பற் பசைக்குப் பதிலாக பல் துலக்க இதோ ஒரு ரப்பர் சூயிங் கம்!

 பார்க்க  ஒரு பிரஷ் போல இருக்கும் இது ரப்பரால் ஆனது.பெயர் ரோலி. பல் துலக்க நேரமில்லை அல்லது தண்ணீர் இல்லை போன்ற நேரங்களில் நல்ல ஒரு வரப் பிரசாதமாக இது வந்திருக்கிறது. வாய்க்குள் போட்டு சூயிங் கம் போல மெல்லலாம்.  மெல்லும்போது ஈறுகளையும் பற்களையும் சுத்தப் படுத்தி விடும். சைளிட்டால் மற்றும் ப்ளுரைடு கலந்திருப்பதால் பல் எனாமலை பாது காத்து பல்லில் படலம் படியாமல் பார்த்துக் கொள்ளும். துர் நாற்றத்தையும் அணுகாமல் பார்த்துக் கொள்ளும்

இதைப் பயன் படுத்தும் போது டூத் பிரஷ் , கண்ணாடி , வாய் கொப்புளிக்கத் தண்ணீர் எதுவுமே தேவையில்லை. நன்கு மென்று சுத்தம் செய்த பின் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு போய் விடலாம். ஒவ்வொன்றும் ஒரு டாலர் விலையில் பல ரப்பர் பிரஷ்கள் கொண்ட பாக்கெட் விற்கிறது. ஒரு டாலர் என்பது அதிகப் படியான விலைதான். இருந்தாலும் அவசர காலத்திற்கு இந்த ரப்பர் பிரஷ் நன்றாகவே பயன் படும்

3 comments:

என்னவெல்லாம் வருது பாருங்க...

முழுங்காமல் இருந்தால் சரி...

ellam namma nanmaikkuthaan. muzhungidamae thuppidanum avalavuthaan.nanri.

எப்படியெள்ளாம் யோசிக்கிறாங்க...?

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More