தகவல்கள் ( தேசிய சித்த மருத்துவ மையம்)
       தொழிற்கள வாசகர்கள் அனைவருக்கும் முதலில் வணக்கம். இன்று நம் சமூகத்தின் மிகப் பெரிய பிரச்சினை, ஆரோக்கியம் தான். அதை எப்படி நாம் மேம்படுத்திக் கொள்வது என்பதில் தான் எல்லோரிடமும் குழப்பம் நிலவுகிறது.
       இன்று குடும்பத்தில் கண்வன் மனைவி இருவரும் பணிக்குச் சென்று ஈட்டும் வருமானத்தின் பெரும்பகுதி மருத்துவத்திற்கே செல்வதாக ஒரு கணக்கு சொல்கிறது. மருத்துவம் நம் முக்கியமான தேவைகளில் ஒன்று.
       கடந்த ஆண்டுகளாக தெரிந்தோ தெரியாமலோ நாம் வெறும் விளம்பரங்கள் மூலமே மருத்துவத்தை தேர்ந்தெடுக்கும் விபரீதத்திற்கு பழகி வருகிறோம். அது ஆங்கில மருத்துவமான அலோபதி என்றாலும் சரி, சித்த, ஆயுர்வேத மருத்துவம் என்றாலும் சரி. இதனால் மக்களின் மனதில் மருத்துவம் என்றாலே நிறையப் பணம் வேண்டும் என்ற மனப்போக்கு பொதுவாகவே பெருகி வருகிறது.
       ஆனால் தேசிய சித்த மருத்துவ மையம் பற்றி அறிந்தவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள். இன்று தமிழகத்தில் பெரும்பாலான நகரங்களில் இருந்து இந்த மருத்துவ மையம் நோக்கி  வரும் மக்கள் அதிகம். அது மட்டுமின்றி எந்தவித பின் விளைவுமின்றி சிறப்பான முறையில் மருத்துவ சிகிச்சைப் பெற்று குணம் பெறுபவர்களும் அதிகம்.
       கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்டு வரும் இந்த மருத்துவ மையம் பற்றி அநேகமானவர்கள் அறிந்திருப்பர். அறியாத சிலருக்காக இங்கு சிலவற்றை பதிகிறேன்.
       மத்திய அரசாங்கத்தால், சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாகச் செயல்ப்பட்டு வரும் இந்த மருத்துவமையம் தாம்பரம் சானிடோரியம் அருகில் அமைந்துள்ளது.
       இந்த மருத்துவமனைக்குள் சென்றதும், 5 ரூபாய்க்கு நமது பெயரைப் பதிவு செய்துவிட வேண்டும். பிறகு சிறப்பு மருத்தும், எனபதுப் போல பிரிவுகள் அடங்கிய அறைகளில் நாம் விருப்பப்பட்ட அறையில் சென்று மருத்துவர்களை சந்தித்து நம் உடல் பிரச்சினையைச் சொல்லி தீர்வைப் பெறலாம். அதற்கு நம் கையில் குறிப்பு அடங்கிய சிறு புத்தகம் போன்ற ஒன்றைக் கொடுத்துவிடுவார்கள். அதில் தான் நம்முடைய உடல் சம்மந்தமான குறிப்புகளை மருத்துவர்கள் எழுதுவார்கள். பிறகு நமக்கான மருந்துகளை ஒரு சிறு சீட்டில் எழுதி நமக்குத் தருவார்கள். அதை எடுத்துக் கொண்டு நாம் மருந்து வாங்கும் இடத்திற்கு சென்றால், அங்குள்ள கவுண்டரில் அந்தச் சீட்டை கொடுத்து மருந்தைப் பெற்றுக் கொள்ளலாம். இதில் 60 வயதை தாண்டியவர்களுக்கு தனி கவுண்டர் வேறு இருக்கிறது.
       அந்த மருந்தை எப்படிப் பயன்படுத்துவது பற்றிய விவரத்தை மீண்டும் மருத்துவரைச் சந்தித்து விசாரித்து தெரிந்துக் கொள்ளலாம். இதற்காக நீங்கள் செய்யும் செலவு 5 ரூபாய் மட்டும் தான். அதுவும் முதல் முறை உங்கள் பெயரை பதிவுச் செய்வதற்காகத் தான்.
       இலவசம் என்பதும் நம் மக்களுக்கு அதன் மேல் நம்பிக்கையற்றுப் போய்விடுகிறது. நான் அறிந்த வரை இந்த மருத்துவமனை மூலம் பலனடந்தவர்களும், பலனடைந்துக் கொண்டிருப்பவரகளும் ஏராளமானோர். நோயின் ஆரம்பக் கட்டத்திலேயே அதன் நிலைமையை புரிந்து மருத்துவம் செய்வதாக அங்கு சிகிச்சைக்கு வரும் பலர் கூறுகிறார்கள். நாட்பட்ட நோய்களுக்கும் இங்கு தனி கவனம் எடுத்து சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கிறார்கள்.
அது மட்டுமின்றி இந்த மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெறும் வசதியும் உண்டு. இயற்கையான மருத்துவத்தை தேடுபவர்கள் இந்த மருத்துவமனையை அனுகலாம்.
மேலும் தகவலுக்கு www.nischennai.org இந்தத்தளத்திற்கு சென்றுப் பார்க்கவும்.

இன்னும் பயனுள்ளத் தகவலுடன் அடுத்தப் பதிவில் உங்களை சந்திக்கிறேன்.

3 comments:

அறியவேண்டிய தகவல் நன்றி.

அனைவரும் அறிய வேண்டிய தகவல்... நன்றி.

விளக்கங்கள் அனைவருக்கும் மிகவும் பயன் தரும்...

ரொம்ப நன்றிங்க...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More