LIC - முழு ஆயுள் காப்பீட்டுத் திட்டம் - உங்களுக்காக...


     முழு ஆயுள் பாலிசி

(WHOLE LIFE POLICY )

மிகக் குறைவான பிரிமியத்தில் அதிகமான இன்சுரன்ஸ் பாதுகாப்பும், அதிகமான போனஸும் வழங்கப்படும் பாலிசி முழுஆயுள் பாலிசி ஆகும்.பாலிசிதாராரின் வாழ்வுக்குப்பின் குடும்பத்தின் நிதிநிலையை நிலைநிறுத்தும் வகையில் பாலிசி அமைந்துள்ளது.மேலும் மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பாலிசிதாராரின் 80 வயது / பாலிசி எடுத்து 35 ஆண்டுகள்  இவை இரண்டில் எது அதிகமோ, அதுவரை பிரிமியம் செலுத்தினால் போதுமானது என்ற சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

                                               

   

பாலிசி முதிர்வு (Maturity)

மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பாலிசிதாராரின் 80 வயது அல்லது 40 ஆண்டுகள் பாலிசி எடுத்து முடிவடைந்திருக்க வேண்டும்.இதில் எது அதிகமோ அதுவே பாலிசி முதிர்வு (Maturity)ஆகும். பாலிசி முதிர்வின் போது காப்புத்தொகை, போனஸ், இறுதிக்கூடுதல் போனஸ் சேர்த்து பாலிசி முதிர்வு வழங்கப்படும்.

திட்டத்தின் நன்மைகள்

  1. பாலிசி எடுத்து 3 ஆண்டுகள் முடிவடைந்தவுடன் போனஸ் சேர்த்து            பாலிசிக்கடன் பெற்றுக் கொள்ளலாம். பாலிசிக் கடனுக்கு 9% வீதம், 6 மாதங்களுக்கு ஒருமுறை வட்டி செலுத்த வேண்டும்.
  2. திட்டத்தின் சிறப்பம்சங்கள், மிகப்பெரிய முதிர்வுத்தொகை கிடைக்கும். பாலிசிதாராரின் 80 வயது / பாலிசி எடுத்து 40 ஆண்டுகள் வரை, எது பிறகோ அதுவரை இன்சுரன்ஸ் பாதுகாப்பும், போனஸும் வழங்கப்படும். மற்ற பாலிசிகளைவிட இந்த பாலிசிக்கு போனஸ் கூடுதலாக இருக்கும்.
  3. விபத்துக்காப்பீடு நன்மை வழங்கப்படும்.
  4. பின்தேதியிட்டு பாலிசி பெறும் வசதியுள்ளது.
  5. கூடுதல் போனஸ் வழங்கப்படும்.
  6. முதலீடு செய்யும் பிரிமியத்திற்கு Rs.1,00,000/- வரை Sec.80c-படி வருமானவரி விலக்கு பெற்றுக் கொள்ளலாம்.
  7. பாலிசிமுதிர்வு, இறப்பு உரிமம் போன்றவற்றிற்கு Sec.10(10D)-படி வருமானவரி கிடையாது.
  8. LIC-HFL-வீட்டு வசதிக் கடனுக்கு ஈடாக கொடுக்கலாம்.
  9. பாலிசியை சரண்டர் செய்து கொள்ளலாம்.

இன்சூரன்ஸ் பாதுகாப்பு

1.இயற்க்கை பாதுகாப்பு

பிரிமியம் தொடர்ந்து செலுத்திக்கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக இயற்கை இறப்பு நேர்ந்தால் காப்புத்தொகை, அதுவரை சேர்ந்துள்ள போனஸ்,இறுதிக்கூடுதல் போனஸ் சேர்த்து இறப்பு உரிமம் வழங்கப்படும்.

2.விபத்து பாதுகாப்பு

எதிர்பாராதவிதமாக விபத்து இறப்பு நேர்ந்தால் இரு மடங்கு காப்புத்தொகை,அதுவரை சேர்ந்துள்ள போனஸ்,இறுதிக்கூடுதல் போனஸ் சேர்த்து விபத்து இறப்பு உரிமம் வழங்கப்படும்.

3.நிரந்தர திறன் இழப்பீட்டு நன்மை உண்டு.


நிபந்தனைகள்  (Conditions)

1.வயது (Age)
  • 15  (பூர்த்தி) முதல் 60 (NBD)) வயது வரை பாலிசி வழங்கலாம்.
2.வயது சான்று (Age Proof)

  • Std-Age Proof & Non-Std,Age Proof -1(NASP-1) ஏற்றுக் கொள்ளப்படும்.


3.தவனை முறை மற்றும் தள்ளுபடி (Mode & Rebate):
  • எல்லா தவனை முறைகளிலும் பாலிசி வழங்கலாம்.
  • அட்டவனை பிரிமியத்தில் ஆண்டுக்கு 3% அரையாண்டுக்கு 1.5% தள்ளுபடியும், மாதத்தவணைக்கு 5%கூடுதலாக செலுத்த வேண்டும்.
4.பாலிசிக் காலம் (Policy Term):
  • 80 வயது /35 ஆண்டுகள் பிரிமியம் செலுத்துதல் இதில் எது அதிகமோ அதுவே பாலிசிக்காலமாகும். பாலிசி முதிர்வு வயது 80 அல்லது பாலிசி எடுத்து 40 ஆண்டுகள் இதில் எது பிறகோ அதுவே ஆகும். இது 1999-ஆம் ஆண்டு Year of Senior Citizensஅடிப்படையில் LIC-அளிக்கும் சலுகையாகும்.
5.காப்புத்தொகை மற்றும் தள்ளுபடி(Sum Assured & Rebate):
  • குறைந்தளவு காப்புத்தொகை Rs.50,0000 முதல் எவ்வளவு வேண்டுமானாலும்  பாலிசி வழங்கலாம்.

