ஆ! ஐன்ஸ்டீனின் கடவுளைப் பற்றிய கடிதத்தின் அசாத்திய விலை! Einstein's


ஐன்ஸ்டீன் விஞ்ஞானிகளிலேயே மிகப் பிரபலம் ஆனவர். அவர் மதம் மற்றும் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்றே கருதப் பட்டு வந்தது. அதை உடைத்து தூள் தூளாக்கும் வகையில் இந்த செய்தி. ஐன்ஸ்டீன்  1954   இல் இறக்கும் முன் தன் கைப்பட எழுதிய கடவுள் கடிதம் என்ற பெயர் பெற்ற கடிதம் 30,00,100              டாலருக்கு  ஆன்லைன் ஏலம் மூலம் விலை போயுள்ளது. ஏறக்குறைய  15   கோடி!

யூத தத்துவ மேதை எரிக் குட்கிண்டுக்கு எழுதிய கடிதத்தில் வெகு காட்டமாக கடவுளைப் பற்றிய தன் கருத்துக்களை எழுதியுள்ளார்.  என்னை பொறுத்த வரை கடவுள் என்ற வார்த்தை கடவுள் மனிதனின் பலவீனத்துக்கு கொடுக்கப் பட்ட வடிவம் மற்றும் படைப்பு. பைபிள் ஒரு கௌவரமான ஆனால் ஆதி காலத்திய மகான்களின் தொகுப்பு. குழந்தைத் தனமானது. என்னைப் பொறுத்தவரை எந்த நுட்பமான விளக்கமும் இதை மாற்ற முடியாது என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்தக் கடிதத்தை இந்த அசாத்திய விலைக்கு விற்ற இந்த மிஸ்டர் அனாமதோயம் 2008  இல்  ப்லூம்பரி ஏலத்தில் 4,00,000  டாலருக்கு வாங்கி அதை உஷ்ண நிலையால் கட்டுபடுத்தப் படும் பாது காப்பு பெட்டகத்தில் வைத்திருந்தார் .3 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் வைக்கும் போது அதை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு விலையை எதிர் பார்த்தார். இரண்டு சுற்று ஏலம் முடிந்ததுமே மேலே சொன்ன அசாத்திய மற்றும் அசுர விலைக்கு அதை போணி ஆக்கி விட்டார்!.

கடவுள் உண்டு இல்லை என்ற என்னுடைய கருத்து எதுவும் இங்கு
இல்லை. ஒரு செய்தியை செய்தியாகவே தந்துள்ளேன். அவ்வளவே!
3 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More