" வாழ்க்கை ஒரு வாய்ப்பு "  வினைவலியும், தன் வலியும், மாற்றான் வலியும், 
துணை வலியும் தூக்கி செயல்!' 

என்று செயலின் தன்மையை நன்கு ஆராய்வதோடு, நம்மால் முடியுமா, மாற்றானின் வலிமை என்ன, நமக்குப் பக்கத்துணை என்ன என்று ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர் ..

மனதில் சலனமில்லாமல் - மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன நிலை வந்திட நீ செயல்வேண்டும் என்பார் பாரதி ..

தன்னம்பிக்கை உள்ளவர்களுக்கு எப்போதுமே ஒரு லட்சியம் இருக்கும். எப்போது மனதில் லட்சியம் இடம் பெற்று விட்டதோ அதன்பின் அதை எப்படி செயல்படுத்துவது என்ற சிந்தனை எப்போதும் உள்ளத்தில் அலை மோதும். அதற்கான ஆய்வு வேலைகளைத் துவக்கி அதுபற்றிய அறிவும், அனுபவமும் பெற்றவர்களின் ஆலோசனையை பெற்று. எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பதில் தான்  கவனம் இருக்கும்.  

உறுதியாக வெற்றியும் அவர்களைவந்து சரணடையும்.....


நாம் பிறருக்கு தைரியமூட்ட முற்படும் போது, நமக்கு தைரியம் பிறக்கிறது, நம்பிக்கையும், தைரியமும் கொடுப்பதால் குறைவதல்ல; கொடுக்கக் கொடுக்க நம்மிடம் கூடிப் பெருகும் பொருள் அது.

முயற்சிக்கு ஈடாக தன்னம்பிக்கை தரும் மருந்து வேறு ஏதும் இல்லை. கொஞ்சம் வாழ்க்கைக் கதவைத் தள்ளிப் பாருங்கள்! அது திறந்துதானிருக்கிறது.

தன்னம்பிக்கையற்றவர்கள் முக்கியமான ஒன்றை மறந்து விடுகின்றனர். அது, " வாழ்க்கை ஒரு வாய்ப்பு " என்பது.

நம்மை இவ்வுலகில் வாழுமாறு, வாழ்வை ரசிக்குமாறு, அனுபவிக்குமாறு காலத்தை நமக்குக் கடன் கொடுத்திருக்கின்றனர். அதனை உணர்ந்து காலத்தைப் பொன் போல் போற்றிப் பயன்படுத்துவோம்...
5 comments:

Seeni says: October 28, 2012 6:25 AM Reply
nalla sinthanai..

நன்றி...

thannampikkai rompavum avasiyamthaan

இதைப்பற்றிய பகிர்வு வரும்...

நல்ல கருத்துக்கள்... நன்றி...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More