பிறந்த குழந்தை உடனடியாக அழ வேண்டுமா? ஏன்?


பிறந்த குழந்தை உடனடியாக அழ வேண்டுமா? ஏன்?


 குழந்தை கருப்பையில் இருக்கும்வரை இளம் சூடான, பாதுகாப்பான சூழ்நிலையில் இருக்கும்.அது பிறந்தவுடன் சூழ்நிலையில் பெரிய மாற்றம் ஏற்படுகிறது.வெளிப்புறத்திலுள்ள வெப்பநிலை குழந்தையின் தோலில் பட்டவுடன்,தோல் தூண்டப்பட்டு குழந்தை ஆழ்ந்து சுவாசிக்கிறது.

முதன் முதலில் சுவாசிக்கும்போது நுரையீரலினுள் புகும் காற்று, குழந்தையைத் தேம்பச் செய்து (gasp) அழுகையை உண்டாக்குகிறது.


குழந்தை பிறந்தவுடன் அது வீறிட்டு அழ வேண்டும்.அதுவே குழந்தையின் சுவாசம் சீராக இருப்பதற்கான அறிகுறியாகும்.குழந்தை பிறந்தவுடன் அதன் அழுகைக் குரல் வேறுபட்டிருந்தால் சுவாச உறுப்பு,முளை போன்ற உறுப்புகளில் ஏதேனும் கோளாறு இருக்கலாம் என்பது மருத்துவர்களின். கருத்தாகும்.குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையின் அழுகையும் மற்ற குழந்தைகளிடமிருந்து வேறுபட்டிருக்கும்.

நன்றி,

என்றும் உங்கள் வானில் வளர்பிறையாய்,
அழகுநிலா...

                                                           

3 comments:

விளக்கத்திற்கு நன்றி...

அருமையான தகவல்
தொடரட்டும் உங்கள் வெற்றி பதிவுகள்

மிகவும் பயனுள்ள தகவல்.
அழகு நிலாவிற்கு நன்றி!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More