தொட்டதெல்லாம் இனி தங்கமா மாறும் - தங்கத்தை தயாரிக்கலாம்

மற்ற உலோகங்களைத் தங்கமாக மாற்றும் ரச வாத வித்தை என்பது அன்றைய காலத்தில் இருந்து கேள்விப் பட்டுக் கொண்டிருக்கிற ஒரு விஷயம். இதில் வெற்றி கண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. இன்னமும் இது சாத்தியம் என்று நம்புவர்கள் நிறையப் பேர் உண்டு

இப்போது ஒரு நுண்ணுயிரி தங்கக் குளோரைடில் இருந்து தங்கம் உற்பத்தி செய்வதைக் கண்டு பிடித்துள்ளார்கள்.  தங்கக் குளோரைட் இயற்கையில் காணப் படும் ஒரு கடுமையான நச்சு பொருள். குப்ரியா வைடஸ் மெடாலி டுரன்ஸ் என்கிற இந்த நுண்ணுயிரி தங்கக் குளோரைடைத் தின்று ஜொலிக்கும் 24   காரட் தங்கமாக வெளித் தள்ளுகிறது!.  இது அந்த நச்சுப் பொருளுக்கு நல்ல எதிர்ப்புத் தன்மையுள்ளதாக இருப்பதால் இது சாத்தியம் ஆகிறது. மேலே படத்தில் உள்ளது நுண்ணுயிரி தயாரித்த தங்கம் தான்

மிசிகன் பல்கலைக் கழக நுண்ணுயிரியல் பேராசிரியரான கசம் கஷேபி மற்றும்  மிண்ணியல் மற்றும் கலை பேராசிரியரான ஆடம் பிரவுன் ஆகியோர் இதைக் கண்டுபிடித்தவர்கள். தங்கம் உருவாக்கவென்று "உலோகக் காதலனின் மகத்தான வேலை" என்கிற உபகரணத்தை வடிவமைத்து இருக்கிறார்கள்.

இதில் நுண்ணுயிரி பிடித்துக் கொள்ளப் பட்டு தங்கக் குளோரைடு ஊட்டப் படுகிறது .  ஒரு வாரத்தில் இந்த தங்கக் குளோரைடு முழுவதையும் தங்கமாக மாற்றி வெளித் தள்ளுகிறது.

இந்த தங்கக் குளோரைடை தங்கம் ஆக்கும் முறை ஒன்றும் விலை குறைச்சலானது  இல்லை. ஏன் என்றால் தங்கக் குளோரைடின் விலையும் தங்கத்தின் விலை அளவு இல்லை என்றாலும் அதிகம் தான். எப்படியோ ரசவாத வித்தையை சாத்தியமாக்கி விட்டது இந்த முறை! 
 


3 comments:

நல்ல தகவல் நன்றி.....தங்கம் தங்கம் தான்...

தங்கமான தகவலுக்கு நன்றி...

Parattukku nanri. enathu nanrikal aaraichiyalagalukkum antha nunnuyirikkum!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More