மொபைல் உலகம்: ஐ.ஓ.எஸ் (iOS)


அலைபேசிகளை (Mobile) இயக்க அவற்றில் அடிப்படையாக  நிறுவப்பட்டிருப்பது தான் மொபைல் செயலிகள் (Mobile Operating System). சுருக்கமாக மொபைல் ஓ.எஸ் (Mobile Os).  செயலி என்பது  ஒரு மென்பொருள் அல்லது சின்ன சின்ன மென்பொருளின் கூட்டமைவுதான். பெரும்பாலான  ஸ்மார்ட் போன்கள், டேப்லெட் போன்றவற்றில் செயலியே  மிக முக்கியமானது.

இந்த பதிவில் ஐ.ஓ.எஸ் (iOs) செயலியை பற்றி காண்போம் வாருங்கள்.
ஐ.ஓ.எஸ்(iOs).

ஐபோன் ஆபரேட்டிங் சிஸ்டம் (iPhone Operating System) என்று முதலில் பெயரிடப்பட்டு பின்னர் iOs என்றானது . ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனுக்காகத் தயாரிக்கப்பட்டு பின்னர் ஐ.பேட் டேப்லெட் ஆப்பிள் டி‌வி என இதன் பயன்பாடு விரிவடைந்ததால் இதை iOs என்று சுருக்கினார்கள்.இது ஆப்பிள் நிறுவனத்தின் டிரேட் மார்க் செயலி.

மெல்லிய தொடுதல். திரையின் மீதான விரல் இயக்கங்கள் போன்றவற்றின் அடிப்படையில் செயல்படுமாறு செயலி இது. தொடுதல், மெலிதான தட்டுதல் போன்றவையெல்லாம் இதன் திரவ இடைமுகக் கட்டுப்பாட்டகம் (interface) மூலம் செயலியை இயக்குகிறது என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.

ஆப்பிள் நிறுவனப் பொருட்கள் தவிர மற்றவற்றிக்கு இன்னும் ஆப்பிள் நிறுவனம் இந்த செயலியை பயன்படுத்த அனுமதிக்கவில்லை. புதுப்புது வடிவங்களை தயாரிப்புகளின் மாற்றத்துக்கு ஏற்ப உருவாக்கும் இந்த செயலியின் தற்போதைய வடிவம் iOS6.0.

மீண்டும் அடுத்த பதிவில் இன்னொரு  மொபைல் செயலியை  பற்றி காண்போம் நண்பர்களே...!
நன்றி..


1 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More