      **காப்புத் தொகை தள்ளுபடி (Rebate)**
  • Rs.50,0000வரை காப்புத்தொகை தள்ளுபடி கிடையாது.
  • Rs.55,000 முதல் 1,00,000 வரை Re.1/- ம், Rs.1,05,000 மற்றும் அதற்கு மேல் Rs.2/-ம் அட்டவனை பிரிமியத்திலிருந்து காப்புத்தொகை தள்ளுபடி வழங்கப்படும்.

6.விபத்துக்காப்பீடு (Accident Benefit)
  • விபத்துக்காப்பீடு பயனுக்கு Rs.1/- அட்டவணை பிரிமியத்துடன் கூடுதலாக  செலுத்த வேண்டும்.பாலிசிதாராரின் 70வயது வரை LIC,தனியார் நிறுவனங்களில் உள்ள பாலிசிகள் மற்றும் குழுக்காப்பீடு உட்பட எல்லா பாலிசிகளையும் சேர்த்து காப்புத்தொகை Rs.50 லட்சம் வரை விபத்துக் காப்பீடு வழங்கப்படும்.

7.பின்தேதியிட்டு  பாலிசி வழங்குதல் (Dating Back)
  • பின்தேதியிட்டு பாலிசி வழங்க 8% வட்டி ஆண்டுக்கு செலுத்த வேண்டும்.Lean Month -ல் பின்தேதியிடும் பாலிசிகளுக்கும் முதல் 3 மாதத்திற்கும், மற்ற மாதங்களில் 30 நாட்கள் வரை பின் தேதியிடும் பாலிசிகளுக்கு முதல் தவணை பிரிமியத்திற்கு வட்டி கிடையாது.
8.காப்புத் தொகை கணக்கீடு (Actual Sum ssured):
  • ஸ்பெஷல் மெடிக்கல்,MHR-போன்றவற்றிற்கு அடிப்படை காப்புத்தொகை மட்டும் கணக்கில் எடுக்க வேண்டும்.

9.NON - MEDICAL (Special) SCHEME :
  • 18 (பூர்த்தி) முதல் 35 வயது 5 மாதம் 29 நாட்கள் வரை SUC--கணக்கீடு செய்து,மொத்தக்காப்பீடு Rs. 15,00,000 வரை மெடிக்கல் செய்யாமல் பாலிசி வழங்கலாம்.
  • 36 (NBD) முதல் 45 வயது 5 மாதம் 29 நாட்கள் வரை SUC--கணக்கீடு செய்து,மொத்தக்காப்பீடு Rs.10,00,000 வரை மெடிக்கல் செய்யாமல் பாலிசி வழங்கலாம்.
  • 46 (NBD) முதல் 50 வயது 5 மாதம் 29 நாட்கள் வரை SUC--கணக்கீடு செய்து, மொத்தக்காப்பீடு  Rs..4,00,000 வரை மெடிக்கல் செய்யாமல் பாலிசி வழங்கலாம்.


(இது எழுதப்படிக்கத் தெரிந்த ஆண் / SSLC - தேர்ச்சி பெற்ற பெண் இருபாலருக்கும் பொதுவானது.)


10.NON - MEDICAL GENERAL  (Professionals & Employed):
     Self - Employed Professionals Employed 
  • 18 (பூர்த்தி) முதல் 35 வயது 5 மாதம்  29 நாட்கள் வரை  SUC - கணக்கீடு செய்து மொத்தக்காப்பீடு Rs.12,00,000 வரை மெடிக்கல் செய்யாமல் பாலிசி வழங்கலாம்.
  • 36 (NBD) முதல் 45 வயது 5 மாதம் 29 நாட்கள் வரை SUC--கணக்கீடு செய்து,மொத்தக்காப்பீடு Rs .8,00,000 வரை மெடிக்கல் செய்யாமல் பாலிசி வழங்கலாம்.
  • 46 (NBD) முதல் 50 வயது 5 மாதம் 29 நாட்கள் வரை SUC--கணக்கீடு செய்து, மொத்தக்காப்பீடு  Rs..4,00,000 வரை மெடிக்கல் செய்யாமல் பாலிசி வழங்கலாம்.

            (இது ஆண் / பெண் இருபாலருக்கும் பொதுவானது.)

11.NMG--அடிப்படையில் பாலிசி வழங்கப்படமாட்டாது.

12.பெண்கள்
  • எல்லா வகை பெண்களுக்கும் பாலிசி வழங்கலாம்.
  • NMS - தகுதி பெற்ற பெண்கள் இரண்டு  Caesarian Operation- வரை செய்திருந்தாலும்  மெடிக்கல் செய்யாமல் பாலிசி வழங்கலாம்.
  • Caesarian Operation-செய்த பெண்கள் அனைவரும்  Caesarian Operation- நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
(மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள - திரு. வெங்கடாச்சலம் - 9842775572)

நன்றி...

என்றும் உங்கள் வானில் வளர்பிறையாய்...
அழகுநிலா...




1 comments:

அற்புதம் தகவலுக்கு நன்றி...

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More