இருட்டில் ஒளி விடும் சாலைகள்!கிராமப் புறங்களிலும் நெடுஞ்சாலையில் சில இடங்களிலும் விளக்குகள் இல்லாமால் இருப்பது இப்போதும் உண்டு. எல்லாவற்றிக்கும் மேலாக கரண்ட் கட் வேறு. இவை போன்ற இடங்களில் ஒளி தரவென்றே இருட்டில் ஒளி உமிழும் வண்ணங்கள் சாலை மீது பூசப் பட்டு இருக்கின்றன. பத்து மணி நேரம் வரை இந்த ஒளி நீட்டிக்கும் என்பதால் வெளிச்சம் இல்லையே என்ற குறை இனி இருக்காது.

இந்த சாலைகளில் காற்று மூலம் மின் உற்பத்தி செய்யும் சிறு ஜெனரேடர்கள்(wind generators) இணைக்கப் பட்டிருக்கின்றன. இவை மூலமும் ஒளி கிடைக்கும். முன்னால் செல்லும் வாகனங்கள் காற்றில் அதிர்வுகளை ஏற்படுத்தும் இல்லையா? இந்த அதிர்வுகளைக் கொண்டே இவை இயங்கும். இந்த சாலைகளில் பூசப் பட்டிருக்கும் வண்ணங்கள் பனி உருவாகும் நேரங்களில் பனிக் கட்டி போன்ற உருவத்தை தம் மீது வெளிப் படுத்தி 'இதோ பனி' என்று வாகன ஓட்டிகளை உஷார் படுத்தும்

இது போல அமைக்கப் பட்டு இருக்கும் இந்த அதி நவீன சாலைகளில் மின் கார்கள் செல்ல தனி பகுதி அமைக்கப்பட்டு இருக்கிறது. அதன் மேல் மின் வாகனங்கள் போகப் போக சாலையின் அடியில் இணைக்கப் பட்டு இருக்கும் மின் தூண்டும் சுருள்கள்(induction coils) மூலம் மின்சாரம் ஏற்றப் படும்.

வாகனங்கள் வரும்  போது எரிய ஆரம்பித்து வாகனங்கள் எதுவும் போகாத போது அணைந்து விடும் இதில் இணைக்கப் பட்டிருக்கும் விளக்குகள் என்பது இதன் இன்னொரு சிறப்பு

2 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More