வெற்றிக்கு என்ன வழி?

வெற்றி என்பது பின்னொரு நாளில் வருவது என்பதால்
காலத்தைக் கேட்டேன் வெற்றிக்கு என்ன வழி?
ஒவ்வொரு கணமும் புதிய கணம், புதிய நொடி , புதிய நிமிடம்
என்னை இறுகப் பிடி பயணி என்றது காலம்

உண்மைதானே சண்டை வேண்டாம் சச்சரவு ஆகாது
அது பாதை மறைக்கும் இலக்கு நோக்கி நகர்வது நிற்கும்
எண்ணத்தைக் கூராக்கி குவிப்போம்
எல்லாம் தெளிவாகும் செயலும் சீராகும்
இலக்கும் அடைவோம் தன்னால்

காலத்தில் இருப்போம் காலத்தோடு பயணிப்போம்
வெற்றிக்கு அதை நம்மை கூட்டிச் செல்லும்
காலத்தோடு செல்வதே காலத்தின் கட்டளை
உணர்வோம் செல்வோம் வெல்வோம்!

3 comments:

அருமையான வரிகள்...

தள வடிவமைப்பு சூப்பர்...

மிகவும் அருமையான வரிகள்...பகிர்வுக்கு மிக்க நன்றி...

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More