Latest News

மன அழகே மாதவம்



நன்றி....!


பணிவுடையன் இன்சொலன் ஆதற் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற 

இனிமையான வார்த்தைகளும் பணிவான நடத்தையுமே ஒருவனுக்கு சிறந்த அணிகலன்கள். அவன் உபயோகிக்கும் அழகுச் சாதனங்கள் அல்ல, " என்கிறார் திருவள்ளுவர்.


சிந்தனை, சொல், செயல் அழகே மனிதனுக்குப் பேரழகு என்று நமது பெரியோர்கள் சிந்திக்கின்றனர். 

எண்ணங்கள் அழகானால் வார்த்தைகள் கனிவாகும். 

வார்த்தைகள் கனிவாக வந்தால் செயல்கள் சீராக அமையும்.

அன்பையும் அறிவையும் அணிய மன அழகே மாதவம் என்பது புரியவரும்... 

வண்ணங்கள் அழகானால் மண்ணுலகம் அழகாகும். 
எண்ணங்கள் அழகானால் விண்ணுலகம் வியந்து நிற்கும். 
வார்த்தைகள் அழகானால் வாழ்க்கையும் அழகாகும். 


அழகு என்பது மன உணர்ச்சி. இதை அழகுச் சாதனங்களால் மெருகு படுத்தமுடியாது. 

அழகு என்பது எது சதா மனதுக்கு மகிழ்ச்சியை ஊட்டுவதோ, அது என்கிறான் ஒரு ஆங்கிலக் கவிஞன்.

கண்ணதாசன் அழகு என்பது உடல்களின் தாளம் அல்ல, ஆத்மாவின் இராகம் என்கிறார். 

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இவ்வுலகம் அழகு. 

நமக்குக் கிடைத்திருக்கின்ற இந்த வாழ்வும் அழகு. 

நமக்கு ஏற்பட்டிருக்கின்ற உறவுகள் அனைத்தும் அழகு. அழகு! அழகு! 

அழகைத் தவிர்த்து வேறேதும் இங்கு இல்லை.

இயற்கை அன்னை தினமும் நமக்குப் பாடம் நடத்துகிறாள்

உலகில் எந்த ஒரு சாதனையையோ, அற்புதத்தையோ, நல்ல செயல்களையோ, நிகழ்த்த வேண்டுமானால் துன்பங்களை இன்ப அனுபவங்களாய் ஏற்றே தீர வேண்டும். 

யார் ஒருவர், துன்பத்தில் இன்பம் காண முடியுமோ? துயரங்களில் சந்தோஷம காண முடியுமோ? அவர்களாலேயே சாதனைகளை உருவாக்க முடியும். வெற்றிகளை குவிக்க முடியும். அற்புதங்களை நிகழ்த்த முடியும்.

அனைத்து முன்னேற்றங்களுக்கும் காரணம், பல்வேறு மனிதர்கள் துன்பங்களை மகிழ்ச்சியோடு ஏற்றுத் துணிவுடன், மகிழ்வுடன் தடைகளைத் தாண்டி செயல்பட்ட மகிழ்வு மனநிலையே.


எத்தகைய சூழலிலும் சந்தோஷ மனநிலையில் செயல்படுபவரால் அல்லது சந்தோஷ மனநிலையை உருவாக்க முடிபவரால் உழைப்பு, ஊக்கம் விடாமுயற்சி, உறவு, நட்பு, தன்னம்பிக்கை, உதவிகள், துணிவு, மன நிறைவு, அமைதி உடல்நலம் போன்ற பல்வேறு நேர்மறை விளைவுகளை அடைய முடிகின்றது.

ஆகவே இவ்வளவு அற்புதமான நன்மை களையும், வெற்றிகளையும் வழங்கும் மகிழ்வு மன நிலையை உருவாக்க உதவும் உன்னத 
வழிமுறைகளை கைக்கொண்டு வாழ்வில் வெறி அடைவோம்...

Follow by Email

Recent Post