காலம் கருதும் வெற்றிக்கனிகள் !







பகல் வெல்லும், கூகையைக் காக்கை;- இகல் வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும், பொழுது.



கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.



பொறுத்திருக்கும் காலத்தில் கொக்கு போல் அமைதியாக இருக்க வேண்டும். தக்க காலம் வரும் போது கொக்கு மீனைக் கொத்துவது போல தவறாமல் செய்து முடிக்க வேண்டும்


காலம் அறிந்தவராக இருந்தால் சந்தேகமோ, தயக்கமோ வரும் வாய்ப்பும் இல்லை  ..

காலத்தைத் துணையாகக் கொண்டு செயல்படுபவனுக்கு திருவள்ளுவர் வாக்கு  போல முடியாத செயல் என்று எதுவுமே இருப்பதில்லை!


வெற்றிக்கான  முக்கிய காரணமான காலம் அறிதல் என்ற தனி அதிகாரத்தையே திருவள்ளுவர் படைத்து அறிவுறுத்துகிறார்....


காலம் மிக முக்கியமானது.

விதைக்க ஒரு காலம்,

விளைய ஒரு காலம்,
அறுக்க ஒரு காலம் என்று விவசாயத்தில் காலம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பணம் கிடைக்கிற போது விதைகள் வாங்கி,
மனம் தோன்றுகிற போது விதைத்து,
நேரம் கிடைக்கிற போது அறுக்க நினைத்தால் அது நகைப்பிற்கிடமாவது போல்  காலம் பற்றி கவலைப்படாமல் செயல்படுவதும்.பலனில்லாமல் போகும் சாத்தியம் இருக்கிறது ...!

காலம் , நேரம் பற்றிய சூட்சும அறிவு  வெற்றியாளனுக்கு மிக முக்கியத் தேவை.

ஒரு காலத்தில் வெற்றி தருவது இன்னொரு காலத்தில் வெற்றி தராது.

ஒரு காலத்தின் தேவை இன்னொரு காலத்தில் அனாவசியமாகி விடலாம். ஒரு காலத்தில் பேசுவது உத்தமமாக இருக்கும் என்றால் இன்னொரு காலத்தில் பேசுவது வம்பை விலைக்கு வாங்குவது போலத் தான்.

இப்படி வாழ்க்கையில் பெரும்பாலானவை காலத்திற்கேற்ப மாறுபவையே. எனவே எந்த நேரத்தில் எது பயன் தரும் என்பதை உணர்ந்து அதை செய்தால்வாழ்வில் வெற்றி கிடைக்கும்..

மழை பெய்யும் மாதத்தில் உப்பு விற்பதும் ,
காற்றடிக்கிற காலத்தில் மாவு விற்பதும் நஷ்டத்தையே தரும்...


காலம் வருவதற்கு முன்போ, காலம் கடந்த பின்போ கடும் முயற்சிகள் எடுப்பதும், காலம் கனியும் போது ஒடுங்கிக் கிடப்பதும் தோல்விக்கான தொடர் வழிகள் என்பதை உணர்ந்து வாழ்வில் வெற்றிக்கனிகள் பறிப்போம் ,,,!














4 comments:

நல்லா சொன்னிங்க.ஆமாஅக்கா, இந்தகூடைகளில் ஒன்றுகூட கையில்கிடைக்காது போலிருக்கே...? (பொக்கேல்லாம் கெக்க...கெக்க...ன்னுது)

அழகான அருமையான பகிர்வு - படங்களைப் போல...

நன்றி...

மதுரகவி said...
நல்லா சொன்னிங்க.ஆமாஅக்கா, இந்தகூடைகளில் ஒன்றுகூட கையில்கிடைக்காது போலிருக்கே...? (பொக்கேல்லாம் கெக்க...கெக்க...ன்னுது)//

கருத்துக்கு நன்றி !

திண்டுக்கல் தனபாலன் said...
அழகான அருமையான பகிர்வு - படங்களைப் போல...

நன்றி...//

அருமையான கருத்துக்கு நன்றி !

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More