L I C - ஜீவன் மித்ரா...(உங்களுக்காக நாங்கள்)


ஜீவன் மித்ரா (இரு & மும்மடங்கு) பாதுகாப்பு பாலிசிகள் 
          (Double & Triple Cover)          

JEEVAN MITRA POLICES Table No:88 & 133

ஜீவன் மித்ரா பாலிசி என்பது குறைந்த பிரிமியத்தில் இருமடங்கு மற்றும் மும்மடங்கு பாதுகாப்பு கொடுத்து,ஒரு குறிப்பிட்ட காலம் வரை எண்டோமெண்ட் பாலிசி போன்று பிரிமியம் செலுத்தி பாலிசி முதிர்வு பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.இப்பாலிசி விற்பனை பிரதிநிதிகள், அடிக்கடி பயணம் செய்பவர்கள், வாகன ஓட்டுநர்கள், நிலையான வருமானத்தை பெறக்கூடடிய அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் எடுத்து பயன் பெறக்கூடிய வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

இதன் சிறப்புகள்


  • மும்மடங்குப் பாதுகாப்பு...
  • குறைந்த செலவில் அதிக பாதுகாப்பு...
  • கடன் வசதி உண்டு...
  • விபத்துக் காப்பும் உண்டு...
  • வீட்டுக் கடனுக்கு ஈடாக கொடுக்க உகந்த பாலிசி...
  • வயது - 18 முதல் 50 வரை...
  • காலம் - 15 முதல் 30 வரை...

பாலிசி  முதிர்வு  (Maturity)
    காப்புத்தொகை,போனஸ்,இறுதிக்கூடுதல் போனஸ் சேர்த்து பாலிசி முதிர்வு வழங்கப்படும்.

திட்டத்தின்  நன்மைகள்

  • பாலிசி எடுத்த 3 ஆண்டுகளூக்கு பின்பு போன்ஸ் சேர்த்து பாலிசிக்கடன் பெற்றுக் கொள்ளலாம். பாலிசிக் கடனுக்கு 9% வீதம் 6 மாதத்திற்கு ஒரு முறை வட்டி செலுத்த வேண்டும்.
  • விபத்துக் காப்பீட்டு இரட்டிப்பு நன்மை வழங்கப்படும்.
  • பின்தேதியிட்டு பாலிசி பெற்றுக்கொள்ளலாம்.
  • பாலிசிக்காலம் 15 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் உள்ள பாலிசிகளூக்கு இறுதிக்கூடுதல் போனஸ் வழங்கப்படும்.
  • குறைந்த பிரிமியத்தில் அதிக பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
  • முதலீடு செய்யும் பிரிமியத்திற்கு  Rs..1,00,000/வரை Sec.80C-படி வருமானவரி விலக்கு பெற்றுக் கொள்ளலாம்.
  • பாலிசி முதிர்வு,இறப்பு உரிமம் போன்றவற்றிற்கு Sec.10(10D)-படி வருமானவரி கிடையாது.
  • LIC-HFL-வீட்டு வசதிக் கடனுக்கு ஈடாக கொடுக்க Table;88-ல் கடன் தொகையில் 1/2 மடங்கு காப்புத்தொகையும், Table;133-ல் 1/3 (மூன்றில் ஒரு) மடங்கு காப்புத்தொகையும் பாலிசியாக எடுத்தால் போதுமானது.
  • பாலிசியை சரண்டர் செய்து கொள்ளலாம்.

இன்சூரன்ஸ்  பாதுகாப்பு

1.இயற்கை பாதுகாப்பு

பிரிமியம் தொடர்ந்து செலுத்திக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக இயற்கை  இறப்பு நேர்ந்தால் Table 88-ல் இரண்டு மடங்கு காப்புத்தொகையும், Table 133-ல் மூன்று மடங்கு காப்புத்தொகையும், அதுவரை சேர்ந்துள்ள போனஸ், இறுதிக்கூடுதல் போனஸ் சேர்த்து இறப்பு உரிமம் வழங்கப்படும்.

