ஆதார சுருதி
னித வாழ்க்கையின் ஆதார சுருதியாக விளங்குவது நம்பிக்கை. 

தன்னம்பிக்கை மட்டும் உறுதியாக இருந்துவிட்டால் போதும், எந்தத் தடைக் கல்லையும் தகர்த்துவிடலாம்.

வேடிக்கை மனிதரைப் போலே, நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?' என்கிற வரிகளில் தெறிக்கிறது, மகாகவி பாரதியின் தன்னம்பிக்கை!
தூய்மையான ஆடைகளை அணிவது, 

வேகமாக நடப்பது, 

தன்னம்பிக்கையூட்டுகிற பேச்சுக்களைக் கேட்பது, 

தன்னம்பிக்கை தரும் எழுத்துக்களைப் படிப்பது, 

நமது திறமைகளையும் அதனால் கிடைத்த வெற்றிகளையும் அடிக்கடி நினைவுகூறுவது, 

முன்வரிசையில் அமருவது, 

அச்சமின்றிக் குழு உரையாடல்களில் கலந்துகொள்வது, 

உடலைக் கட்டுக் கோப்பாக வைத்துக்கொள்வது,

பிறரிடம் பரிவுடன் நடந்துகொள்வது 
ஆகியவை தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்..
உடல்நலக்குறைவுடன் இருப்பவர்களுக்கு சிகிச்சை, மருந்து- மாத்திரைகள் போன்றவை பலன் தருவது ஒரு பக்கம்... 

தான் உடல்நலம் தேறிவிடுவோம் என்கிற ஆழமான நம்பிக்கையே அவர்களைப் பூரண குணமாக்கிவிடும் என்பது அறிவியல் கண்டறிந்த உண்மை!


அரிய கண்டுபிடிப்புகள், வெற்றிகள், உலக சாதனைகள், பெரும்பதவிகள் எல்லாம் தன்னம்பிக்கை கொண்டவர்களுக்கே சாத்தியமாகியிருக்கின்றன.
5 comments:

தன்னம்பிக்கை வரிகள்... படங்கள்-அட்டகாசம்...

நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...
தன்னம்பிக்கை வரிகள்... படங்கள்-அட்டகாசம்...

நன்றி.../

கருத்துரைக்கு நன்றி ..

நல்ல தகவல் மற்றும் படங்களும் அருமை அம்மா..

'பதஞ்சலி' ராஜா said...
நல்ல தகவல் மற்றும் படங்களும் அருமை அம்மா../

கருத்துரைக்கு நன்றி ..

அன்பின் இராஜ ராஜேஸ்வரி - பதிவு அருமை - தகவல்கள் அருமை - தன்னம்பிக்கையை அதிகரிக்க பல்வேறு தகவல்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More