முயற்சி திருவினையாக்கும்


அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் 
பெருமை முயற்சி தரும்.


நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல்,அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்

முயற்சி திருவினையாக்கும்
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்:


முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை 
இன்மை புகுத்தி விடும்.


முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.


முயற்சி என்னும் தாரக மந்திரத்தை நாள்தோறும் உபயோகிப்பவர்களுக்கு வாழ்கையில் எந்த கஷ்டங்களும் இல்லை 

மனிதன் என்பதே முயற்சியின் மொத்த உருவம் மனிதனால் முடியாதது ஒன்றும் இல்லை

பலமுறை முயற்சி செய்தால் ஒரு செயலை வெற்றிகரமாக முடிக்கலாம். 


அடி மேல் அடி வைத்தால் அம்மியும் தகரும்:


நம்பிக்கையோடு முயற்சி செய்பவர்களால் கல்லையேக் கரைக்க முடியும் என்னும்போது மனிதனால் முடியாதது வேறு ஏதேனும் இருக்கமுடியுமா என்ன !

சாதாரண எறும்புகளே கல்லையே தேய்க்கும்போது மனிதர்கள் முயன்றால் மலையையே சாய்க்கலாம். 

எறும்பூரக் கல்லும் தேயும்:


 வாழ்க்கையில் தோல்விகளை கண்டு துவளாமல் வெற்றியை அடையும்வரை முயன்று வெற்றி வாகை சூடுவோம்...

வாழ்க்கை என்னும் சொல்லின் முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் இணைந்தால் வாகை என்று நமக்கு நம்பிக்கை த்ருகிறதே !

வெற்றி வாகை சூட முயற்சி செய்து வாழ்வில் வெற்றி பெறுவோம்...
பறவைகள், விலங்கினங்கள், பூச்சியினங்கள் போன்ற பலவும் மனிதனுக்கு வாழ்வியல் கற்றுத்தருகிறது. சில ஞானம் போதிக்கிறது. பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்- என்ற பாடல் வரிகளைப் போல் மனிதனின் எத்தனையோ படைப்புகளின் பின்னால் பறவை, விலங்கினம், பூச்சியினம் போன்றவை வழிகாட்டியாக அமைந்ததுண்டு. சமூக கட்டமைப்பை, எடுத்துக்கூறும் எறும்புகளின் வாழ்வியல். அதேபோல் தேனீக்களின் உழைப்பு. இப்படி எத்தனையோ பூச்சியினங்கள் கூட, நமக்கு வழிகாட்டும் தகுதி பெற்றவையே.
பயணமே பறவைகளின் அடையாளம். பறவைகளில் பல மேப் இல்லாமல் வான்வெளியில் பல்லாயிரம் மைல்கள் கடந்து இலக்கை நோக்கி வந்து செல்கின்றன. வாழ்நாள் முழுதும் ஆண்டுதோறும் இத்தகைய நீண்ட பயணங்கள் நடைபெறுகிறது.   பறவையின் பயணம் தலைமுறை தலைமுறையாக தொடருகிறது.

உலகில் மனிதனுக்கு மேலாக உயிரினங்கள் வாழ்வதற்காக, கடும் போராட்டங்களைச் சந்திக்கிறது. அதைவிட தன் சந்ததியினரை உருவாக்கிட அவை கடந்து வரும் அபாயங்கள் ஏராளம்

முயற்சி என்ற விதைகளை விதைத்துக்கொண்டே இரு. நிச்சயம் ஒரு நாள் ஏதாவது ஒரு விதையிலிருந்து வெற்றி எனும் கனி கிடைக்கும். முயற்சிகள் தோல்வியடைவது குறித்து மனம் கலங்காதே. முயற்சிக்காமல் சும்மா இருப்பதைவிடமுயற்சிசெய்வதே மேலானது.''


"விதைகள் எல்லாவற்றிலிருந்தும் மரம் வருமா என்பது சந்தேகம்தான்""

நாம் முயற்சிக்கும் எல்லாமே வெற்றி பெறும் என்று நினைப்பது தவறுதான்

READING CAT gif

dog and cat gif


READING CAT gif


spy cat gif

godzilla cat gif

5 comments:

arumaiyaana padangal..

thakavalkal....

Seeni said...
arumaiyaana padangal..

thakavalkal....

கருத்துரைக்கு நன்றிகள்..

படங்களுடன் சிறப்பான பகிர்வு...

நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...
படங்களுடன் சிறப்பான பகிர்வு...

நன்றி...

சிறப்பான கருத்துரைக்கு நன்றிகள்..

நம்புங்கள் நம்மால் முடியும்.விதை அனைத்தும் மரம் ஆகும்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More