Latest News

ஏன் ஆங்கிலத்தில் எழுத வேண்டும்?

இந்தத் தலைப்பை பார்த்ததும்  எதோ ஆங்கில மோகம் பிடித்து என்னை ஆட்டுவதால்  இதை எழுதுவதாக நினைக்க வேண்டாம்!  எப்படி ஆங்கில்த்தில் எழுதுவது பேசுவது சில வேளைகளில் உதவியாகவும் தேவைப் படுவதாகவும் உள்ளது என்பதை தெளிவு படுத்தவே  இது.. என்னைப் பொறுத்தவரை ஆங்கிலத்தில் நான் எழுதுவது என் கருத்துக்கள் உலக அளவில் சென்றடைய வேண்டும் என்பதாலேயே. அப்படி என்னதான் சாமி உங்களிடத்தில் இருக்கு என்று கேள்வி கேட்டு என்னை திக்கு முக்காட வைக்கலாம்.கேட்குமுன் கொஞ்சம் பொறுங்கள் நான் சொல்லி முடித்து விடுகிறேன்

நான் சரி விகித உணவு சாப்பிடுவதன் மூலம் ஆரோக்யமாக இருக்கலாம் என்று வலியுறுத்தி பேசியும் எழுதியும் வருகிறேன். நானும் அதை நடை முறையில் கடைப் பிடித்தும் வருகிறேன். அந்த சரி விகித உணவு என்பது இயற்கை விவசாயம் மூலம் கிடைத்த நஞ்சில்லா உணவாக இருக்க வேண்டும் என்பது அவசியமான ஒன்று. அப்போதுதான் சரி விகித உணவின் முழுப் பயனும் கிடைக்கும். இது தவிர நமது பாரம்பரிய சித்த வைத்திய மூளிகைகளுக்கும் நோய் தீர்க்கும் குணம் என்பதால் அதையும் தேவையான அளவு தெரிந்து வைத்துள்ளேன்.

தொண்டைக்கட்டு. குளிர் காலத்தில் ஜலதோஷம் , இருமல் இவற்றில் இருந்து எப்படி விடுதலை பெறுவது? வயிற்று tபோக்கு, மெலிதான காய்ச்சல் போன்றவற்றில் இருந்து டாக்டரிடம் போகாமல் நானே குணப் படுத்திக் கொள்கிறேன். இது தவிர எனக்கு மேலை நாடுகளில் இணையம் மூலமாகவும் முக நூல் மூலமாகவும் நண்பர்கள் உண்டு. அதில் சிலருக்கு ஆஸ்த்மா குறிப்பாக பாலைவனப் பிரதேசம் போன்ற தூசு கிளம்பும் இடங்களில் இருப்பவர்களுக்கு அவர்கள் கடைப் பிடிக்க வேண்டிய உணவு முறை மற்றும் வீட்டிலும் அவர்களைச் சுற்றிலும் எப்படி தகுந்த ஆஸ்த்மா தடுப்பு முறைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் நான் அறிவுரை வழங்கியுள்ளேன். ஒரு குறிப்பிட்ட வகை புற்று நோய் மற்றும் இரிடபில் பவெல் சிண்ட்ரோம்(irritable bowel syndrome)  என்ற வியாதிக்கு எனது குறிப்புக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளேன். நல்ல வகையில் உதவியாக இந்த குறிப்புக்கள் உள்ளதாக தெரிவித்து உள்ளார்கள். நான் கூறும் விசயங்களை எல்ல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடும் படி கேட்கிறார்கள். அப்படி வெளியிடுவதானால் ஆங்கிலத்தில் வெளியிட்டால் தான் அவர்களை போய் சேரும்

நான் அறிவியல் கதைகளும்(science fictions)   எழுதி வருகிறேன்.  நாளைய அறிவியலை இன்றே சொல்வதுதான் அறிவியல் கதைகள். இவற்றில் இது வரை வராத நோய், தலை கீழ் பரிணாமம், விண்வெளிப் பயணங்களில் ஏற்படும் இடர்பாடுகள் அதை எதிர் கொள்ளும் விதம் , விண்வெளிப் பயணம் செல்ல புதிய உத்திகள் எல்லாம் கதைகளில் எழுதுகிறேன். நான் தமிழை விட்டு விடவில்லை, அதே சமயம் ஆங்கிலத்திலும் எழுதுகிறேன். அதன் மூலம் உலக அரங்கிற்கு ஒரு தமிழனின் அறிவியலை கொண்டு செல்கிறேன். முக நூலில் அறிவியல் செய்திகள் கொண்ட மேலை நாட்டவரும் விரும்பும் ஒரு தமிழனின் அறிவியல் பக்கமாக என் பக்கம் இருக்கிறதுஇந்தப் படம் எனது   I want to Die!  என்ற  Science Today  யில் வெளியான அறிவியல் கதைக்கானது.  இதை www.kerala.com/science என்ற இணைப்பில் காணலாம்


தவிர ஆங்கிலக் கவிதைகள் எழுதுகிறேன்.  இதில் அறிவியல் மற்றும் விண்வெளிக் கவிதைகளும் உண்டு. இதனையும் எனது மேல் நாட்டு நண்பர்கள் விரும்புகிறார்கள். இதனால் நான் ஆங்கிலத்தில் எழுதுவது தேவையான ஒன்றாகி விட்டது.

எனது சுய புராணத்தை விடுங்கள். மேலை நாட்டினருடன் தொடர்பு கொள்ள வேண்டிய நேரங்கள் மற்றும் இந்தியாவிலேயே மற்ற மொழி பேசும் மாநிலங்கள் செல்லும் சமயங்கள் எல்லாம் ஆங்கிலமே தொடர்பு மொழியாக இருக்கிறது

இதெல்லாம் தான் சுவாமி ஆங்கிலத்தில் எழுத வேண்டிய , பேச வேண்டிய காரணங்கள்Follow by Email

Recent Post