வலைப்பூக்களால் ஒன்றினையும் நட்பின் உறவுகள்

உள்ளம் பிரபஞ்சத்தை கடந்து பரந்திருக்க, உலகத்தின் தூரங்கள் உள்ளங்கையில் புள்ளியாய் சுருங்கி நிற்கிறது. இணைய உலகத்தின் வாயிலாக வலைப்பூக்களால் ஒன்றிணையும் நண்பர்கள் ஏராளம். அவர்கள் நட்பின் உணர்வுகள் அங்கு தாராளம். அறிமுகத்தில் உண்டாகும் தயக்கங்கள் மறைந்து நட்பு உறவுகளாகவும், உறவுகளுக்குள் உரிமைகளாகவும், காலத்தால் அழியாமல் நீண்டு நிலைபெறுகிறது.

கடந்த தினம் நான் சோர்ந்திருந்த தருணத்தில், ஒவ்வொரு மனிதனும் ஒரு புத்தகம், அதை புரட்டுவதால் அதிகம் கற்கலாம் என்றார் பதிவர் நண்பர் ஒருவர். ஒரு புத்தகத்தை புரட்டுவதாலேயே நம் தேவைகள் நிறைவு பெறுவததில்லை...அதிகமான நண்பர்கள் பெற்றிருப்பதே வெற்றியின் இரகசியம். வலைப்பூக்கள் நன்மதிப்பு மிக்க நண்பர்கள் வட்டத்தை பெருக்குகிறது. வலைப்பூ ஒரு கற்பக விருட்சம் அங்கே அள்ள அள்ள குறையாத கருத்துக்கள் கொட்டிக்கிடக்கிறது.

இணைய உலகம் எனக்கு புதியது. இணைய உலகத்திற்கு என் அறிமுகம் படுகை.காமில் என்றென்றும் உன்னோடு கதையின் மூலமாகதான்...இயந்திரத்தனமான என் அலுவல்கள் போரடித்து போனதால் விளையாட்டாக வந்து பதிந்து போனது தான் அந்த தொடர். அந்த தொடரில் எனக்குள் ஒளிந்துகிடந்த எழுத்தாளரை கண்டு விண்முகில் வலைப்பூவை உருவாக்கி என் முதல் கவிதையை பதிந்து எனக்கு புதிய பரிணாமத்தை தந்தவர் தமிழ்தொட்டில் தமிழ்ராஜா... எனக்கு கிட்டிய பதிவர் அந்தஸ்தின் ஆசான்.

என் தொடர் வலைபதிவால் தொழிற்களம் அறிமுகமாகியது...தம்பி அருணேஷின் அன்பின் உறவு தந்த ஊக்கத்தில் தொழி்ற்களத்திலும் என் எழுத்து உலா வர....அங்கேயும் புது நட்பு மலர்கள் மலர்ந்து மணம் கமழத்தொடங்கியது...மதுரகவி அண்ணா, லட்சுமி அம்மா, கண்மணி, ராஜா, மணிராஜ்,  ராஜராஜேஸ்வரி அம்மா, சீனு... தங்கம் பழனி என்று நீள்கிறது பட்டியல்.

ஆயிரத்தில் ஒருவன் பதிவர் இயற்கை எய்திய சில மணி நேரங்களிலேயே அவரைப்பற்றிய பதிவுகள் வெளிவர துவங்கிவிட்டது. ஆயிரத்தில்  ஒருவன் மிகவும் பிரபலமானவரோ, அரசியல் தலைவரோ அல்ல...அந்த மனிதரின் மாண்பு அவர் பதிவர் என்பதிலேயே விளங்கியது.அவர் பிரிவு வருத்தத்தை ஏற்படுத்தியது.  இத்தனை தனிச்சிறப்புகளுடைய  வலைப்பூக்களை பதிய இன்னும் பதிவர்கள் களத்தில் இறங்கவேண்டும் என்பது என் அவா...


நட்புடன் 
விண்முகில் தமிழ்ச்செல்வி

4 comments:

இணைய உலகத்தின் வாயிலாக வலைப்பூக்களால் ஒன்றிணையும் நண்பர்கள் ஏராளம்.//

சத்தியமான உண்மை இது...!

முன்பின் தெரியாத நண்பர்களின் அறிமுகம்... இதை விட வாழ்வில் வேறு என்ன சந்தோசம்...?

அதேதான் நானும் சொல்ல வந்தேன் எழுத்து மூலமே அறிமுகமானவர்களை நேரிலும் காணும்போது கிடைக்கும் சந்தோஷம் வார்த்தையில் சொல்லி விட முடியாது.வலைப்பூ மிகவும் சக்திவாய்ந்ததுதான்

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More