுளை மறுப்போர் கூட இதை ஏன் என்று கேட்கவில்லை வெற்றிலை என்பதே பன்மைதான்;




4 comments:

வெற்றிலையின் சிறப்புக்கள்...

படமும் பகிர்வும் அருமை...

நன்றி...

வெற்றிலையில் இத்தனைமருத்துவ குணங்களா!

எத்தனை எத்தனை மருத்துவ குணங்கள்!

வெற்றிலைக் கொடி வீட்டிற்கும் அழகு சேர்க்கும்.

வெற்றிலையைப் பற்றி மிகச் சிறப்பாக எழுதிவிட்டீர்கள். அந்தக் காலத்தில் பிரசவித்த பெண்ணுக்கு கட்டாயமாக சாப்பிட்டபின் வெற்றிலையை கொடுப்பார்கள். தாய் சேய் இருவர் நலனும் வெற்றிலையில் காக்கப் படும். இப்போது அதெல்லாம் இல்லவே இல்லையே!

பாராட்டுக்கள்!

வெற்றிலை பற்றிய நிறைய தகவல்கள் அறிய கொடுதமைக்கு  மிக்க நன்றி.(ஆன்ராயிட் ஜெல்லி பீன்ஸ் முலம் கூகள் ற்றேன்சிலட்டர் பாவித்து எழுதியது.)

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More