தலையில்லாத மாஜிக் நிபுணர்!

 

என்ன தலையில்லாத மாஜிக் நிபுணரா? அதுதான் தலை தெரியுதே என்கிறீர்களா? அதுவும் சரிதான். ஆனால் பாருங்க. தலை தோள் மேல் இல்லாமல் இடம் மாறி வயிற்றிலிருந்து எட்டிப் பார்க்கிற மாதிரியும் கைகள் அதைப் பிடித்திருக்கிற மாதிரியும் படத்தில் பார்க்கிறோம். .ஹாலோவீன் என்ற பண்டிகை அமெரிக்காவில் ஆண்டு தோறும்  அக்டோபர்  31   அன்று கொண்டாடப் படுகிறது. அப்போது இறந்த ஆவிகளைப் போலவே ஆடை அணிந்து தங்களும் ஒரு ஆவிதான் என்று ஆவிகளின் கோபத்தை தணிக்க முயலுவது போல் நடிப்பார்கள். குழந்தைகள் வீடு வீடாக போய் ட்ரிக் ஆர் ட்ரீட் என்று கேட்பார்கள். இனிப்புகள் ,  சாக்லட்டுகள், மற்றும் சிறு தீனி கொடுத்தால் ட்ரீட் இல்லையென்றால் கொடுக்காத வீட்டுக்காரர் மேல் எதாவது தந்திரம் செய்வார்கள். இது மிகவும் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒன்று.
 
 இந்த ஹாலோவீன் ஆவி ஆடையாகத்தான்  மாஜிக் நிபுணர் ரிக் பெர்குசன் படத்தில் உள்ள ஆடையை தனக்குத் தெரிந்த ஒரு ரகசிய தொழில் நுட்பம் மூலமாக அமைத்து உள்ளார். இதை அணிந்து வீதிகளில் அவர் வரும் போது நல்ல ஆச்சர்யம் கலந்த வரவேற்பு!
4 comments:

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More