Latest News

GOOGLE & YAHOO & ADOBE பெயர் பெற்ற கதை:தெரிந்து கொள்வோம்


தேடும் பொறிகளில் சிறந்து விளங்கும் கூகிள் , யாஹூ மற்றும் அடோப் மென்பொருளின் பெயர் தோன்றிய காரணங்கள் இதோ...
  
கூகிள் ( GOOGLE):

உலகின் மிகப் பெரிய செர்ச் என்ஜினான கூகிள் என்ற பெயர்  ஒரு பெரிய எண்ணைக் குறிக்கிறது.

10^100 ( 10-க்கு பின்னால் நூறு பூஜ்யம் வரும் பெரிய எண்) என்பது தான் கூகிள் என்ற கணிதச் சொல்லின் பொருள்.

எல்லையற்ற தகவல் கடல் போன்றதல்லவா இப்போது கூகிள் .உண்மையில் googol என்ற பெயரையே வைப்பதாகத்தான் இருந்தது.ஆனால் எழுத்துத்தவறு காரணமாக google என்றாகி விட்டது.





யாஹூ( YAHOO ):

செர்ச் எஞ்சின் பிரிவின் மற்றொரு நட்சத்திரமான யாஹுவின் பெயர் சற்றே நீளமானது Yet Another Hierarchial Officious Oracle ( Yahoo).
ஜொனாதன் ஸ்வீப்ட தாம் எழுதிய கலிவரின் யாத்திரைகள் என்ற நாவலில் யாஹூ என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்திருக்கிறார்.

அடோப் ( ADOBE ):

பேஜ் மேக்கர், போட்டோ எடிட்டிங், பிளாஷ் என்ற இனங்களில் பிரசித்தி பெற்ற நிறுவனம்.

நிறுவனரின் வீட்டுக்கு அருகில் ஓடும் அடோப் கிரீக் என்ற நதியின் பெயரை ஜான் உடன்ரோக் தனது நிறுவனத்திற்கும், நிறுவன தயாரிப்புகளுக்கும் Adobe என்று அளித்து பிரபல மாக்கினார்.

மீண்டும் இனி வரப்போகும்  பதிவில் இது போன்ற சிறு தகவல்களுடன் சந்திபோம்.
நன்றி.....

Follow by Email

Recent Post