2.விபத்துபாதுகாப்பு 

எதிர்பாராதவிதமாக விபத்து இறப்பு நேர்ந்தால் Table 88--ல் மூன்று மடங்கு காப்புத்தொகையும், Table 133- ல் ;நான்கு மடங்கு காப்புத்தொகையும்,அதுவரை சேர்ந்துள்ள போறஸ்,இறுதிக்கூடுதல் போனஸ் சேர்த்து விபத்து இறப்பு உரிமம் வழங்கப்படும்.

3.நிரந்தர திறன் இழப்பீட்டு நன்மை வழங்கப்படும்.


நிபந்தனைகள்  (Conditions)

1.வயது (Age):
  • 18  (பூர்த்தி) முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கு பாலிசி வழங்கலாம்.
  • அதிகபட்ச பாலிசி முதிர்வு வயது 70 (NBD)) ஆகும்.

2.வயது சான்று (Age Proof):

Std-Age Proof & Non-Std,Age Proof -1(NASP-1) ஏற்றுகு கொள்ளப்படும்.
NASP-1,,நிபந்தனைகள்
  • நுழைவு 18(பூர்த்தி) மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள்.
  • அதிகபட்ச பாலிசிக்காலம் 25 ஆண்டுகள் ஆகும்.
  • அதிகபட்ச காப்பீட்டு  Rs.50,000/- வரை

Table No.43,52,58,88,89,103,106,107,108,133,160,164,168 ஆகிய எல்லா திட்டங்களையும் சேர்த்து பாலிசி வழங்கலாம்.

3.தவனை முறை மற்றும் தள்ளுபடி (Mode & Rebate):
  • எல்லா தவனை முறைகளிலும் பாலிசி வழங்கலாம்.
  • அட்டவனை பிரிமியத்தில் ஆண்டுக்கு 3% அரையாண்டுக்கு 1.5% தள்ளுபடியும், மாதத்தவணைக்கு கூடுதலாக 5% செலுத்த வேண்டும்.
4.பாலிசிக் காலம் (Policy Term):
  • 15 முதல் 30 ஆண்டுகள் வரை பாலிசி வழங்கலாம்.
5.காப்புத்தொகை மற்றும் தள்ளுபடி(Sum Assured & Rebate):
  • குறைந்தளவு காப்புத்தொகை Rs.50,0000 முதல் அதிகளவு எவ்வளவு வேண்டுமானாலும் பாலிசி வழங்கலாம்.

      **காப்புத் தொகை தள்ளுபடி (Rebate)**
  • Rs.50,0000வரை காப்புத்தொகை தள்ளுபடி கிடையாது.
  • Rs.55,000 முதல் 1,00,000 வரை Re.1/- ம், Rs.1,05,000 மற்றும் அதற்கு மேல் Rs.2/-ம் அட்டவனை பிரிமியத்திலிருந்து காப்புத்தொகை தள்ளுபடி வழங்கப்படும்.

6.விபத்து காப்பீடு (Accident Benefit)
  • விபத்துக் காப்பீடு பயனுக்கு Rs.1/- அட்டவணை பிரிமியத்துடன் கூடுதலாக செலுத்த வேண்டும்.பாலிசிதாராரின் 70வயது வரை LIC,தனியார் நிறுவனங்களில் உள்ள பாலிசிகள் மற்றும் குழுக்காப்பீடு உள்பட எல்லா பாலிசிகளையும் சேர்த்து காப்புத்தொகை Rs.50 லட்சம் வரை விபத்துக் காப்பீடு வழங்கப்படும்.

