விண்வெளியில் இருந்து முதல் முதலாக எடுக்கப் பட்ட புகைப் படம்!

 
 

இந்தப் படம் தான் விண் வெளியில் இருந்து எடுக்கப் பட்ட முதல் புகைப் படம்.  இது ரஷ்ய ராக்கட்டில் இருந்தோ   அல்லது அமெரிக்க ராக்கட்டில் இருந்தோ எடுக்கப் பட்டதல்ல. ஜெர்மனி உருவாக்கிய V-2 ராக்கட்டில் இருந்து அக்டோபர் 24, 1946 அன்று எடுத்தது.   அப்போது இரண்டாம் உலகப் போர் முடிந்து 11  மாதங்கள் ஆகியிருந்தது இதை அனுப்பி புகைப் படம் எடுத்தவர்கள் அமெரிக்காவினர்தான்.

அவர்களிடம் எப்படி இந்த ராக்கட் வந்தது?

ஏவு கணை வடிவமைப்பதில் ஈடுபட்டிருந்த ஜெர்மன் நாட்டு விஞ்ஞானி உலகப் போர் முடியும் தருவாயில்  தன்னுடன்  500  பேரைச் சேர்த்துக் கொண்டு ஒரு ரயிலையே கடத்தி வந்து அமெரிக்கர்களிடம் சரண் அடைந்தார்.

அவருடைய மற்றும்  ராக்கட்டின் முக்கியத்துவம் தெரிந்த  அமெரிக்கர்கள் ஜெர்மனியில் இன்னும் உருவாக்கி உபயோகிக்கப் படாத V-2  ராக்கட்டுகளை கொண்டு வந்து அவற்றை விண் வெளிக்கு போவதற்கு ஏற்றபடி அமைத்தார்கள் .முதலில் அவை ஏவு கணைகளாகத்தான் ஜெர்மனியால் பயன் படுத்தப் பட்டன.  ஒரு சோதனையின் போது கிள்ய்டு ஹாலிடே என்ற பொறியாளர்   கேமரா ஒன்றை உருவாக்கி அதன் மூலம் இந்தப் படத்தை எடுத்தார். மற்ற விஞ்ஞானிகளுக்கு எல்லாம்  காஸ்மிக் கதிர்களைப் பற்றியும் ராக்கட் வாயு இயக்கத்தைப் பற்றி மட்டும்தான் கவலை. இவர் ஒருவர்தான் விண்வெளியில் இருந்து புகைப் படம் எடுப்பதின் முக்கியத்துவத்தை தெரிந்து படம் எடுத்தார். இன்று பூமியின் தன்மை , அதன் மேற்பரப்பு,  கால நிலை மாறுதல்கள் எல்லாம் அறிய விண் வெளியில் இருந்து எடுக்கும் படங்கள் உதவுகின்றன

எப்படியோ இந்த படம் முதல் முதலாக எடுக்கப்பட்ட படமாகி சரித்திரத்தில் இடம் பெற்று விட்டது

2 comments:

நல்லதொரு தகவலுக்கு நன்றி...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More