கொசுக்கள் ஏன் மனிதனைக் கடிக்கின்றன ?


கொசுக்கள் ஏன் மனிதனைக் கடிக்கின்றன ?                                        

கொசுக்களின் ஆண், பெண் இனச் சேர்க்கைக்குப் பிறகு பெண் கொசுக்களின் வயிற்றில் முட்டைகள் உருவாகின்றன. இம்முட்டைகளின் வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டீன் மனிதர்கள் போன்ற பாலூட்டிகளின் ரத்தத்திலிருந்து கிடைப்பதால் பெண் கொசுக்கள் மட்டுமே மனிதனைக் கடிக்கின்றன.


மனிதரின் உடல் உஷ்ணம், வியர்வை, உடல் வாசனை, மனிதர்களின் சுவாசத்திலிருந்து வெளியேறும் கார்பன்டைஆக்ஸைடு, மனித உடலிலிருந்து வெளியேற்றப்படும் சில ஒளிக்கதிர்கள் போன்றவற்றைக் கொண்டே கொசுக்கள் மனிதரின் இருப்பிடத்தை அறிந்து கொள்கின்றன.

கொசுக்கள் சில மனிதர்களிடமிருந்து ரத்தத்தை உறிஞ்ச அதிக விருப்பம் கொள்கின்றன.ஆனால் சில மனிதர்களைப் புறக்கணித்துவிடுகின்றன.இது ஏன் என்பது இதுவரை விஞ்ஞானிகளுக்கும் புரியாத புதிராகவே உள்ளது.

மனிதர்கள் உபயோகிக்கும் எண்ணெய், வாசனைத் திரவியங்கள், சோப் போன்றவையும் கொசுக்கள் ஒரு மனிதனைத் தேர்ந்தெடுக்கவோ, அல்லது நிராகரிக்கவோ காரணமாக அமையலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும்.

                                          Mosquito : Asian Tiger Mosquito sucking blood on human (albopictus)
             
இவை தவிர, கறுப்பு போன்ற அடர் நிறத்தில் உடை அணிந்தவரை விட வெள்ளை போன்ற வெளிர் நிறத்தில் உடை அணிந்தவரை கொசுக்கள் அதிகம் கடிக்கின்றன என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள உண்மையாகும்.

நன்றி,

என்றும் உங்கள் வானில் வளர்பிறையாய்...
அழகுநிலா...1 comments:

பகிர்வுக்கு நன்றி... ஆனால் கருப்பு நிறத்தில் உடை அணிந்திருந்தால் அங்கு தான் கொசுக்கள் நிறைய சுற்றுகின்றனவே... ஒரு வேலை சுற்றும், கடிக்காதோ...?

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More