7.பின்தேதியிட்டு  பாலிசி வழங்குதல் (Dating Back)
  • பின்தேதியிட்டு பாலிசி வழங்க 8% வட்டி ஆண்டுக்கு செலுத்த வேண்டும்.Lean Month -ல் (ஏப்ரல்,மே,ஜூலை,ஆகஸ்டு) பின்தேதியிடும் பாலிசிகளுக்கும் முதல் 3 மாதத்திற்கும், மற்ற மாதங்களில் 30 நாட்கள் வரை பின் தேதியிடும் பாலிசிகளுக்கு முதல் தவணை பிரிமியத்திற்கு வட்டி கிடையாது.
8.காப்புத் தொகை கணக்கீடு (Actual Sum ssured):
  • ஸ்பெஷல் மெடிக்கல்,MHR-போன்றவற்றிற்கு அடிப்படை காப்புத்தொகையைப் போல் Table;88-க்கு இரு மடங்கும், Table.133-க்கு மூன்று மடங்கும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

9.NON - MEDICAL (Special) SCHEME :
  • 18 (பூர்த்தி) முதல் 35 வயது 5 மாதம் 29 நாட்கள் வரை SUC--கணக்கீடு செய்து,மொத்தக்காப்பீடு Rs. 15,00,000 வரை மெடிக்கல் செய்யாமல் பாலிசி வழங்கலாம்.
  • 36 (NBD) முதல் 45 வயது 5 மாதம் 29 நாட்கள் வரை SUC--கணக்கீடு செய்து,மொத்தக்காப்பீடு Rs.10,00,000 வரை மெடிக்கல் செய்யாமல் பாலிசி வழங்கலாம்.
  • 46 (NBD) முதல் 50 வயது 5 மாதம் 29 நாட்கள் வரை SUC--கணக்கீடு செய்து, மொத்தக்காப்பீடு  Rs..4,00,000 வரை மெடிக்கல் செய்யாமல் பாலிசி வழங்கலாம்.

''நெருக்கடி நோய் (Critical Illness)-க்கு மெடிக்கல் செய்ய வேண்டும்

இது எழுதப்படிக்க தெரிந்த ஆண் /SSLC - தேர்ச்சி பெற்ற பெண் இருபாலருக்கும் பொதுவானது.''


10.NON - MEDICAL GENERAL  (Professionals & Employed):
     Self - Employed Professionals Employed 
  • 18 (பூர்த்தி) முதல் 35 வயது 5 மாதம்  29 நாட்கள் வரை  SUC - கணக்கீடு செய்து மொத்தக்காப்பீடு Rs.12,00,000 வரை மெடிக்கல் செய்யாமல் பாலிசி வழங்கலாம்.
  • 36 (NBD) முதல் 45 வயது 5 மாதம் 29 நாட்கள் வரை SUC--கணக்கீடு செய்து,மொத்தக்காப்பீடு Rs .8,00,000 வரை மெடிக்கல் செய்யாமல் பாலிசி வழங்கலாம்.
  • 46 (NBD) முதல் 50 வயது 5 மாதம் 29 நாட்கள் வரை SUC--கணக்கீடு செய்து, மொத்தக்காப்பீடு  Rs..4,00,000 வரை மெடிக்கல் செய்யாமல் பாலிசி வழங்கலாம்.
நெருக்கடி நோய் (Critical Illness)-நன்மைக்கு மெடிக்கல் செய்ய வேண்டும்:

இது ஆண் / பெண் இருபாலருக்கும் பொதுவானது.

11.NMG--அடிப்படையில் பாலிசி வழங்கப்படமாட்டாது.

12.பெண்கள்
  • Cat.I & II --பெண்களுக்கு மட்டுமே இப்பாலிசி வழங்கப்படும்.
  • NMS - தகுதி பெற்ற பெண்கள் இரண்டு  Caesarian Operation- வரை செய்திருந்தாலும்  மெடிக்கல் செய்யாமல் பாலிசி வழங்கலாம்.
  • Category - II மெடிக்கல் செய்துதான் பாலிசி வழங்கப்படும்.
  • Caesarian Operation-செய்த பெண்கள் அனைவரும்  Caesarian Operation- நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • கருவூற்ற பெண்களுக்கு பாலிசி வழங்க முடியாது.
(மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள - திரு. வெங்கடாச்சலம் - 9842775572)

நன்றி...

என்றும் உங்கள் வானில் வளர்பிறையாய்...
அழகுநிலா...




    

2 comments:

LIC பற்றி தெரிந்து வருகிறேன் நன்றி சகோ........

விரிவான விளக்கத்திற்கு நன்றி...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More