நான் பதிவர் அறிமுகம் -- சார்வாகன்மதம் என்ற சொல்லுக்கும் மனிதம் என்ற வார்த்தைக்கும் உள்ள வித்தியாசத்தை உங்களால் உணர முடியுமா?

உணர்ந்து கொள்ள இந்த பதிவுக்குள் வரலாம்.

தொடக்கத்தில் சமரசம் உலாவும் இடம் என்று தனது பதிவுக்கு பெயர் வைத்து இருந்தார்.  தற்போது சற்று பெயர் மாறுதலாகி உள்ளது. எழுதுபவரின் உண்மையான பெயர் என்னவென்று தெரிந்தவர்கள் மிகக் குறைவான பேரே. ஆனால் பதிவுக்காக சார்வாகன் என்று பெயர் வைத்துள்ளார்.

ம(னி)தம்  மத நம்பிக்கையின் எல்லை

ஒவ்வொரு புரட்சிகளும் மனித வாழ்க்கையை ஒவ்வொரு படியாக முன்னேற்றி வந்துருக்கிறது. களத்தில் இறங்கி போராடியவர்கள் ஒரு பககம்.  கருத்துக்களால் மனித குலத்தை அவர்கள் கொண்டுருந்த மூட நம்பிக்கைகைளை தகர்த்தவர்கள் மறுபக்கம்.  வண்டியின் இருபக்க சக்கரமாக மனிதர்களை நடைபோட வைத்துள்ளது.


மதம் என்பது இன்றுவரையிலும் தீராத ஆச்சரியமே.  எத்தனை முன்னேற்றங்கள் வந்தாலும் மனிதன் தான் கொண்டுருக்கும் நம்பிக்கை சார்ந்த விசயங்களை மாற்றிக் கொள்ள தயாராய் இல்லை என்பது தான் உண்மை.  ஆனால் அந்த நம்பிக்கையை மற்றவர்கள் மேல் திணிப்பது தான் இன்றைய மத கலவரங்களின் தொடக்க புள்ளியாக மாறி தொடர்ந்து கொண்டுருக்கும் சாதி சார்ந்த பிரச்சனைகள் வரைக்கும் கொண்டு வந்து சேர்க்கின்றது.

இந்த பதிவர் பெயர் சார்வாகன். எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்? எப்படி இந்த தகவல்களை திரட்டுகிறார்? எப்படி சாத்தியமாகின்றது என்பதை நீங்கள் உள்ளே சென்று படித்துப் பாருங்க.

வெறுமனே பதிவுக்காக, பரபரப்புக்காக எழுதுபவர் அல்ல. பின்னூட்டங்களை கவனித்து ஊன்றி படித்துப் பாருங்கள்.  உங்கள் அத்தனை சந்தேகங்களையும் தீர்த்து வைத்து விட்டு மறுவேலை பார்க்கப் போவார்.  இன்றைய மதவாத பதிவர்களின் சிம்ம சொப்பனம் இவர்.  மேம்போக்காக இல்லாமல் எல்லாவற்றுக்கும் ஆதாரம் கொண்டு அலசி துவைத்து காய போட்டு அறைகுறை மக்களை கதறடித்து விடுவார்.

விஞ்ஞானம் சார்ந்து உலக நெறிமுறைகளை ஒழுங்கு படுத்தி ஆதாரங்களோடு ஆவணப்படுத்தும் இவரின் முயற்சிகள் ஒவ்வொன்றும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.

4 comments:

நல்ல முயற்சி பரிணாமவியலில் நிபுணர் அவர் .............
வாழ்த்துக்கள் ..............

யாரது,,, அஞ்ச சிங்கம் மாதிரி தெரியுதே,,,,?

வணக்க்ம் சகோ,
மிக்க நன்றிகள்.1)மனிதம்: மத நம்பிக்கையின் எல்லை, 2)சமரசம் உலாவும் இடமே இரண்டுமே நமது தளங்கள்தான். மனிதம் தளத்தில் அதிகம் மத ஆய்வுகள் கட்டுரைகளே இட்டோம்.தமிழ்மணத்தில் இணைக்கப்பட்ட சமரசத்தில் போலி அறிவியல், அறிவியல் கருத்துகளை எளிமையாக்கி தமிழில் அளித்த‌ல் மட்டுமே முதன்மை இடம்.

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்!!!

நன்றி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More