காற்று மின்சக்தியும் சூரிய மின்சக்தியும் ஒரே இடத்தில் தயாரிப்பு!
 


காற்று மின்சக்தி சக்தி தயாரிக்க பெரிய மின்விசிறி இறக்கைகள் போன்ற காற்று டர்பைன்களும் சூரிய மின்சக்தி தயாரிக்க சூரிய மின் கலன்கள் கொண்ட சூரியப் பலகைகளும் பயன் படுத்தப் படுகின்றன. காற்று மின் சக்தி டர்பைன் கம்பத்திலையே சூரியப் பலகையையும் இணைத்து விட்டால்? காற்று மின் சக்தி, சூரிய மின் சக்தி இரண்டுமே ஒரே நேரத்தில் இடத்தில் கிடைக்கும். மிக கச்சிதமான சிறிய அளவுள்ள காற்று மின் சக்தி தயாரிக்கும் டர்பைன்களை வடிவமைத்துள்ள ஸ்கை ஸ்ட்ரீம் நிறுவனம் இப்படி ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறது

சூரிய சக்தி காற்று சக்தி இரண்டும் ஒரே சமயத்தில் வலுவாக இருக்காது. ஒன்று நல்ல வெயில் ஆக இருக்கும் அல்லது காற்று நல்ல வலுவாக இருக்கும். இரண்டும் ஒரே சமயத்தில் நன்கு அமைவதும் உண்டு. இந்த ஏற்ற இறக்கங்களால் பாதிக்கா வண்ணம் மின்சக்தி தயாரிக்க இந்த மாதிரியான இணைந்த அமைப்பு உதவும். இதில் இருக்கும் சூரியப் பலகையை சூரியனுடைய திசைக்கேற்றவாறு சுற்றிக் கொள்ளலாம் இதனால் சாதாரண சூரிய பலகைகளை காட்டிலும்  35  சதம் அதிக மின்சக்தி தரக் கூடியது இது 

5 comments:

அவசியமானது;அவசரமானது

thevai arinthu paarattiayatharkku nanri

மிக மிக தேவையான பகிர்வுக்கு நன்றி...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More