விண்வெளியில் இருந்து பூமிக்கு: நிகழ இருக்கும் துணிகர குதிப்பு!
42 வயதான பெலிக்ஸ் பாம் கார்ட்னர் ஒரு அசாத்திய துணிச்சல் காரர். வரும்  அக்டோபர்  8  அன்று, விண்வெளி முனையில் இருந்து குதித்து, புதிய சாதனை நிகழ்த்த இருக்கிறார்.

அன்று  23  மைல்கள் ( 1,23,0000 அடிகள் அல்லது  37  கிலோமீட்டர்கள்   உயரத்தில் இருந்து குதிககும் போது,  முதல் 5  நிமிடங்கள்  பாராசூட் உதவியின்றி, 30  வினாடிகள்  ஒலியின் வேகத்தை மிஞ்சும் வண்ணம்  கீழே விழுவார் .

பூமியில் இருந்து, ஒரு மைல் தூரத்தில்(1500 மீட்டர்கள் )   இருக்கும் போது ,  பாராசூட்டை இயக்கி 10 நிமிடத்தில், பூமிக்கு வந்து சேருவார்.  இதற்கு முந்தைய சாதனை, அமெரிக்க விமானப் படை தளபதி ஒரு பலூனில் இருந்து,    1,02,800 அடிகள்,  அதாவது 19.47 மைல்கள்  31 கிலோமீட்டர்கள்
உயரத்தில் இருந்து குதித்ததே.

இந்த குதிப்பின் மூலம் புதிய சாதனை ஏற்படுத்துவார் பெலிக்ஸ். அவருக்கு நமது வாழ்த்துக்கள்!
                                             
                     
                          
                    

1 comments:

நானும் வாழ்த்துகிறேன்

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More