விடியலுக்கான தீர்வு

அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.

தக்க கருவிகளுடன் காலமும் அறிந்து செயலை ஆற்றுபவருக்கு முடியாத செயல் என்று எதுவும் இல்லை

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்

காலம் அறிந்து செயல்புரியக் கூடியவனுக்கு முடியாத காரியம் இல்லை, உலகையே பெற நினைத்தாலும் அது கைகூடும் என்கிற அளவுக்கு திருவள்ளுவர் உயர்த்திச் சொன்னது பொருள் நிறைந்தது...

 நல்ல நம்பிக்கைகள் நம் வாழ்வில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் வலிமை வாய்ந்தவை.

 ‘எனக்கு கடவுள் பக்கபலமாக இருக்கிறார்’ என்ற நம்பிக்கையில் இருப்பவன் எல்லா சிக்கல்களிலும், பிரச்சினைகளிலும் முடிவில் ஏதாவது ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கிறான். கடவுள் இருக்கிறாரோ, இல்லையோ, கடவுள் அருள் அவனுக்கு உண்டோ, இல்லையோ, அந்த நம்பிக்கை அவனை அந்த மோசமான சூழ்நிலைகளிலிருந்து காப்பாற்றி விடும் 

 நம் அறிவைப் பயன்படுத்தி நம் நம்பிக்கைகளில் நமக்கு நன்மை அல்லாதவற்றை அவ்வப்போது கண்டு களைந்து எறிந்து விட வேண்டும். நல்ல வலுவான நம்பிக்கைகளையே நம்மிடம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

எனவே வாழ்க்கையில் எல்லா சமயங்களிலும் நல்லதை , வலிமையை , சுபிட்சத்தை நம்பிக்கைவைத்து  வெற்றி நடை போட்டு சிகரத்தை எட்டிப்பிடிப்போம் !


மனம்தான் வாழ்க்கையை வடிமைக்கிறது. “

இந்தக் கணம் மட்டுமே நம்முடையது. நாம் நினைத்தபடி நடந்து கொள்ள இந்தக் கணத்தில் மட்டுமே முடியும். நம்மால் செயலாற்ற முடிந்த இந்த ஒரு கணத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை வைத்தே நாம் நம் வாழ்க்கையை நிர்ணயம் செய்து கொள்கிறோம்.


காலமும் கடலலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே !

நேற்று என்பது வெறும் கனவு -- முடிந்தகதை ! திரும்பி வரப்போவதில்லை  ..
 நாளை என்பதோ கற்பனை மட்டுமே

இன்று சிறப்பாக வாழ்ந்தால்
 அது நேற்றைய கனவையும் இனிமையாக்கும்

நாளைய தினத்தையும் நம்பிக்கைக்குரியதாக்கும்
  இன்றைய தினத்தைக் கவனிப்போம்
 அதில் விடியலுக்கான தீர்வினை காண்போம் ......
2 comments:

/// மனம்தான் வாழ்க்கையை வடிவமைக்கிறது...///

நம்பிக்கை வரிகள் பல...

நன்றி...

(முடிவில் உள்ள படம் வரவில்லை...[ஆட்டம் போடும் பூனைகளுக்கு மேலே..])

நம்பிக்கை தான் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்.
படங்களும்,கருத்துக்களும் அழகாக இருக்கிறது.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More