உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் விரல் குரங்கு!

 

 அட! விரலில் உக்காந்திருக்கும் சமத்துக் குரங்கு!  இந்தக் குரங்கு நம்முடைய விரல்களில் ஏறி இறுகப் பற்றிக் கொள்ளக் கூடியது. விரல் அளவு உயரம் விரல் நேசிக்கும் குணம் அப்புறம் ஏன்  விரல் குரங்கு என்றே அழைக்க மாட்டார்கள்?  உலகத்திலேயே மிக சிறிய முதன்மை விலங்குகளில் ஒன்று. அதன் தோற்றம் , அது நமது விரகளைப் பற்றிக் கொண்டு நம்முடன் பிரியமாக இருப்பது எல்லாம் பார்க்கும் போது வீட்டிற்க்கு எடுத்துப் போய் விடலாம் என்று தோன்றும். இவை பிரேசில், பொலிவியா, பெரு, ஈக்குவடார் மற்றும் கொலம்பியா மழைக் காடுகளின் பூர்விக விலங்கு. பாக்கெட் குரங்கு , சின்னம் சிறு சிங்கம் என்றும் இதை அழைக்கிறார்கள். வீட்டிற்க்கு அழைத்து வருவதாயிருந்தால் நல்ல உடல் நிலையில் இருக்கிறதா , வீட்டில் வளர்க்க சட்டத்தில் இடம் இருக்கிறதா என்பதெல்லாம் தெரிந்து கொண்டு செய்ய வேண்டும். இல்லா விட்டால் பிராணி வதை போன்ற குற்றச் சாட்டுக்கு ஆளாக நேரிடும்.

4 comments:

வியப்பாக இருக்கு...

நன்றி...

iyarkaiyin padaippu. iyarkakkey nanri. nanri.

பாக்கவே ரொம்ப ஆச்சர்யமாக இருக்கு...

இயற்க்கையின் அற்புதம்தான் வீட்டில் பராமரித்தல் இயலாது என நினைக்கிரேன்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More