தரணி ஆளும் தன்னம்பிக்கை





தன்னம்பிக்கை நிரம்பியவன் தரணி ஆள முடியும் !!!
தனம்பிக்கை தடைகல்லை உடைத்தெறியும் வெடிக்கல்லாகும்.
தன்னம்பிக்கையே ஒருவர் வாழ்வின் முதல் மூலதனம்.

தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெற முடியும்
தன்னம்பிக்கை உள்ளத்தில் வளர்த்துக் கொண்டு, பிறருடன் பேசும் பொழுது, பேசுபவரது கண்களை நேருக்கு சேர் சந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும். 
தன்னம்பிக்கை உணர்வை வளர்த்துக் கொள்வதே வெற்றியின் முகவரி....
!பாராட்டு என்பது மிகச் சக்தி வாய்ந்த ஊக்குவிப்பான்

செல்லுமிடமெல்லாம்...சிறப்புத்தான்..தேடித்தரும் தன்னம்பிக்கை !
தன்னம்பிக்கை உடையவர்களுக்கு...

வெற்றியின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.

தன்னம்பிக்கை என்பது உயிர் மூச்சாகும். உயிரில்லாதவன் பிணத்திற்கு 
சமம் என்பதுபோல் தன்னம்பிக்கை இல்லாதவன் 
உயிரற்ற ஜடத்திற்கு இணையாக கருதப்படுவார்கள்.
நாம் எப்போதும் நம்மை ஒரு வெற்றியாளனாக அடையாளப் படுத்திக்கொள்வதோடு எந்த வொரு சந்தர்ப்பத்திலும் நம்பிக்கையை முக்கியமாக முதன்மைப்படுத்திக்கொள்வது நம்மை தன்னம்பிக்கையாளராக மாற்றும் வலிமை படைத்தது....
ஆர்வத்துடன் தினமும் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு அறிவையும், செயல் திறமையையும் வளர்த்துக்கொண்டு வருவது மிகவும் அவசியம் !
தங்களை நோக்கி எதிர் வரும் பிரச்சினைகளை சவால்களாக ஏற்றுக்கொண்டு அவைகளுடன் உடனே நேரடியாக மோதி அவைகளை வெற்றிக்கொள்ளும் சக்தியைத்த்ருவது தன்னம்பிக்கையே !!

 என்னால் முடியுமா என்று மலைக்காமல் , முடியவில்லை என்றால் இயல்பாக அதை ஒதுக்கி விடுவதே சாலச்ச்சிறந்தது...

மண்ணுக்குள் புதைத்தாலும் விண்ணை நோக்கி வளரும்
வேகத்துடன்  மண்ணைப் பிளந்து
வெளியேறும் விதைக்குள்  இருப்பது  தன்னம்பிக்கை.!!

!





6 comments:

படங்களும் பகிர்வும் அட்டகாசம்...

நன்றி அம்மா...

திண்டுக்கல் தனபாலன் said...
படங்களும் பகிர்வும் அட்டகாசம்...

நன்றி அம்மா...

கருத்துரைக்கு நன்றி ...

வாழ்வில் வெற்றி பெறுவதற்கு நல்ல வழிகாட்டி தன்னம்பிக்கை தான் உங்களின் பதிவு அருமை.

தொழிற்களம் குழு said...
வாழ்வில் வெற்றி பெறுவதற்கு நல்ல வழிகாட்டி தன்னம்பிக்கை தான் உங்களின் பதிவு அருமை.//

கருத்துரைக்கு நன்றி ...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More