காலம் பொன் போன்றது


எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். 
தைரியமாகவும் இருக்க பழகிடுங்கள்.
பொறுமையும், விடா முயற்சியும் நமது நல்ல நண்பர்கள். 
எப்போதும் இவற்றுடனேயே இணைந்திருக்கப் பழகுங்கள்.
இதையெல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி உறுதி என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

நம்மை இயக்கிக்கொண்டிருப்பது காலம்தான்..

ஒவ்வொரு நாளையும் தொடங்கும்போது திட்டமிட்டுச் செயல்படுபவர்கள் அதன் பலனை அடைய முடியும். எந்தவித திட்டமும் இல்லாமல் தொடங்கினால் குழப்பம்தான் மிஞ்சும்

நமது நேரத்தை எவ்வளவு சிறப்பாகப் பயன்படுத்தப் போகிறோம் என்பதில்தான் இருக்கிறது நேரத்தின் பயன்பாட்டைப் புரிந்து கொண்டால் வெற்றியின் வாசல் படியைத் தொட்டுவிட்டோம் என்று பொருள்.

ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் அடிப்படையாக அமைவது காலம் என்ற மூலதனம். 

உண்மையிலேயே சரியாக ஆராய்ந்து பார்த்தால் அனைவருக்கும் வியப்பளிக்கக் கூடிய விஷயம், ஏழை, பணக்காரர், அறிவாளி, கல்வியறிவு இல்லாதவர் என்று அனைவருக்கம் சமமாக அளிக்கப்பட்ட ஒன்றே காலம் . 

அதை யாரும் ஒருவரிடம் இருந்து எடுக்க முடியாது. திருடவும் முடியாது. யாராலும் ஒவ்வொரு நாளும் 24 மணி நேரத்திற்கு மேல் விலைகொடுத்தும் வாங்க முடியாது.
uccess
சவாலாக எடுத்துக் கொண்டால் குறை என்று கருதும் எதையும் சாதகமாக ஆக்கிக் கொள்ள முடியும்.

வாழ்க்கை என்கிற கடிகாரத்திற்கு ஒரு முறைதான் சாவி கொடுக்கப்படுகிறது. 

அந்தக் கடிகாரத்தின் முட்கள் சீக்கிரமே நின்று போகுமோ அல்லது அதிக காலம் கழித்து நின்று போகுமோ என்பதை எவரும் சொல்ல முடியாது. 

நமது கைகளில் இருக்கின்ற காலம்தான் நமக்குச் சொந்தமானது.

எண்ணங்களும், செயல்களும் உயரும்போது காலத்தையும் தாண்டி சாதனை படைக்க முடியும். அதை உணர்வோம், உற்சாகமாய் எழுவோம்.

8 comments:

/// நமது கைகளில் இருக்கின்ற காலம்தான் நமக்குச் சொந்தமானது. ///

சிறப்பான கருத்துக்கள் பல...

நன்றி...

வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் பொன் போன்றது அதை பயனுள்ளதாக செலவழித்தால்தான் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
உங்களின் சிறப்பான கருத்துக்கு நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...
/// நமது கைகளில் இருக்கின்ற காலம்தான் நமக்குச் சொந்தமானது. ///

சிறப்பான கருத்துக்கள் பல...

நன்றி...//


சிறப்பான கருத்துரைக்கு நிறைவான நன்றிகள்...

தொழிற்களம் குழு said...
வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் பொன் போன்றது அதை பயனுள்ளதாக செலவழித்தால்தான் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
உங்களின் சிறப்பான கருத்துக்கு நன்றி...//

சிறப்பான கருத்துரைக்கு நிறைவான நன்றிகள்..

உண்மை உண்மை - காலம் பொன் போன்றது - திட்டமிட வேண்டும் - செலவழிக்க வேண்டும் - வெற்றி பெற வேண்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

veeraththuravi vivekananthar meethu alavatra kathal kondavan naan sirappu

cheena (சீனா) said...
உண்மை உண்மை - காலம் பொன் போன்றது - திட்டமிட வேண்டும் - செலவழிக்க வேண்டும் - வெற்றி பெற வேண்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

நல்வாழ்த்துகளுக்கு நிறைவான நன்றிகள் ஐயா...

போளூர் தயாநிதி said...
veeraththuravi vivekananthar meethu alavatra kathal kondavan naan sirappu

சிறப்பான கருத்துரைக்கு நிறைவான நன்றிகள்..

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More