சமீபத்திய மழை செயற்கை மழையாமில்லை?

 

  
இப்போது வட கிழக்கு பருவ மழை பெய்யும் காலம். குறைந்த தாழ்வழுத்த மண்டலம் கடல் பகுதியில் உண்டாவதைப் பொறுத்து புயல் உருவாகி மழை பெய்யும். இப்போது அப்படித்தான் மழை பெய்கிறது என்று நினைத்தால் செயற்கை மழை என்று செய்திகள் வந்துள்ளன. உச்ச நீதி  மன்றம் தமிழ் நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடச் சொல்லி ஆணை பிறப்பித்து உள்ளது. இதை ஒட்டி தமிழ் நாட்டில் தண்ணீர் திறந்து விடச் சொல்லி தமிழ் நாட்டிலும் தண்ணீர் திறந்து விடக் கூடாது என்று கர்நாடகத்திலும் விவசாயிகள் போராட்டம் நடை பெறுகிறது. மழையோ போதுமான அளவு பெய்ய வில்லை. இந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் செயற்கை முறையில் மழை பெய்ய வைக்க அக்னி ஏரோ ஸ்போர்ட்ஸ் அட்வென்ட்சர் அகாடமி என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் தரப் பட்டு கடந்த அக்டோபர் 16  முதல் மேகங்களில் விதை தூவும்(cloud seeding) வேலை நடை பெற்று வருகிறது. இப்போதைய மழை அதனாலும் தான் என்று சொல்கிறார்கள். மழை பெய்து காவேரியில் தானாகவே தண்ணீர் வந்து விட்டால் தமிழ் நாடு தண்ணீர் கேட்கும் பிரச்னை நீங்கும் என்று  இந்த ஏற்பாடாம். எப்படியோ மழை பெய்தால் சரிதான்

இந்த மேகத்தில் விதை தூவுவது என்றால் தான் என்ன? சில்வர் அயோடைடு போன்ற வேதிகளை மேகங்களில் விமானம் அல்லது ஹெலிகாப்ட்டர் மூலம் தூவும் போது அது மேகங்களில் இருக்கும் மழைத் தண்ணீர் ஒன்றாகக் குவிந்து மழையாக கொட்ட ஒரு கருவாக செயல் படுகிறது. இப்படி செயற்கை முறையில் மழைக்கான விதையைத் தூவுவதுதான் மேகத்தில் விதை தூவுவது . மேலே உள்ள படம் அதை விளக்குகிறது

சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் லேசர் மூலம் மழை பெய்ய வைக்கலாம் என்று சொல்கிறார்கள். அதைத் தனிப் பதிவாக பிறகு பார்ப்போம்4 comments:

Thanks to you too. I write my blogs to share science and info.

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More