திரவ நைட்ரஜன் மூலம் கார் ஓட்டலாம்


 


சுற்று சூழலை பாதிக்காத  மாற்று புதுப்பிக்கக் கூடிய எரி பொருட்களின் மீது இப்போது அதிக கவனம் செலுத்தப் படுகிறது.ஹைட்ரஜன் வாயு கொண்டு இயங்கும் எரி செல் வாகனத்தை மிகவும் எதிர் பார்த்தார்கள். அது பற்றி பேச்சு வந்து பல வருடங்கள் ஆகியும் அது என்னோவோ இன்னும் நடை முறைக்கு வரவில்லை.

இப்போது திரவ நைட்ரஜனை வாகனம் ஓட்டப் பயன் படுத்தலாம் என்று ஆய்வுகள் மூலம் கண்டு பிடித்திருக்கிறார்கள் இங்கிலாந்தை சேர்ந்த பொறியாளர்கள் .திரவ நைட்ரஜனை காற்று மண்டல அழுத்தத்திலேயே வெகு காலம் வைத்திருக்கலாம் என்பதால் இது அடங்கிய கொள்  கலனில் அடைத்து கொண்டு வெகு தூரம் செல்லலாம். இந்த திரவ நைட்ரஜனை காற்றாலைகளில் இருந்து கிடைக்கும் மின்சாரம் மூலம் குளிரச் செய்து தயார்ரிக்கிரார்கள் ..இந்த நைட்ரஜன் எஞ்சினுக்குள் செல்லும் போது உறை எதிர்ப்புக் கலவை, கொஞ்சம் தன்ணீர் எல்லாம் சேர்க்கப் படும். இதனால் திரவம் கொதித்து விரிவடைந்து எஞ்சின் சிலிண்டரில் உள்ள பிஸ்டனை நகர்த்துகிறது. வண்டியும் ஓடுகிறது. இதில் வெப்ப மாற்றி என்பது தேவையில்லாதபடி இந்த தொழில் நுட்பத்தை பொறியாளார் பீட்டர் டியர் மேன் உருவாக்கி உள்ளார்


திரவ நைட்ரஜனை பயன் படுத்தும் போது மின் சக்தி வண்டிகளைப் போல அதிக வெப்ப நிலைகளை எதிர் கொள்ள வேண்டியதில்லை என்பதால் மலிவான உலோகக் கலவைகள் மற்றும் பிளாஸ்டிக் கொண்டு வண்டிகளை தயாரிக்கலாம். மின் சக்தி வண்டியை பார்க்கையில் இந்த நைட்ரஜன் வண்டி தயாரிப்பு செலவு அதிகமில்லை.

மின் சக்தி வண்டிகள் போல கனமான லிதியம் பாட்டரிகள் தேவையில்லை. வண்டிகளும் எடை குறைவாகவும் செலவு அதிகம் இன்றியும் அமைக்கப் படும். திரவ நைட்ரஜன் வண்டிகளும் ஒரு நாள் சந்தைக்கு வரலாம்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More